

நடப்பு நிகழ்வுகள்
38. ஐ.நாவின் தொழில் மேம்பாட்டு கழகத்தின் (UNIDO) பட்டியல்படி உற்பத்தி துறையில் இந்தியாவுக்கான இடம்
a) மூன்றாவது இடம் b) நான்காமிடம் c) ஐந்தாவது இடம் d) ஆறாவது இடம்
39. கோபா அமெரிக்கா – கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக அர்ஜென்டினாவை வென்று வாகை சூடிய நாடு எது?
a) பிரேசில் b) சிலி c) கொலம்பியா d) உருகுவே
40. கோபா அமெரிக்கா – கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்ல முடியாமல் தன்னுடைய ஓய்வினை அறிவித்த வீரர் யார்?
a) நெய்மர் b) மெஸ்சி c) கிளாடியோ பிராவோ d) பாய்டின் ஸ்வெய்ன்ஸ்டீகர்
41. சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) அறிக்கையின்படி உலகில் அதிக அளவு ஆற்றல் மானியம் வழங்கும் நாடு எது?
a) சீனா b) அமெரிக்கா c) ரஷ்யா d) இந்தியா
42. 2016ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது பெற்ற இந்தியர் யார்?
a) சஞ்சய் சதுர்வேதி b) அனுஷ்குப்தா c) டி.எம்.கிருஷ்ணா d) வி.சாந்தா
43. 51-வது ஞானபீட விருது பெற்ற ரகுவீர் சௌத்ரி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
a) குஜராத் b) மகாராஷ்டிரா c) ஹரியானா d) மேற்கு வங்கம்
44. இந்தியக் குடிமக்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ஸ்மார்ட் போன் செயலிகள் எத்தனை?
a) 5 b) 7 c) 9 d) 11
45. நியூயார்க் மெர்சர் குழு 2016–ஆய்வின்படி வாழ்க்கை செலவு அதிகம் (Cost of Living) ஆகும் நகரங்களில், உலகில் முதல் இடம் பிடித்தது எது?
a) ஹாங்காங் b) லான்டா c) ஜீரிச் d) சிங்கப்பூர்
46. சமீபத்தில் ரஷ்ய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் அந்நாட்டின் உயரிய விருது களுள் ஒன்றான ஆர்டர் ஆஃப் பிரண்ட்ஸ்ஷிப் (Order of Friendship) – எனும் விருது பெற்ற இந்தியர் யார்?
a) கே. சிவம் b) ராமையா சண்முக சுந்தர் c) சேகர் பாசு d) மயில்சாமி அண்ணாத்துரை
47. சமீபத்தில் குஜராத் அரசு உயர் சாதியினருள் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்தது?
a) 10% b) 15% c) 7% d) 5%
48. சுற்றுசூழல் & வனத்துறை அமைச்சகம் 2016-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிப்படி பிளாஸ்டிக் பைகளின் அளவை குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்?
a) 20–30 மைக்ரான் b) 30–40 மைக்ரான் c) 40–50 மைக்ரான் d) 50–60 மைக்ரான்
49. உலக எதிர்கால ஆற்றல் மாநாடு – 2016 நடைபெற்ற இடம் எது?
a) பாரீஸ் b) மாட்ரிட் c) அபுதாபி d) ரியோடி ஜெனீரோ
50. அணு ஆயுத பரவலை குறைக்கும் நோக் குடன் இயங்கும் அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தின் (NSG) மொத்த உறுப்பினர் எண்ணிக்கை:
a) 48 b) 46 c) 50 d) 44
51. ஜன்ங்கர் கமிட்டி (Zangger Committee) எதனுடன் தொடர்புடையது:
a) அணு ஆற்றல் b) உலக வங்கி c) ஆசிய வங்கி d) சர்வதேச நாணய நிதியம்
52. அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தின் தற்போதைய தலைவர் யார்?
a) யுகியா அமனோ (Yukiya Amano) b) யங்-வேன்-சாங் (Young – Wan – Song) c) ரஃபில் மரியானோ கிரோஸி (Rafael Mariano Grossi) d) ராபர்ட்டோ அஸிவிடோ (Roberto Azevedo)
53. IRV–2020 - என்பது எதனுடன் தொடர்புடையது
a) ரேபிஸ் அற்ற இந்தியா b) ஒற்றைக் கொம்பு காண்டாமிருக பாதுகாப்பு c) சுற்றுச்சூழல் பாதுகாப்பு d) வன விலங்கு பாதுகாப்பு
54. இந்தியாவின் முதல் டால்பின் இன பாது காப்பு அமைப்பு எங்கு தொடங்கப்பட்டது?
a) பீகார் b) மேற்கு வங்காளம் c) உத்தர பிரதேசம் d) கேரளா
55. உலகில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?
a) தாய்லாந்து b) இந்தோனேசியா c) வியட்நாம் d) இந்தியா
56. பின்வருகின்ற துறைகளுள் எது/எவை மிக அதிகளவு கார்பன்–டை–ஆக்சைடு வாயுவை வெளியிடுபவை?
a) வேளாண் துறை b) போக்குவரத்துத் துறை c) தொழில் துறை d) ஆற்றல் துறை
57. இந்தியாவின் முதல் பசுமை ரயில் தடம் (First Green Rail Corridor)
a) மதுரை – ராமேஸ்வரம் b) மதுரை – சென்னை c) மானாமதுரை – ராமேஸ்வரம் d) சென்னை – கோவை
58. இந்தியாவின் தலைநகர் டெல்லியையும் திரிபுரா தலைநகரையும் இணைக்கும் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சமீபத்தில் தொடங்கிவைத்தார், அந்த ரயிலை பெயர் என்ன?
