Last Updated : 15 Nov, 2016 11:17 AM

 

Published : 15 Nov 2016 11:17 AM
Last Updated : 15 Nov 2016 11:17 AM

ஆங்கிலம் அறிவோமே - 134: அவர் வாயைத் திறந்தாலே சிலேடைதான்!

கேட்டாரே ஒரு கேள்வி

> முடிச்சை அவிழ்ப்பதை எப்படிக் குறிப்பிட? Open the knot என்றா? அல்லது remove the knot என்றா?

Turned down, turned up, turn on, turn upon ஆகிய வார்த்தைகள் உணர்த்துவது என்ன? குழப்பம் கொஞ்சநஞ்சம் அல்ல.

இப்படி ஒரு கேள்வியை (தலையைப் பிடித்தபடி?) கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Turn down என்றால் ஒன்றை மறுப்பது. The Manager turned down our request for a holiday.

Turn up என்றால் வருதல். Why you did not turn up yesterday?

Turn on என்றால் சுற்றுதல். அதாவது rotate. The wheel turns on its axle.

Turn upon என்றால் ஒன்றை நம்பியிருப்பது. அதாவது depend upon. My success turns upon your help.



“டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் tds என்று எழுதியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம்?”

நீங்கள் டாக்டருக்குக் கொடுக்கும் fees-ல் வரியைக் கழித்துக்கொண்டு கொடுக்கலாம் (tax deducted at source) என்று அர்த்தமில்லை. Three times a day என்று பொருள்.

அடுத்ததாக “tds என்பதன் அர்த்தம் புரிகிறது. ஆனால் என் டாக்டர் ‘bid’ என்று பிரிஸ்கிரிப்ஷனில் குறிப்பிடுகிறாரே இதற்கு என்ன அர்த்தம்?” என்று ஒரு கேள்வி வரக் கூடும். ‘bid’ என்றால் two times a day என்று அர்த்தம். அதாவது அந்த மாத்திரையைத் தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட வேண்டும். இந்த அர்த்தம் கொண்ட லத்தீன் மொழி வார்த்தைகளான ter in die என்பதிலிருந்து வந்தது இது.



Polyglot என்றால் என்ன என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.

நண்பர்களே உங்களுக்கு bilingual என்ற வார்த்தை தெரிந்திருக்கும். இருமொழிகளை அறிந்தவர்களை bilingual என்பார்கள்.

Polyglot என்பவர் அதற்கும் மேலே. நிறைய மொழிகளை அறிந்தவர். குறைந்தபட்சம் ஆறு மொழிகளாவது அறிந்தவர்களை இப்படிச் சொல்வார்கள். கிரேக்க மொழியில் polyglottos என்றால் பல நாக்குகளைக் கொண்ட என்று பொருள். அதாவது mother tongue தவிரப் பல tongues-ஐ ‘நா’வசமாக்கிக் கொண்டவர்.

ஜியா ஃபசா என்பவருக்கு 59 மொழிகள் தெரியுமாம். நம் கவிஞர் பாரதியாருக்கும் நிறைய மொழிகள் தெரிந்திருந்தது. அவற்றில் மூன்று வெளிநாட்டு மொழிகள்.



கேட்டாரே ஒரு கேள்வியில் கேட்கப்பட்ட கேள்விக்கு Untie the knot என்பது பொருத்தமான விடை.



PUN என்றால் சிலேடைதானே?

ஆம். Pun என்பதை paronomasia என்றும் கூறுவார்கள். ஒரு வார்த்தையில் பல அர்த்தங்களையோ, ஒரே மாதிரி ஒலிக்கும் வார்த்தைகளையோ பயன்படுத்தி ஆச்சரியமூட்டும் அல்லது நகைச்சுவையான வாக்கியங்களை அமைப்பதுதான் pun.

“அத்தை வீட்டுக்குப் போகிறோமே பழம், பூ வாங்கிக்கொண்டு போகலாம்” என்பதற்கு, “பழம் பூ எதற்கு? புதுப் பூவே வாங்கிக்கலாமே” என்று கூறுவது சிலேடை. இதுதான் ஆங்கிலத்தில் pun. என்றாலும் வேறுவிதமான சில வார்த்தை விளையாட்டுகளைக் கூட ஆங்கிலத்தில் pun என்கிறார்கள்.

