Published : 20 Oct 2016 12:16 PM
Last Updated : 20 Oct 2016 12:16 PM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா- விடை 30: பொருளாதாரம்

பொருளாதாரம்

23. வங்கி எந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது

a) மாநில பட்டியல் b) மத்திய பட்டியல்

c) பொதுப்பட்டியல் d) எதுவுமில்லை

24. பஞ்சாயத்தால் வசூலிக்கப்படும் வரி

a) நகர்ச் சுங்கவரி b) விற்பனை வரி

c) சேவை வரி d) வாகன உற்பத்தி வரி

25. வேலைக்கு உணவுத் திட்டம் அறிமுகமான ஐந்தாண்டு திட்டம் எது

a) 4-வது b) 5-வது c) 6-வது d) 7-வது

26. விவசாய வருமான வரி விதிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது

a) பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பது

b) இறக்குமதியை ஊக்குவிப்பது

c) வேலை வாய்ப்பை உருவாக்குவது

d) கட்டுமான வசதிகளை உருவாக்குவது

27. I) பாம்பே திட்டம், பாம்பேவைச் சேர்ந்த 8 தொழிலதிபர்களால் வழங்கப்பட்டது

II) மக்கள் திட்டத்தை M.N. ராய் வழங்கினார்

a) I சரி b) II சரி c) I, II சரி d) I, II தவறு

28. காட் (GATT) ஒப்பந்தப்படி உருவானது

a) டபிள்யூ. டி.ஓ b) உலக வங்கி

c) ஐ.எம்.எப் d) ஏ.டி.பி

29. அறங்காவலர் உரிமை கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

a) காந்தி b) மில்டன் பிரைட்மென்

c) பீட்டர் டர்க்கர் d) பெடரிக் டெய்லர்

30. பங்கு சந்தையை ஒழுங்குபடுத்துவது

a) ஆர்பிஐ b) பிஎஸ்இ c) என்எஸ்இ d) செபி

31. சரியாக பொருந்துவது

a) பெர்ரா - 1972 b) செபி சட்டம் - 1992

c) செல்வ வரி சட்டம் -1952

d) நன்கொடை வரி சட்டம்- 1962

32. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்குவதை தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு:

a) 2000 b) 2002 c) 2001 d) 2003

33. சமூக பொறுப்பின் எல்லைக்குள் வராதது

a) சுற்று சூழல் தரம் b) நுகர்வோர் தன்மை

c) பணியாள் தொடர்பு d) மேலாண்மை பங்கினையும் செயல்பாடுகளையும் ஒருங் கிணைத்தல்

34. மேம்பாலம் கட்டுதல் மற்றும் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு கடன் வழங்குவது:

a) மூலதனச் செலவு b) வருவாய்ச் செலவு

c) இவை இரண்டும் d) எதுவும் இல்லை

35. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு:

a) 1978 b) 1986 c) 1970 d) 1971

36. இந்தியா, தமிழ்நாட்டில் உடல் ஊனமுற்றோ ருக்கான இடஒதுக்கீட்டு சதவீதம் என்ன?

a) 5% b) 2% c) 3% d) 1%

37. எது மறைமுக வரி அல்ல?

a) சுங்க தீர்வை b) சொத்து தீர்வை

c) உற்பத்தி தீர்வை d) விற்பனை வரி

38. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தொடங்கியது

a) 1982 b) 1981 c) 1980 d) 1983

39. அம்மா உப்பு தொடங்கப்பட்ட நாள்?

a) 11.06.2014 b) 11.07.2014

c) 21.06.2014 d) 21.07.2014

40. கிராம பஞ்சாயத்தின் வரி வருவாய்

a) வீட்டு, சொத்து வரி b) தொழில் வரி

c) விளம்பர வரி d) இவை அனைத்தும்

41. ‘தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி’ என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது?

a) டிட்கோ b) சிப்காட் c) டிக் d) ஐடிசி

42. பொதுத்துறையின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் எது?

a) சென்னை பெட்ரோலியம் கம்பெனி

b) மங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்

c) இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள்

d) ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட

43. வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழும் வரி?

a) வருமான வரி b) விற்பனை வரி

c) மதிப்புக்கூட்டு வரி d) சேவைக்கட்டணம் வரி

44. பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு:

a) 1992 b) 1993 c) 1995 d) 1998

45. எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

a) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் - வேலைவாய்ப்பை உருவாக்குதல்

b) ஏழாவது ஐந்தாண்டு திட்டம் - வறுமை ஒழிப்பு மற்றம் சுயசார்பு

c) எட்டாவது ஐந்தாண்டு திட்டம் - 2000ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்

d) பத்தாவது ஐந்தாண்டு திட்டம் - சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றம் சமத்துவம்

46. நிதிக்குழு தலைவரை நியமிப்பது

a) குடியரசுத் தலைவர் b) பிரதமர்

c) மக்களவை சபாநாயகர் d) நிதி அமைச்சர்

47. ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?

a) ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்

b) அரசுக்கான வங்கியாகச் செயல்படுதல்

c) வங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்

d) தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்

48. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம்

a) தமிழ்நாடு b) பீகார் c) கேரளா d) குஜராத்

49. நிதிக்கொள்கை எதனுடன் தொடர்புடையது

a) ஏற்றுமதி, இறக்குமதி b) வருவாய், செலவினம்

c) பணவெளியீடு d) மக்கள் தொகைக்கட்டுப்பாடு

50. அனைவருக்கும் கல்வி திட்டம் அறிமுகமானது

a) 2001-02 b) 2002-03 c) 2003-04 d) 2004-05

51. பணவீக்கம் நிகழ்வது

a) அத்தியாவசிய பொருட்களின் விலை வருமானத்தை விட அதிகரிக்கும் போது.

