

புவியியல்
36. காற்றின் திசையை அளவிடப் பயன்படும் கருவி
a) வின்ட் வேன் b) ஹைக்ரோ மீட்டர்
c) பாரோமீட்டர் d) மேற்கூறிய எதுவுமில்லை
37. கர்ஜிக்கும்-40 என்பது
a) கிழக்கு காற்று b) மேற்கு காற்று
c) துருவ காற்று d) தல காற்று
38. வியாபாரக்காற்றுகள் விலக்கமடைவதற் கான காரணம்?
a) ஃபெரல் விதி b) கொரியாலிஸ் விசை
c) a & b இரண்டும் d) கெப்ளரின் 3-ம் விதி
39. புயலின் வெற்றிட மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)தொடக்கப்புள்ளி b)புயல்கண்
c) உட்கரு d)கருவம்
40. கொடுக்கப்பட்டவைகளைக் கவனி :
I. புயல் காற்றுக்கு நிலையான இடமோ & திசையோ கிடையாது.
II. புயல் என்பது தாழ்வழுத்த மையமாகும்.
III. அவை காற்றினை அனைத்து திசை களிலிருந்தும் ஈர்க்கிறது.
IV. கனமழை & அதிவேகக் காற்றுடன் தொடர்புடையது.
41. கொடுக்கப்பட்ட கூற்றுகளைக் கவனி:
I. புயல்காற்று ஓர் குறை அழுத்த அமைப்பு, நீரின் மேற்பரப்பில் உருவாகின்றது.
II. எதிர் புயல்காற்று ஓர் குறை அழுத்த அமைப்பு, அதிகமாக நிலத்தில் உருவாகின்றது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/ எவை சரியானது?
a) I b) II c) I & II d) இரண்டுமில்லை
42. பின்வருவனவற்றுள் எது ஒன்று வெப்ப தலக்காற்று அன்று?
a) பிரிக் பீல்டர் b) சிராக்கோ
c) சோன்டா d) மிஸ்டரல்
43. பொருத்துக
(மேகங்கள்) (பண்பு)
A) நிம்பஸ் - 1.உயரமான மேகம்
B) குமுலஸ் - 2.கீழ்மட்ட மேகம்
c) ஸ்ட்ரேடஸ் - 3.நடுநிலையான மேகம்
D) சிர்ரஸ் - 4.செங்குத்தான மேகம்
A B C D
a) 1 2 3 4
b) 2 1 3 4
c) 4 3 2 1
d) 3 4 2 1
44. பின்வருகின்றவற்றில் எந்தவகை மேகம் வெப்ப மண்டலப் பகுதியில் பிற்பகல் வேளைகளில் அடிக்கடி காணப்படும்?
a) சிர்ரோ குமுலஸ் b)ஆல்டோ குமுலஸ்
c) நிம்போ ஸ்ட்ரேடஸ் d) குமுலோ நிம்பஸ்
45. “புயல் மேகங்கள்” என அழைக்கப்படுவது எது?
a) நிம்பஸ் b) குமுலஸ் c) சிர்ரஸ் d) ஸ்ட்ரேடஸ்
46. எந்த மேகங்கள் கடல் மட்டத்துக்கு மேல் 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் காணப்படுகிறது?
a) படை மேகங்கள் b) கீற்று மேகங்கள்
c) திரள் மேகங்கள் d) கார்படை மேகங்கள்
47. பின்வருவனவற்றில் நான்கு மணி மழைப் பொழிவு என்று அழைக்கப்படுவது எது?
a) புயல்காற்று மழைப்பொழிவு
b) மலை தடுப்பு மழைப்பொழிவு
c) வெப்ப சலன மழை
d) மேற்கத்திய இடையூறு மழை
48. கேரளா மற்றும் தமிழ்நாடு ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கேரளா அதிக மழைப் பொழிவினை பெறுகின்றது. ஏனெனில்...
a) கேரளா காற்றுமுகப் பகுதியில் அமைந் துள்ளது.
b) கேரளா காற்று எதிர்முக திசையில் அமைந்துள்ளது.
c) கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது.
d) கேரளா மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதி யின் மேல் அமைந்துள்ளது.
49. ஃபல்மினாலாஜி என்பது
a) பிலிம் பற்றிய அறிவியல்
b) இடி பற்றிய அறிவியல்
c) மின்னல் பற்றிய அறிவியல்
d) புயல் காற்று பற்றிய அறிவியல்
50. தமிழகம் மற்றும் கேரளாவின் மீது கோடை காலத்தில் வீசும் தலக்காற்றின் பெயர்
a) லூ b) மாங்காய் மழை
c) மிஸ்ட்ரல் காற்று d) கல்பாசாகி
51. உலகில் மிக அதிக ஆண்டு மழைப்பொழிவு பெறும் பகுதி
a) சிரபுஞ்சி b) மாவ்சின்ராம்
c) வால்பாறை d) சென்னை
52. பின்வருகின்றவற்றில் ஓரிடத்தில் கால நிலையை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?
a) அட்சங்கள் b) உயரம்
c) காற்று d) மேற்கூறிய அனைத்தும்
53. தீபகற்ப இந்தியப் பகுதியில் நிகழும் காலநிலை
a) கண்டகால நிலை
b) பூமத்திய ரேகை காலநிலை
c) மிதவெப்ப காலநிலை
d) மேற்கூறிய அனைத்தும்
54. இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்கக் காலத்தையும், முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கும் காற்று எது?
