Published : 04 Nov 2016 12:04 PM
Last Updated : 04 Nov 2016 12:04 PM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 39: பொது தமிழ்

பொது தமிழ்

148. “மல்லிகை சூடினாள்” - இதில் மல்லிகை என்பது எவ்வகை ஆகுபெயர் தேர்க

அ) இடவாகு பெயர் ஆ) சினையாகு பெயர்

இ) பொருளாகுபெயர் ஈ) பண்பாகு பெயர்

149. ‘வௌ’ - ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்

அ) வௌவ்வால் ஆ) கைப்பற்றுதல் இ) கப்பல் ஈ) மீட்டல்

150. வைகறை எழுக- வைகறை எவ்வகை ஆகுபெயர்

அ) சினையாகு பெயர் ஆ) காலவாகு பெயர்

இ) பொருளாகுபெயர் ஈ) இடவாகுபெயர்

151. ‘முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்’

அ) புறநானூறு ஆ) நற்றிணை இ) குறுந்தொகை ஈ) மூதுரை

152. “ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழ மணிகளும்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்

அ) 1850 ஆ) 1830 இ) 1930 ஈ) 1880

153. உறுதிக்கூற்று: (உ) தமிழ்விடு தூது என்பது ஒரு சிற்றிலக்கியம். காரணம்: (கா) தூது விடுவதற்கு அன்னத்தைப் பயன்படுத்தினர்

அ) (உ) சரி ; (கா) தவறு ஆ) (உ) (கா) இரண்டும் தவறு

இ (உ) தவறு (கா) சரி ஈ) (உ),( கா) இரண்டும் சரி

154. மதுரை வீதிகளில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்க.

அ) அறுவை வீதி ஆ) கூல வீதி

இ) பொன் வீதி ஈ) குதிரை வீதி

155. செங்கீரைப் பருவம், பிள்ளைத் தமிழில்

அ) ஐந்தாம் பருவம் ஆ) நான்காம் பருவம்

இ) இரண்டாம் பருவம் ஈ) மூன்றாம் பருவம்

156. ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ எனப் பாடியவர்

அ) பாரதியார் ஆ) சுரதா இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்

157. “புல்லாகிப் பூடாய்” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்

அ) திருவாசகம் ஆ) திருவெம்பாவை

இ) திருப்பாவை ஈ) நாலடியார்

158. ‘சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே” - இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்

அ) கண்ணதாசன் ஆ) தஞ்சை இராமையாதாஸ்

இ) மருதகாசி ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

159. வாணிதாசனால் எழுதப்பட்ட ‘பாடல் தொகுப்பின்’ பெயரைக் கூறுக.

அ)இளைஞர் இலக்கியம் ஆ)பூங்கொடி

இ)குடும்ப விளக்கு ஈ)குழந்தை இலக்கியம்

160. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர்

அ) விதுரன் ஆ) தாவீதன்

இ) இயேசுபெருமான் ஈ) சூசைமாமுனிவர்

161. சீறாப்புராணம் ... விருத்தப்பாக்களால் ஆனது.

அ) 5050 ஆ) 5027 இ) 5000 ஈ) 6000

162. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த ஆண்டு __________ அங்கு பாவாணர் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அ) 1981 ஆ) 1985 இ) 1986 ஈ) 1990

163. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம்

அ) உறுப்பு ஆ) பள்ளு இ) உலா ஈ) கலம்பகம்

164. செந்தழிழைச் செழுந்தழிழாகக் காண விரும்பியவர்

அ) வாணிதாசன் ஆ) கம்பதாசன்

இ) பாரதிதாசன் ஈ) பாரதியார்

165. போற்றுதல் என்பது ________

அ) புணர்ந்தாரைப் பிரியாமை

ஆ) அலர்ந்தவர்க்கு உதவுதல்

இ) தன் கிளை செறாமை ஈ) பாடறிந்து ஒழுகுதல்

166. கரிகால் வளவனைப் பாடும் நூல்

அ) பொருநராற்றுப்படை ஆ) திருமுருகாற்றுப்படை

இ) கூத்தராற்றுப்படை ஈ) சிறுபாணாற்றுப்படை

167. மணிமேகலையை திருமணம் செய்து கொள்ள விரும்பிய அரச குமாரன்.

அ) உதய குமரன் ஆ) சேரன்

இ) சேரவர்மன் ஈ) ஆபுத்திரன்

168. கடல் பயணத்தை “முந்நீர் வழக்கம்” என்று குறிப்பிடும் நூல்.

அ) தொல்காப்பியம் ஆ) குறுந்தொகை

இ) பட்டினப்பாலை ஈ) நெடுநல்வாடை

169. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்

அ) முடியரசன் ஆ) தாராபாரதி

இ) சுரதா ஈ) அப்துல் ரகுமான்

170. ‘ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன’ - இதனை பாடிய கவிஞர்

அ) ந.பிச்சமூர்த்தி ஆ) வல்லிக்கண்ணன்

இ) புதுமைப்பித்தன் ஈ) சி.சு.செல்லப்பா

171. குலசேகராழ்வார் பாடல் ... தொகுப்பில் உள்ளது.

