கேள்வி மூலை 06: குட்டி இறக்கையால் தேனீ பறப்பது எப்படி?

கேள்வி மூலை 06: குட்டி இறக்கையால் தேனீ பறப்பது எப்படி?
Updated on
1 min read

நம் தலையைச் சுற்றி வட்டமிடும், காதுக்குள் புக முயற்சிக்கும் குளவிகளைச் சந்தித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இந்தக் குளவிகள், தேனீக்கள், வண்டுகளை உற்றுப் பார்த்தால் லேசான, இத்துனூண்டு இறக்கையை மட்டுமே அவை கொண்டிருக்கும். ஆனால், அதை வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய உடலைத் தூக்கிக்கொண்டு அநாயாசமாகப் பறக்க வேறு செய்கின்றனவே, எப்படி?

தேனீக்களாலும் வண்டுகளாலும் இப்படிப் பறக்க முடிவது ஓர் இயற்பியல் அதிசயம். இயற்பியல் விதிகளை மீறித் தேனீக்கள் பறக்கின்றன என்று சிலர் வாதிடுகிறார்கள். பல தேனீக்களின் உடல் பெரிதாக இருக்கலாம். அதற்குச் சம்பந்தமில்லாமல் சிறிய, லேசான இறக்கையை அவை கொண்டிருப்பதை வைத்து, இரண்டும் சம்பந்தமில்லாமல் இருப்பதே சந்தேகம் உருவாவதற்குக் காரணம்.

இப்போதுள்ள இயற்பியல் மாதிரிகளை வைத்துக்கொண்டு பார்க்கும்போது, தேனீக்களின் உடலும் அவற்றின் பறத்தலும் பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் உருவாக்கப்படும் புதிய இயற்பியல் மாதிரிகள் மூலம் தேனீக்களின் பறத்தல் நிகழ்த்திக்காட்டப்படும்போது, இயற்பியல் விதிகள் புதிய விளக்கத்தைத் தரலாம்.

உண்மையில், தேனீக்கள் எந்த இயற்கை விதிகளையும் மீறவில்லை. பார்க்கப் பெரிதாக இருந்தாலும், அவற்றின் உடல் எடை என்பது சராசரியாக 0.2 கிராம். அதாவது 2 மில்லிகிராம். அவற்றின் இறக்கைகள் இந்த எடையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் திறனைக் கொண்டுள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in