a) மேற்கத்திய இடையூறு
b) தென்மேற்கு பருவக்காற்று
c) வடகிழக்கு பருவக்காற்று
d) ஜெட்காற்றோட்டம்
55. பின்வருகின்ற தமிழக மாவட்டங்களுள் அதிக பயிர் அடர்த்தி கொண்டது எது?
a) நாகப்பட்டினம் b) திருவாரூர்
c) திருவள்ளூர் d) திருவண்ணாமலை
56. தமிழகத்தில் அதிக நிகர விதைப்பு நிலங் கள் கொண்டுள்ள மாவட்டம் எது?
a) விழுப்புரம் b) கோவை
c) ஈரோடு d) திண்டுக்கல்
57. தமிழகத்தில் நிகர விளைநிலம் அல்லாத மாவட்டம் எது?
a) நீலகிரி மாவட்டம் b) தருமபுரி
c) ராமநாதபுரம் d) சென்னை
58. மிக அதிக நிகர பரப்பு கால்வாய் பாசனம் பெறும் பகுதி
a) திருவாரூர் b) தஞ்சாவூர்
c) நாகப்பட்டினம் d) கன்னியாகுமரி
59. தமிழகத்தில் கிணற்றுப் பாசனத்தின் சதவீதம்
a) 17.6 % b) 28.6%
c) 53.1% d) 70%
61. பின்வருகின்ற தமிழக மாவட்டங்களில் அதிக விழுக்காடு கிணற்றுப்பாசனம் கொண்டது எது?
a) விழுப்புரம் b) கோவை
c) திருவண்ணாமலை d) சேலம்
62. தமிழகத்தில் அதிக நீர்ப்பாசனம் அடர்த்தி கொண்ட மாவட்டம்
a) கன்னியாகுமரி b) திருவள்ளூர்
c) திருவண்ணாமலை d) காஞ்சிபுரம்
63. தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்து இரண் டாவது அதிக நீர் தேவை உள்ள பயிர் எது?
a) கரும்பு b) நிலக்கடலை
c) பருத்தி d) வாழைப்பழம்
64.“லேண்ட் ஆஃப் ஆரஞ்சு”
a) மாவ்சின்ட்ராம் b) நாக்பூர்
c) சிம்லா d) சிரபுஞ்சி
65. தென்மேற்கு பருவக்காற்றின்போது தமி ழகத்தில் ஆண்டு மழைபொழிவு அதிகம் பெறும் மாவட்டம் எது?
a) நீலகிரி b) கன்னியாகுமரி
c) தேனி d) ஈரோடு
66. தமிழகத்தின் ஒரு மாவட்டம் மூன்று மழைப் பொழிவின்போதும் மழை பெறுகிறது.
a) நீலகிரி b) கன்னியாகுமரி
c) தேனி d) கோவை
67. 2015-ம் ஆண்டு தமிழ்நாடு எத்தனை சதவீதம் சராசரிக்குமேல் மழையைப் பெற்றது?
a) தொடக்கப்புள்ளி b) புயல் கண்
a) 15% b) 20%
c) 53% d) 35%
68. பின்வருகின்ற தமிழக மாவட்டங்களில் 2015-ல் வடகிழக்கு பருவக் காற்றினால் மிக அதிக மழைப் பொழிவுப் பெற்றது எது?
a) சென்னை b) காஞ்சிபுரம்
c) திருவள்ளூர் d) தூத்துக்குடி
69. பின்வருகின்ற காற்றுகளில் மேற்கத்திய இடையூறு காற்றினை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிப்பது எது?
a) பின்னடைவுப் பருவக்காற்று
b) ஜெட் காற்றோட்டம்
c) கல்பைசாகி
d) நார்வெஸ்டர்
70. பின்வருகின்ற மழைகளில் கோதுமை விளைச்சலுக்கு மிகவும் பயனளிப்பது எது?
a) நார்வெஸ்டர்
b) கல்பைசாகி
c) மேற்கத்திய இடையூறு
d) மேற்கூறிய எதுவுமில்லை
71. இந்தியாவில் எந்த மழைப்பொழிவு 80% மழையை கொடுக்கிறது?
a) தென்மேற்கு பருவக்காற்று
b) வடகிழக்கு பருவமழை
c) மாங்காய் சாரல்
d) மேற்கத்திய இடையூறு
72. கேரளாவின் மிகப்பெரிய ஏரி
a) தேக்கடி b) வேம்பநாடு
c) குட்டநாடு d) குன்னமடை காயல்
73. மகாநதி & கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே உள்ள கடற்கரை
a) உத்கல் சமவெளி b) சிர்கார்
c) கோரமண்டல் d) கொங்கன்
74. பார்சன் முனை என்பது
a) தென்கோடி முனை
b) மேற்கு கோடி முனை
c) வடகோடி முனை
I. புயல் காற்றுக்கு நிலையான இடமோ & திசையோ கிடையாது.
d) கிழக்கு கோடி முனை
75. எந்த ஆண்டு இந்திய அரசு நாடு முழுமைக்கான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தையே பயன்படுத்தியது?
a) 1946 b) 1947
c) 1950 d) 1971
விடைகள்:
36.a 37.b 38.c 39.b 40.d 41.a 42.d 43.c 44.d 45.a 46.c 47.c 48.a 49.c 50.b 51.b 52.d 53.c 54.d 55.a 56.a 57.d 58.a 59.c 60.d 61.a 62.a 63.a 64.d 65.a 66.b 67.c 68.b 69.b 70.c 71.a 72.b 73.b 74.a 75.b
எஸ்.சிவகுமார்
நிர்வாக இயக்குநர், ஜி.கே.லீடர்ஸ் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், சென்னை