பொங்கல் ‘பறவை கணக்கெடுப்பு 2023’ - நீங்களும் பங்கேற்கலாம்

பொங்கல் ‘பறவை கணக்கெடுப்பு 2023’ - நீங்களும் பங்கேற்கலாம்

Published on

தமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை போன்றவற்றைக் கண்காணிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15 முதல் 18 வரை பொங்கல் விடுமுறை நாள்களில் ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு’ நடைபெறுகிறது. இந்த ஆண்டும் அதே நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

உங்கள் வீட்டைச் சுற்றியோ, அருகிலுள்ள பூங்காவிலோ, பறவைகள் அதிகம் கூடக்கூடிய இடங்களிலோ குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பறவைப் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். பிறகு அந்தப் பட்டியலை www.ebird.org/indiaஇல் பதிவேற்ற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: shorturl.at/doW14

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in