டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 38: பொது தமிழ்

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 38: பொது தமிழ்

Published on

பொது தமிழ்

94. கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்

அ) தேம்பாவணி ஆ) திலகர்புராணம்

இ) ஞானோபதேசம் ஈ) பரமார்த்த குருகதை

95. அநபாயச்சோழனின் தலைமை அமைச்சர்

அ) சேக்கிழார் ஆ) நாவுக்கரசர்

இ) ஞானசம்பந்தன் ஈ) அப்பூதியடிகள்

96. இராமானுஜன்தான் இந்த 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை என கூறியவர்.

அ) பேராசிரியர் சூலியன் கக்சுலி

ஆ) பேரா. ஈ.டி.பெல் இ) காந்தி ஈ) லார்ட்மெண்ட்

97. மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இறைவன்

அ) திருவாதவூர் இறைவன்

ஆ) திருப்பெருந்துறை இறைவன்

இ) திருவையாறு இறைவன்

ஈ) திருமலை இறைவன்

98. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

அ) புறநானூறு ஆ) திருக்குறள்

இ) திருபாவை ஈ) திருவாசகம்

99. மூந்நீர் என்பது

அ) கடல் ஆ) ஏரி இ) சுனை ஈ) ஆறு

100. மண்திணித்த நிலனும் .... ஐம்பெரும்பூதத்து இயற்கை போல் .... இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) அகநானூறு ஆ) நன்னூல்

இ) தொல்காப்பியம் ஈ) புறநானூறு

101. “அண்ணம் நுனிநா வருட” பிறக்கும் எழுத்துக்கள்

அ) த, ந ஆ) ப, ம இ) ர, ழ ஈ) ட, ண

102. “பேறு, கேடு” - இலக்கணக் குறிப்பறிக.

அ) வினையாலனையும் பெயர்

ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

இ) முதனிலைத் தொழிற்பெயர்

ஈ) பண்புப் பெயர்

103. ஒரூஉ மோனை - ஒன்றி வரும் சீர்கள்

அ) 1, 3 ஆ) 1, 2, 3 இ) 1, 2, 4 ஈ) 1, 4

104. நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் - அணி தேர்க:

அ) பொருள் பின்வரு நிலையணி

ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி

இ) சொல் பின் வரு நிலையணி

ஈ) இல் பொருள் உவமையணி

105. எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றிய செய்தி உள்ளதா? என வினவுவது

அ) அறிவினா ஆ) அறியாவினா

இ) ஐயவினா ஈ) ஏவல் வினா

106. சென்னைக்கு வழி யாது? - வினாவுக்குரிய விடை வகை

அ) மறைவிடை ஆ) நேர்விடை

இ) சுட்டுவிடை ஈ) ஏவல் விடை

107. “மைஞ்சு”என்ற சொல் எவ்வகைப் போலி

அ) கடைப்போலி ஆ) முற்றுப்போலி

இ) இடைப்போலி ஈ) முதற்போலி

108. சரியான பண்புப் பெயர் விகுதிகளை தெரிவு செய்க.

அ) அர், ஆர். ஆ) தல், அல் இ) அ, து ஈ) ஐ, சி

109. இறந்தார் இறந்தார் அணையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - பொருள்கோள் தேர்க

அ) அளைமறிபாப்புப் பொருள்கோள்

ஆ) தாப்பிசைப் பொருள்கோள்

இ) அடிமறிமாற்றுப் பொருள்கோள்

ஈ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்

110. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக - மோனை நயம் தேர்க:

அ) 1,3,4 ஆ) 1,2,4 இ) 1,2,3,4 ஈ) 1,2,3

111. ஏற்றுமின் விளக்கை இருளகலவே ஏற்று மின்விளக்கை இருளகலவே - அணியைத் தேர்க

அ) செம்மொழி சிலேடை ஆ) பிரிமொழிச் சிலேடை

இ) இரட்டைக் கிளவி ஈ) இரட்டுற மொழிதல்

112. “பொற்சிலை”என்பது எவ்வகைப் புணர்ச்சி

அ) மெய்யீற்றுப் புணர்ச்சி ஆ) இயல்பு புணர்ச்சி

இ) உயிரீற்றுப் புணர்ச்சி ஈ) விகாரப் புணர்ச்சி

113. இது செவ்வாயா? என்று வினவியபோது உடம்பு நொந்தது எனக் கூறியது எவ்வகை விடை

அ) உறுவது கூறல் ஆ) உற்றது உரைத்தல்

இ) வினா எதிர் வினாதல் ஈ) மறைவிடை

114. வேற்றுமை உருபுகளின் எண்ணிக்கை....

