

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் உலகில் 250 கோடி மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 489 கோடிப் பேர் பயன்படுத்தி வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முதன்மையாக ஃபேஸ்புக் இருந்து வருகிறது. அது பற்றிய சில சுவையான புள்ளிவிவரங்கள்.
# சராசரியாக இருவர் ஒரு மாதத்தில் 7 விதமான சமூக வலைத்தளங்ளைப் பயன்படுத்துகிறார்.
# சராசரியாக ஒரு தனிநபர் 2.29 மணிநேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர்.
# சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஃபேஸ்புக்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகில் ஃபேஸ்புக்கை 295.8 கோடிப் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
# உலகில் 18-24 வயதுக்கு உட்பட்டவர்களில் 48.9 கோடிப் பேரும்; 25-34 வயதுக்கு உட்பட்டவர்களில் 64.8 கோடிப் பேரும் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
# ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களில் 81 சதவீதம் பேர் கைபேசி வழியாகவே அதை அணுகுகிறார்கள்.
# ஃபேஸ்புக்கில் உள்ள கணக்குகளில் 16 சதவீதம் போலியானவை.
# 20 கோடிக்கும் அதிகமாக பிசினஸ் கணக்குகள் ஃபேஸ்புக்கில் உள்ளன.
# சராசரியாக 193 கோடிப் பேர் ஃபேஸ்புக்கில் தினமும் நுழைகிறார்கள்.
# உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மூன்றாவது இணையதளமாக ஃபேஸ்புக் உள்ளது.
# இந்தியாவில் 46.7 கோடிப் பேர் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறார்கள். இதில் ஃபேஸ்புக்கில் மட்டும் 32.97 கோடிப் பேர் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
# 97 சதவீத இந்தியர்கள் கைபேசி போன் வழியாக இணையத்தை அணுகுகிறார்கள்.