அ) திருவியற்பா ஆ) முதலாயிரம்

இ) இரண்டாமாயிரம் ஈ) பெரிய திருமொழி

172. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?

அ) 658 ஆ) 660 இ) 680 ஈ) 690

173. a. பண்ணவர் 1. ஆராய்ச்சிக்கு அழகு

b. அரம்டையர் 2. தேவர்

c. எண் வனப்பு 3. மனச் செருக்கு

d. மிகுதியான் 4. அத்தகைய இறைவர்

e. அன்னவர் 5. தேவ மகளிர்

a b c d e

அ 5 2 1 3 4

ஆ) 2 5 1 4 3

இ) 2 5 1 3 4

ஈ) 5 2 3 1 4

174. ஓரறிவு முதல் ஆறறிவு உயிரிகள் பற்றி மிகத் தெளிவாக கூறும் பழங்கால இலக்கண நூல்.

அ) கம்பராமாயணம் ஆ) பெரியபுராணம்

இ) தொல்காப்பியம் ஈ) பத்துப்பாட்டு

174. ‘ஒன்றே யென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம்

அ) ஆரண்ய காண்டம் ஆ) யுத்த காண்டம்

இ) சுந்தர காண்டம் ஈ) அயோத்தியா காண்டம்

175. “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொது வுடைமையை விரும்பியவர்

அ) கல்யாண சுந்தரம் ஆ) பாரதிதாசன்

இ) முடியரசன் ஈ) தமிழ்ஒளி

176. “இதோஓர் உத்தம மனிதர் போகிறார்” என வள்ளலாரை கூறியவர்

அ) சமண முனிவர் ஆ) திகம்பர சாமிகள்

இ) குருசாமிகள் ஈ) யாருமில்லை

177. சேர அரசர்கள் பதின்மரைப் பற்றிப் பாடப்பெற்ற நூல்

அ) புறநானூறு ஆ) கலித்தொகை

இ) அகநானூறு ஈ) பதிற்றுப்பத்து

178. மனோன்மணீயம் நாடக நூலின் ஆக்கத்துக்குத் துணை நின்ற ஆங்கில நூல்

அ) மோட்ச தீபம் ஆ) மோட்சப்பயணம்

இ) ஓத்தெல்லோ ஈ) இரகசிய வழி



179. மணிமேகலை யாருடைய உதவியால் அமுதசுரபியை பெறுகிறாள்.

அ) உதயகுமாரன் ஆ) அரவண அரசன்

இ) கவுந்திஅடிசன் ஈ) தீவதிலகை

180. ‘நண்ணுமிளமை’ எனத் தொடங்கும் மொழி வாழ்த்துப் பாடல் இடம்பெற்ற நூல்

அ) குற்றால குறவஞ்சி ஆ) தமிழரசி குறவஞ்சி

இ) பூபால குறவஞ்சி ஈ) குறத்திப் பாட்டு

181. சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?

அ) பேராசிரியர் ஆ) அடியார்க்கு நல்லார்

இ) நச்சினார்க்கினியர் ஈ) ந.மு.வேங்கடசாமி

182. மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டும் ஊரும் தேர்க:

அ) புறநானூறு ஆ) நற்றிணை

அ) 1813 தரங்கம்பாடியில் வெளியிட்டார்

ஆ) 1814 திருநெல்வேலியில் வெளியிட்டார்

இ) 1812 இல் தஞ்சையில் வெளியிட்டார்

ஈ) 1815 இல் மதுரையில் வெளியிட்டார்

183. உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே; பழிக்காதே; வெறுக்காதே என்று கூறியவர் யார்?

அ) எழில் ஆ) மு.வ இ) நேரு ஈ) காமராஜர்

184. “காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு கும்பிட்டுக காலன் ஓடிப் போவானே’ என்று கூறியவர்

அ) காந்தியக் கவிஞர் ஆ) சுரதா

இ) கவிமணி ஈ) கண்ணதாசன்

185. நாடகமேடை நினைவுகள் என்ற நூலின் ஆசிரியர்?

இ) குறுந்தொகை ஈ) மூதுரை

அ) கே.பாலசந்தர் ஆ) சோ.ராமசாமி

இ) சங்கரதாஸ் சுவாமிகள் ஈ) பம்மல் சம்பந்தனார்

186. வெண்டளை விரவிய கல்வெண்பாவால் பாடப் படுவது எது?