Every calendar days are numbered. Being struck by lightning is really a shocking experience! Santa’s helpers are known as subordinate clauses ஆகியவை எடுத்துக்காட்டுகள்.

கி.வா.ஜ.போல வாயைத் திறந்தாலே சிலேடை என்று வாழ்பவர்களை Punster என்பதுண்டு.

(Pun என்பதைப் புன் என்று உச்சரிக்கக் கூடாது; பன் என்று உச்சரிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே).



Irascible என்றாலும் Erasable என்றாலும் ஒரே அர்த்தமா?

இல்லை. Eraser என்றால் எழுதியதை அழிப்பதற்குப் பயன்படுத்துகிற மிருதுவான ரப்பர் அல்லது பிளாஸ்டிக் துண்டு. இந்தக் கோணத்தில் அழிக்கக்கூடிய வகையில் எழுதப்படுவதை erasable என்பார்கள்.

Irascible என்றால் எளிதிலேயே கோபப்படக்கூடிய தன்மை. “Be careful with him. He is an irascible man” என்றால் அவர் short tempered என்று அர்த்தம். லத்தீன் மொழியில் ‘ira’ என்றால் கோபம். Irascible என்றால் கோபம் கொள்வது.



போட்டியில் கேட்டுவிட்டால்

Many of the problems discussed in this meeting were trivial and only a few were _____________.

கோடிட்ட இடத்தில் கீழே உள்ள எந்த வார்த்தையை நிரப்பினால் மிகப் பொருத்தமாக இருக்கும்?

a) profitable

b) practical

c) irrelevant

d) superficial

e) significant

f) interesting

இதற்கான விடையைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால் trivial என்ற வார்த்தைக்கான பொருளை அறிந்துகொள்ள வேண்டும்.

Trivial என்றால் அற்பமான அல்லது மதிப்பு குறைந்த என்று கொள்ளலாம். வாக்கியத்தில் இந்த வார்த்தைக்கு நேரெதிரான பொருள் உள்ள வார்த்தையை நிரப்பினால்தான் அது சரியான வாக்கியமாக இருக்கும். (Only என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைக் கவனித்தீர்களா?)

Irrelevant என்றால் பொருத்தமற்ற, தொடர்பற்ற என்று கொள்ளலாம். Profitable என்றால் லாபகரமான. Superficial என்றால் மேலோட்டமான.

இந்த மூன்று வார்த்தைகளும் trivial என்ற வார்த்தைக்கு எதிரானவை அல்ல.

மேலோட்டமாகப் பார்த்தால் interesting என்ற வார்த்தை பொருந்துமோ என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அர்த்தமற்ற, அற்பமான விஷயங்கள்கூடச் சுவையானதாக இருக்கலாமே. எனவே, அவை எதிரெதிரான அர்த்தம் கொண்டவை அல்ல.

Practical ஆன விஷயங்கள் பெரிதானவையாகவும் இருக்கலாம், அற்பமானவையாகவும் இருக்கலாம்.

Significant என்றால் முக்கியமான என்று அர்த்தம். இதற்கு இதே அர்த்தம் கொண்ட வார்த்தைகளாக important, valuable, meaningful போன்றவற்றையும் கூறலாம். இவை trivial என்ற வார்த்தைக்கு எதிர் அர்த்தம் கொடுக்கக் கூடியவை.

ஆக, Many of the problems discussed in this meeting were trivial and only a few were significant என்று வாக்கியத்தை அமைக்கும்போது அது “இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் அர்த்தமற்றவை. விவாதிக்கப்பட்ட சில பிரச்சினைகள் மட்டுமே அர்த்தமுள்ளவை” என்ற சரியான பொருளை அளிக்கிறது.

சிப்ஸ்

# Archive என்பது என்ன?

அரசு அல்லது பொது ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம்.

# ‘The abovesaid statement is wrong’ என்பது சரியா?

தவறு. The aforesaid statement என்பதே சரி.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x