

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) 2510 ஜூனியர் டெலிகாம் அதிகாரிகள் (Junior Telecom Officer(JTO)) பணியிடங்களை நிரப்புகிறது.
தேவையான தகுதிகள்
இந்தப் பணிக்குப் பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. (எலக்ட்ரானிக்ஸ்) அல்லது எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள், 2017 ஜனவரி 1 முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் ‘கேட்- 2017’ தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2017
சம்பள விவரம்
உதவி டெலிகாம் அதிகாரி பணியில் சேருவோருக்கு ரூ.16,400 முதல் 40,500 வரை ஊதியம் வழங்கப்படும். இது தவிர அரசு விதிமுறைப்படி டி.ஏ., ஹெச்.ஆர்.ஏ. உள்ளிட்ட இதர சலுகைகளும் உண்டு.
மேலும் விவரம் அறிய:
http://www.gate.iitr.ernet.in/
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://www.externalexam.bsnl.co.in/