அ) பள்ளு ஆ) தூது இ) கலம்பகம் ஈ) அந்தாதி

187. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ள தைத் தேர்ந்தெடு :

அ) ஐந்திணை ஐம்பது - மூவாதியார்

ஆ) ஐந்திணை எழுபது - கண்ணன் சேந்தனார்

இ) திணைமொழி ஐம்பது - மாறன் பொறையனார்

ஈ) கைந்நிலை - புல்லங்காடனார்

189. ஒப்பிலக்கணத் தந்தை என அழைக்கப்படுபவர்

அ) வீரமாமுனிவர் ஆ) கால்டுவெல்

இ) கவிஞர் கண்ணதாசன் ஈ) தொல்காப்பியர்

190. கல்தோன்றி மண்தோன்றா காலத்து வாளொடு, முன்தோன்றிய மூத்த குடி - என்று தமிழ்க் குடியைச் சிறப்பித்த ஆசிரியர்.

அ) திருமூலர் ஆ) சேக்கிழார் இ) கம்பர் ஈ) ஐயனாரிதனார்

191. “திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே” என்ற கூற்றுக்கு உரியவர் யார்?

அ) இராமலிங்க அடிகள் ஆ) திருமூலர்

இ) வீரமாமுனிவர் ஈ) பாரதிதாசன்

192. “கால்கள் இரண்டு படைத்தவன் நீ - பெருங்கல்லும் மலையும் கடப்பதற்கே’ என்று முழங்கியவர்

அ) சிலப்பதிகாரம் ஆ) கம்பராமாயணம்

அ) பாரதிதாசன் ஆ) சாலை.இளந்திரையன்

இ) சாலை நயினார் ஈ) காமராசன்

193. பாண்டிய மன்னனின் யானை தனது தந்தங்களை எழுத்தாணியாகக் கொண்டு பகை மன்னரின் மார்பில் என்ன எழுதும்?

அ) உன் நாட்டுக்கு திரும்பிச் செல்

ஆ) வீரத்துடன் போரிடு

இ) செல்வம் நிலைத்த உலகமெல்லாம் பாண்டியருக்குரியது

ஈ) பாண்டிய மன்னனை வணங்கு

194. ஓவியர் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண் ணங்களின் துணை கொண்டு எழுதுவோரை - சிறப்புப் பெயர் தேர்க:

அ) சித்திரங்கள் ஆ) வித்தக வினைஞன்

இ) கண்ணுள் வினைஞர் ஈ) ஓவியப் புலவர்

இ) மணிமேகலை ஈ) வளையாபதி

195. ஓலைச்சுவடி பற்றிய கூற்றுகளில் தவறானது

அ) எழுத்துகளில் புள்ளி இருக்காது

ஆ) ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறு பாடு இருக்காது

இ) துணை எழுத்து இருக்காது

ஈ) முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

196. தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எது?

அ) 17-ம் நூற்றாண்டு ஆ) 18-ம் நூற்றாண்டு

இ) 19-ம் நூற்றாண்டு ஈ) எதுவுமில்லை

197. கலிங்கத்துப்பரணியை “தென் தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்தவர் ___

அ) கபிலர் ஆ) ஒட்டக்கூத்தர்

இ) பரணர் ஈ) ஓளவையார்

198. “கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர்மாலை வாடுதலால்” பாடலடிகள் இடம் பெரும் நூலைக் கண்டறிக

அ) திருவள்ளுவ மாலை ஆ) நளவெண்பா

இ) தமிழ்ப்பசி ஈ) இனியவை நாற்பது

199. பெதும்மை எனும் பருவ மகளிரின் வயது

அ) 5 - 7 ஆ) 8 - 11 இ) 12 - 13 ஈ) 9 - 12

200. முதுமொழிக்காஞ்சி பற்றிய செய்திகளில் எது தவறு

அ) இந்நூலுக்கு அறவுரைக் கோவை என்ற பெயரும் உண்டு

ஆ) இதில் 100 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

இ) இப்பாடல்கள் அனைத்தும் மதுரை தமிழ்ச்சங்கத்தில் பதிய பெற்றனவாம்

ஈ) இதில் அதிகாரங்களுக்கு 10 பாடல்கள் வீதம் பத்து அதிகாரங்கள் பகுக்கப்பட்டுள்ளன.

விடைகள்: 148. இ, 149. ஆ, 150. ஆ, 151. ஆ, 152. அ, 153. அ, 154. ஈ, 155. இ, 156. இ, 157. அ, 158. இ, 159. ஈ, 160. ஈ, 161. ஆ, 162. அ, 163. ஈ, 164. இ, 165. அ, 166. அ, 167. அ, 168. அ, 169. ஈ, 170. ஆ, 171. ஆ, 172. அ, 173. இ, 174. இ, 175. ஆ, 176. ஆ, 177. ஈ, 178. ஈ, 179. ஈ, 180. ஆ, 181. இ, 182. இ, 183. ஆ, 184. இ, 185. ஈ, 186. ஆ, 187. ஈ, 188. ஆ, 189. ஆ, 190. ஈ, 191. ஆ, 192. ஆ, 193. இ, 194. இ, 195. இ, 196. இ, 197. ஆ, 198. ஆ, 199. ஆ, 200. இ

ச.வீரபாபு இயக்குநர், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, சென்னை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x