Published : 06 Dec 2016 11:51 AM
Last Updated : 06 Dec 2016 11:51 AM

வேலை வேண்டுமா? - அறநிலையத் துறையில் வேலை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயல் அலுவலர் நிலை III-ல் 29 காலிப்பணியிடங்களும் செயல் அலுவலர் நிலை IV-ல் 49 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் நவம்பர் 25 முதல் தயார்நிலையில் உள்ளன.

வயதுத் தகுதி

செயல் அலுவலர் நிலை III-க்கு: 01.07.2016 அன்று குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., கணவனை இழந்தோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. இந்தப் பிரிவினரைத் தவிர பிறர் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்.

செயல் அலுவலர் நிலை IV-க்கு: 01.07.2016 அன்று குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., கணவனை இழந்தவர்கள் ஆகியோருக்கு உச்சபட்ச வயது 40, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு உச்சபட்ச வயது 37. இந்தப் பிரிவினரைத் தவிர பிறர் 35 வயதுக்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

செயல் அலுவலர் நிலை III-க்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் பாடங்களில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான புலமை பெற்றிருக்க வேண்டும். செயல் அலுவலர் நிலை IV-க்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்

நிரந்தரப் பதிவு (One time registration) செய்திருப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பிறர் தேர்வுக் கட்டணத்துடன் நிரந்தரப் பதிவுக்கு ரூ.50 சேர்த்துச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி. ஆகிய பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கணவனை இழந்தவர்களுக்கும் கட்டண விலக்கு உண்டு. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி சல்லான் மூலமாகவோ கட்டலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.net / www.tnpscexams.in என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு 2017 ஏப்ரல் 29 அன்று சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட 32 நகரங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.12.2016.

எழுத்துத் தேர்வு : 29.04.2017 (செயல் அலுவலர் நிலை III-க்கு) 30.04.2017 (செயல் அலுவலர் நிலை IV-க்கு)

கூடுதல் விவரங்களுக்கு: >http://www.tnpsc.gov.in/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x