அ) ஆறு ஆ) நான்கு இ) எட்டு ஈ) ஐந்து

115. வெண்பாவின் ஓசை

அ) துள்ளலோசை ஆ) தூங்கலோசை

இ) அகவலோசை ஈ) செப்பலோசை

116. “விற்புருவம்” - இலக்கணக் குறிப்பு அறிக

அ) உருவகம் ஆ) இல்பொருள் உவமை அணி

இ) உவமைத்தொகை ஈ) தற்குறிப்பேற்றணி

117. பந்தாட்டம் என்பது எவ்வகைப் புணர்ச்சி தேர்க:

அ) குற்றியிலகரப் புணர்ச்சி ஆ) முற்றியலுகரப் புணர்ச்சி

இ) குற்றியலுகரப் புணர்ச்சி ஈ) மெய்யீற்றுப் புணர்ச்சி

118. தெரிநிலை வினைமுற்று....

அ) காலத்தை வெளிப்படையாகக் காட்டும்

ஆ) காலத்தை குறிப்பாகக் காட்டும்

இ) காலத்தைக் காட்டாது ஈ) காலத்தை ஏற்காது

119. ஒரு தரவு, மூன்று தாழிசை, தனிச்சொல், சுரிதகம் பெற்றுவருவது

அ) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

ஆ) அப்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

இ) வண்ண ஒத்தாழிசைக் கலிப்பா

ஈ) கொச்சகக் கலிப்பா

120. “முத்துப்பல்” - இலக்கணக் குறிப்பு அறிக

அ) வேற்றுமைத்தொகை ஆ) பண்புத்தொகை

இ) வினைத்தொகை ஈ) உவமைத் தொகை

121. “மலரடி” என்பது எவ்வகைப் புணர்ச்சி தேர்க

அ) உயிரீற்றுப் புணர்ச்சி ஆ) மெய்யீற்றுப் புணர்ச்சி

இ) குற்றியலுகரப் புணர்ச்சி ஈ) குற்றியலிகரப் புணர்ச்சி

122. சித்திரையில் பிறந்தவன் - இத்தொடரில் அமைந்துள்ள இலக்கணக் குறிப்பு யாது?

அ) வினைமுற்று ஆ) தெரிநிலை வினைமுற்று

இ) குறிப்பு வினைமுற்று ஈ) வினைச்சொல்

123. கந்தன் கடுமையாக உழைத்தான்; அதனால் தேர்வில் வெற்றிப் பெற்றான்.

அ) செய்வினைத் தொடர் ஆ) கலவைத் தொடர்

இ) தொடர்நிலைத் தொடர் ஈ) தனிநிலைத் தொடர்

124. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடுவாழ் வார் - பொருள்கோள் தேர்க

அ) மொழிமாற்றுப் பொருள்கோள்

ஆ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஈ) நிரல் நிறைப் பொருள்கோள்

125. சிற்றோடை என்பது எவ்வகைப் புணர்ச்சி தேர்க

அ) மெய்யீற்றுப் புணர்ச்சி ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி

இ) பண்புப் பெயர் புணர்ச்சி ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி

126. நல்ல மாணவன் - இத்தொடரில் நல்ல என்பது

அ) தெரிநிலைப் பெயரெச்சம் ஆ) பெயரெச்சம்

இ) எச்சம் ஈ) குறிப்புப் பெயரெச்சம்

127. தத்துவப் பாடல்கள் கவியரசு கண்ணதாசனால் பாடப்பட்டது - எவ்வகை வாக்கியம்?

அ) பிறவினைத் தொடர் ஆ) தன்வினைத் தொடர்

இ) செயப்பாட்டு வினைத்தொடர்

ஈ) செய்வினைத்தொடர்

128. அப்பம் - இச்சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு

அ) வேற்று நிலை மெய்ம் மயக்கம்

ஆ) தன்நிலை மெய்ம் மயக்கம்

இ) உடனிலை மெய்ம்மயக்கம்

ஈ) சார்பு நிலை மெய்ம் மயக்கம்

129. “படித்துத் தேறினாள்” - எச்சத்தைத் தேர்க

அ) முற்றெச்சம் ஆ) தெரிநிலை பெயரெச்சம்

இ) குறிப்பு பெயரெச்சம் ஈ) வினையெச்சம்

130. “வில்லை உடைத்தான்” இலக்கணக் குறிப்பறிக

அ) இரண்டாம் வேற்றுமை ஆ) ஐந்தாம் வேற்றுமை

இ) ஆறாம் வேற்றுமை ஈ) மூன்றாம் வேற்றுமை

131. வினைச் சொற்களின் எண்ணிக்கைத் தேர்க:

அ) நான்கு ஆ) எட்டு இ) இரண்டு ஈ) ஆறு

132. “பைங்கூழ்” இலக்கணக் குறிப்பறிக.

அ) வினைத்தொகை ஆ) உவமைத் தொகை

இ) பண்புத்தொகை ஈ) அன்மொழித்தொகை

133. “கந்தன் பாடம் படித்தான்” - இத்தொடரில் படித்

தான் என்ற சொல் குறிக்கும் வினை.....

