

தாராப்பூரில் அமைந்திருக்கும் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் பணி உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை நியமிக்க இருக்கிறது. ஆபரேட்டர், ஆய்வக உதவியாளர், ஃபிட்டர், மெக்கானிக், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், ப்ளம்பர், கார்பெண்டர் உள்ளிட்ட 157 பயிற்சியர் நியமிக்கப்பட உள்ளார்கள். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். பணி உதவித் தொகை முதலாண்டில் ரூ.6,200; இரண்டாமாண்டில் ரூ.7,200.
வயதுத் தகுதி
13.12.2016 அன்று குறைந்தபட்ச வயது 18, உச்சபட்ச வயது 22. உச்சபட்ச வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படுகிறது.
உடற்தகுதி: உயரம் 160 செ.மீ., எடை: 45.5 கி.கி.
கல்வித் தகுதி
மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அந்தந்தப் பணிக்கான தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பு (ஐடிஐ) முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
மூன்று படி நிலைகளில் தேர்வு முறை அமையும். முதலிரண்டு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடைபெறும். இவற்றில் தேர்வானவர்கள் மூன்றாம் நிலைக்குத் தகுதி பெறுவார்கள். எழுத்துத் தேர்வில் தொழில்நுட்ப அறிவு சோதிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இரண்டாண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பின்னர், வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தவர்கள் தகுதி அடிப்படையிலும் பயிற்சியின் இறுதியில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் பணியைப் பெறத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் >https://barcrecruit.gov.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.12. 2016
கூடுதல் விவரங்களுக்கு:
நவம்பர் 19-25 தேதியிட்ட எம்ப்ளாயிண்ட்மெண்ட் நியூஸ் ஆங்கில இதழ் அல்லது >http://www.barc.gov.in/