Published : 02 Nov 2016 10:59 AM
Last Updated : 02 Nov 2016 10:59 AM

மழலை மதிப்புரை: நான்கு குழந்தைகளும் ஒரு நாய்க்குட்டியும்!

சென்னையில் இந்த ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சியில்தான் ‘ஃபேமஸ் ஃபைவ்’ன்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பார்த்தேன். தலைப்பு கேள்விபட்ட மாதிரி இருந்ததாலும், நன்றாக இருந்ததாலும் உடனே புத்தகத்தை வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் படிச்சப்போ அவ்ளோ விறுவிறுப்பா இருந்துச்சு.

நாலு குழந்தைகளும் ஒரு நாய்க்குட்டியும் சேர்ந்து புதையலைத் தேடுற ஒரு புதிரான கதை. மூன்று குழந்தைகள் பள்ளிக்கூட விடுமுறையில தன்னோட அத்தை வீட்டுக்குப் போறாங்க. அங்கிருக்கும் அவர்களது சகோதரியையும், அவளது நாய்க்குட்டியையும் இவர்கள் சந்திக்கிறாங்க. அப்போது ஜார்ஜினாவுடன் ஒரு தீவைச் சுற்றிப் பார்க்கப் போறாங்க.

இதுக்காக ஒரு பழைய கப்பல்ல போறப்ப, கிடைக்கிற வரைபடத்தை வைச்சு புதையலைக் கண்டுபிடிக்கிற கதை தான் இது. நாலு சுட்டிக் குழந்தைகள் ஒரு இடத்துல சேர்ந்திருந்தா எப்படி இருக்கும்? அதுவும் புதையலைத் தேடிப்போறப்ப சொல்லவும் வேணுமா? ஒரே ஜாலிதான். புதையலைக் கண்டுபிடிக்க ஏற்படுற சுவாரஸ்சியத் தடைகளைத் தாண்டி போறதெல்லாம் விறுவிறுப்பா கதையில சொல்லியிருக்காங்க. இந்தக் கதையில நிறைய பாகங்கள் இருக்கு. எனக்கு இந்தப் பாகம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஏன்னா, இது ஒரு நிஜக்கதை போலவே இருந்துச்சு. உங்களுக்கும் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆசைன்னா, ‘ஃபேமஸ் ஃபைவ்’ வாங்குங்க.

நூல்: ஃபேமஸ் ஃபைவ்
ஆசிரியர்: எனிட் ப்ளைட்டன்
விலை: ரூ. 100.
வெளியான ஆண்டு: 1942



- நூலை மதிப்புரை செய்தவர்
மோ.ஸ்ருதி, 7-ம் வகுப்பு,
தூய யோவான் மேல்நிலைப்பள்ளி,
மந்தைவெளி, சென்னை - 600 028.



உங்களுக்குப் பிடித்த நூல் எது?

குழந்தைகளே! உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா என யாராவது உங்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். நீங்களும் அதை ஆசையாகப் படித்திருப்பீர்கள். அப்படி ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கிறதா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்பவும் மறக்க வேண்டாம். படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். ‘மழலை மதிப்புரை’ என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புகிறீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x