அ) பிறவினை ஆ) தன்வினை

இ) உடன்பாட்டு வினை ஈ) செய்வினை

134. “வெடிகுண்டு” இலக்கணக் குறிப்பறிக.

அ) வேற்றுமைத் தொகை ஆ) உம்மைத் தொகை

இ) உவமைத்தொகை ஈ) வினைத்தொகை

135. “தும்பி, வண்டு” - எவ்வகையைச் சார்ந்த உயிர்

அ) ஓர் அறிவு உயிர் ஆ) மூவறிவு உயிர்

இ) ஐந்தறிவு உயிர் ஈ) நாலறிவு உயிர்

136. A) அப்பம் - 1. பறி காய்கறி - 2. தூற்று

C) இலை - 3. தின் D) நெல் - 4. அரி

A B C D

அ) 3 1 2 4

ஆ) 2 4 3 1

இ) 2 1 4 3

ஈ) 3 4 1 2

137. “தாய் தந்தை” இலக்கணக் குறிப்பறிக.

அ) பண்புத்தொகை ஆ) உம்மைத்தொகை

இ) வினைத்தொகை ஈ) அன்மொழித் தொகை

138. “தத்தை”- திரிசொல்லின் வகையறிக

அ) ஒரு பொருள் குறித்த பல பெயர் திரிசொல்

ஆ) பல பொருளையும் குறிக்கும் ஒரு பெயர்த் திரிசொல்

இ) பல பொருள் குறித்த ஒரு வினை திரிசொல்

ஈ) பல பொருள் குறித்த ஒரு இடைத் திரிசொல்

139. A) நெய்தல் - 1. மலையும், மலைசார்ந்த இடம்

முல்லை - 2. வயலும், வயல் சார்ந்த இடம்

C) குறிஞ்சி - 3. கடலும், கடல் சார்ந்த இடம்

D) மருதம் - 4. காடும், காடு சார்ந்த இடம்

A B C D

அ) 3 1 2 4

ஆ) 2 4 1 3

இ) 2 1 4 3

ஈ) 3 4 1 2

140. “பொற்றொடி வந்தாள்” இலக்கணக் குறிப்பறிக.

அ) வேற்றுமைத்தொகை ஆ) பண்புத்தொகை

இ) அன்மொழித்தொகை ஈ) வினைத்தொகை

141. பகுபத இலக்கணப்படி பிரித்து எழுதுக : "ஆதிரையான்"

அ) ஆதிரை + ஆன் ஆ) ஆதிரை + யான்

இ) ஆதிரை+ய்+ஆன் ஈ) ஆதிர + ய் + யான்

142. “வேலவா.. வா” - எவ்வகை தொடர் தேர்க:

அ) வினையெச்சத்தொடர் ஆ) பெயரெச்சத்தொடர்

இ) விளித்தொடர் ஈ) எழுவாய்த்தொடர்

143. எதிர்சொல் தருக: ’வறுமை’

அ) திண்மை ஆ) உண்மை இ) நொய்மை ஈ) வளமை

144. A) கூகை - 1. முழங்கும் குதிரை - 2. குழறும்

C) சிங்கம் - 3. ஊளையிடும் D) நரி - 4. கனைக்கும்

A B C D

அ) 3 1 2 4

ஆ) 2 4 1 3

இ) 2 1 4 3

ஈ) 3 4 2 1

145. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :

அ) அவள் ஆ) மகள் இ) இவள் ஈ) உவள்

146. கூலிக்கு வேலை - எவ்வகை வேற்றுமை உருபு

அ) ஆறாம் வேற்றுமை உருபு

ஆ) மூன்றாம் வேற்றுமை உருபு

இ) நான்காம் வேற்றுமை உருபு

ஈ) ஆறாம் வேற்றுமை உருபு

147. ‘உண்ணாநின்றான்’ - வேர்ச்சொல் அறிக

அ) உண்ணா ஆ) உண்ண இ) உண் ஈ) உண்டு

விடைகள்: 94. அ, 95. அ, 96. அ, 97. ஆ, 98. ஈ, 99. அ, 100. ஈ. 101. இ, 102. ஆ, 103. ஈ, 104. ஆ, 105. ஆ, 106. இ,107. ஈ, 108. ஈ, 109. ஆ, 110. இ, 111. ஆ, 112. ஈ, 113. ஆ,114. அ, 115. ஈ, 116. இ, 117. இ, 118. அ, 119. அ, 120. ஈ, 121. ஆ, 122. இ, 123. இ, 124. ஆ, 125. இ, 126. ஈ, 127. இ,128. இ, 129. ஈ, 130. அ, 131. இ, 132. இ, 133. ஆ, 134. ஈ,135. ஈ, 136. ஈ, 137. ஆ, 138. அ, 139. ஈ, 140. இ, 141. இ, 142. இ, 143. ஈ, 144. ஆ, 145. ஆ, 146. இ, 147. இ,

ச.வீரபாபு இயக்குநர், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, சென்னை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in