b) உள்நாட்டு உற்பத்தியை விட பண அளிப்பு அதிக வீதத்தில் வளரும் போது

c) ரூபாயின் மாற்று வீத மதிப்பு குறையும் போது

d) நிதிபற்றாக்குறை, செலுத்தும் பற்றாக்குறை சமநிலையை விட அதிகமாக இருக்கும்போது

52. முதல் ஐந்தாண்டுத் திட்ட மாதிரி:

a) லீவிஸ் வி மாதிரி b) மகளனோபிஸ் மாதிரி

c) ஹெராடு டோமர் மாதிரி d) கினீசியன் மாதிரி

53. காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a) 1986 b) 1991 c) 1999 d) 2005

54. 2009-ல் வறுமை மதிப்பீட்டை ஆய்வு செய்த குழுவின் தலைவர்

a) வி. எம். டான்டேகர் b) எல். ஆர். ஜெயின்

c) மார்டின் ரவாலியன் d) எஸ்.டி. டெண்டுல்கர்

55. செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது:

a) டி.டி.கிருஷ்ணமாச்சாரி b) சி.ராஜகோபாலாச்சாரி

c) யஷ்வந்த் சின்ஹா d) ஆர். வெங்கட்ராமன்

57. 2011 மக்கள் தொகையில் மகளிர் கல்வியறிவு

a) 65.5% b) 75.3% c) 82.1% d) 64.5%

58. குழந்தைத் தொழிலாளர் வயது

a) 14 வயதுக்கு கீழ் b) 16 வயதுக்கு கீழ்

c) 15 வயதுக்கு கீழ் d) 13 வயதுக்கு கீழ்

59. டங்கன் திட்டம் இதனுடன் தொடர்புடையது

a) காட் ஒப்பந்தம் b) ஐக்கிய நாட்டு அவை

c) பன்னாட்டு நிதி d) உலக வங்கி

60. ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) குறிக்கோள் நாட்டை இதன்படி அமைப்பது

a) கால்வாய்கள் இல்லாமை

b) சேரிகள் இல்லாமை

c) கொசுக்களிடம் இருந்து விடுதலை

d) மேற்கூறிய எதுவும் இல்லாமை

61. 14 வது நிதிக்குழுவின் தலைவர் யார்?

a) மாண்டேக் சிங் அலுவாலியா

b) சி. ரங்ராஜன் c) ஒய். வி. ரெட்டி

d) விஜய் கேல்க்கர்

62. பெற்றோர்கள் மூத்த குடிமகன்களை பரா மரிப்பு மற்றும் நலன் பேணுதல் சட்டம்:

a) 2006 b) 2008 c) 2007 d) 2009

63. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டம்

a) DWACRA b) TRYSEM c) NREP d) IRDP

64. 2013-14 பட்ஜெட்டில் பெண்கள் அதிகார மயமாக்கல், பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதியின் பெயர்:

a) அபயா நிதி b) நிர்பயா நிதி

c) சௌபாக்கியா நிதி d) சுமங்கலி நிதி

65. ‘சர்வ சிக்ஷ அபியான்’ என்ற திட்டத்தின் நோக்கம்

a) ஏழை மக்களுக்கு உணவளிக்கும் திட்டம்

b) சிறார்களுக்கான கல்வி வழங்கும் திட்டம்

c) வேலையற்றோருக்கு நிதி உதவி வழங்கியது

d) ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்குவது

66. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் சதவீதம்.

a) 18.5% b) 17.5% c) 16.5% d) 15.5%

67. பிணைத் தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

a) 1975 b) 1976 c) 1986 d) 1962

68. 1969 மற்றும் 1980-ல் நாட்டுடமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை

a) 14 & 8 b) 6 & 12 c) 14 & 6 d) 8 & 12

69. 2011 கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டின் கல்வியறிவு சதவீதம்

a) 75.30 b) 80.33 c) 85.55 d) 93.80

70. ஒரு ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதற்கு குறைந்த நாணயங்களை வெளியிடுபவர்

a) இந்திய ரிசர்வ் வங்கி b) நிதி அமைச்சர்

c) ரிசர்வ் வங்கி கவர்னர் d) நிதி அமைச்சகம்

71. நிலச் சீர்திருத்தத்தின் நோக்கங்களில் ஒன்று

a) வேளாண் அங்காடியை முன்னேற்றுதல்

b) தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்குதல்

c) நிலம் சார்ந்த முன்னேற்றத்தை கிராமப்புற மக்களுக்கு ஏதுவாகச் செய்தல்

d) அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு தானியங்களை வழங்குதல்

72. அந்நிய செலாவணி ஒழுங்கு படுத்தும் சட்டம் மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு:

a) 1973 & 1988 b) 1974 & 1971

c) 1973 & 1971 d) 1989 & 1974

விடைகள்: 23. b, 24. a, 25. c, 26. a, 27. c, 28. a, 29. a, 30. d, 31. b, 32. b, 33. d, 34. a, 35. a, 36. c, 37. b, 38. a, 39. d, 40. d, 41. d, 42. d, 43. a, 44. b, 45. c, 46. a, 47. d, 48. c, 49. b, 50. c, 51. a, 52. c, 53. c, 54. d, 55. a, 56. b, 57. a, 58. a, 59. a, 60. b, 61. c. 62. c, 63. a, 64. b, 65. b, 66. b, 67. b, 68. c, 69. b, 70. d, 71. c, 72. a

எம்.பூமிநாதன் - இயக்குநர், கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x