

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி செல்கிறது. 2021 நிலவரப்படி இந்தியாவில் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7.96 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து 16.23 லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புக் கொண்ட இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 1,103 பேர் இடம்பெற்றுள்ளனர். சென்ற ஆண்டைவிடக் கூடுதலாக 96 பேர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். ரியல் எஸ்டேட், மருந்துத் தயாரிப்பு, பெட்ரோகெமிக்கல், மென்பொருள் ஆகிய துறைகள் அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இந்திய செல்வந்தச் சூழல் குறித்துப் பார்க்கலாம்.
டாப் 5 கோடீஸ்வரர்கள் (ரூ.லட்சம் கோடியில்)