a) விவேக் எக்ஸ்பிரஸ் b) சுந்தரி எக்ஸ்பிரஸ் c) காடிமான் எக்ஸ்பிரஸ் d) போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்
59. இந்தியாவில் முதல் பார்வையற்றவர்களுக்கு ஏற்ற (Blind Friendly) ரயில் வண்டி எது?
a) விவேக் எக்ஸ்பிரஸ் b) திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ் c) மைசூர் - வாரணாசி எக்ஸ்பிரஸ் d) மைசூர் – சென்னை எக்ஸ்பிரஸ்
60. இந்தியாவின் முதல் “சூரிய ஆற்றல்” பூங்கா (Solar Park) அமைந்துள்ள இடம்.
a) குர்கான் – ஹரியானா b) சாரன்கா – குஜராத் c) ஜெய்ப்பூர் – ராஜஸ்தான் d) கமுதி – தமிழ்நாடு
61. 2016–ஐநா பருவநிலை மாற்றத்துக்கான உச்சி மாநாடு நடைபெறவுள்ள இடம்.
a) பாரீஸ் b) மராக்கச் c) லிமா d) வார்சா
62. 2016 –ஆம் ஆண்டுக்கான தேசிய “எர்த் ஹவர்” (Earth Hour) தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் எது?
a) ஜெய்பூர் b) ஜெய்சால்மர் c) ராஜ்கோட் d) டேராடூன்
63. உலக பல்லுயிர் பெருக்கம் (Bio-diversity) நிறைந்த நாடுகள் வரிசையில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
a) பிரேசில் b) கொலம்பியா c) சீனா d) இந்தியா
64. ஆசியாவிலேயே மிக தூய்மையான கிராம மாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் எது?
a) சிங்கூர் – மேற்கு வங்காளம் b) மாவ்லினாங் – மேகாலயா c) சில்லாங் – மேகாலயா d) தாலச்சேரி – கேரளா
65. இந்தியாவின் முதல் ‘ஆர்கானிக்’ மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட மாநிலம் எது?
a) உத்தரகாண்ட் b) இமாச்சலப் பிரதேசம் c) சிக்கிம் d) மேகாலயா
66. இந்தியாவில் பசுமை நெடுஞ்சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது எப்போது?
a) 29, செப் - 2014 b) 29, செப் - 2015 c) 5, ஜுன் - 2015 d) 5, ஜுன் - 2016
67. மேற்கு தொடர்ச்சி மலையில் அழிந்து வரும் நிலையில் உள்ள உயிரினம் எது?
a) சிங்கவால் குரங்கு b) வரையாடு c) மார்டென் d) மேற்கூறிய அனைத்தும்
68. இந்திய பல்லுயிரி விருது-2016 பெற்ற பக்கே (Pakke) புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
a) அஸ்ஸாம் b) அருணாசலப்பிரதேசம் c) உத்தரகாண்ட் d) கர்நாடகா
69. “ஏழு மில்லியன் கனவுகள் : ஒரே கோள் : விழிப்போடு நுகர்” எனும் கருப்பொருள் எந்த தினத்துக்கானது?
a) உலக நீர் தினம் b) உலக பூமி தினம் c) உலக வன தினம் d) உலக சுற்றுச்சூழல் தினம்
70. T.S.R.சுப்பிரமணியன் குழுவின் அறிக்கை கீழ்க்கண்ட எந்த பொருண்மையுடன் தொடர்புடையது?
a) சுற்றுச்சூழல் பாதுகாப்பு b) பண்டம் மற்றும் சேவை வரி c) அன்னிய நேரடி முதலீடு d) கல்வி
71. உலகின் தற்போதைய அதிவேக சூப்பர் கணினியின் பெயர் என்ன?
a) செக்காயா b) டைட்டன் c) தியான்ஹே-II d) தைஹு லைட்
72. இந்தியாவின் அதிக திறன்மிக்க சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
a) சகாஸ்ரத் b) ஆதித்யா c) டிஐஎஃப்ஆர்-கிரே d) பரம்யுவா-II
73. மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
a) புனே b) மும்பை c) திருவனந்தபுரம் d) பெங்களூரு
74. வேளாண்மைக்கு தேவையான அடிப்படை தகவல்களை வழங்கும் மத்திய அரசின் வேளாண் மென்பொருள் செயலி எது?
a) E-Nam b) கிசான் சுவிதா c) கிசான்கேந்திரா d) கிசான் சுவேதா
75. வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கோள்களை ஆராய்வதற்கென நாசா விண்வெளிக்கு அனுப்பிய விண்வெளி தொலைநோக்கி விண்கலம் எது?
a) மெரைனர்-3 b) வைகிங்-1 c) கெப்ளர்-2 d) பீனிக்ஸ்
76. பிரெஞ்சு ஓபன்-2016 பெண்கள் பிரிவில் பட்டம் வென்ற கார்பைன் முகுருஸா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a) பிரான்ஸ் b) ஸ்பெயின் c) பெல்ஜியம் d) செர்பியா
77. நிலவுக்கான சந்திராயன்-2 திட்டம் செயல்பாட்டுக்கு வரும் ஆண்டு?
a) 2017 b) 2019 c) 2020 d) 2018
78. இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக் கோள் அமைப்பு (IRNSS) இதுவரை எத்தனை செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது?
a) ஒன்று b) மூன்று c) ஐந்து d) ஏழு
79. ஒலிம்பிக் வீராங்கனை தீபா கர்மாகர் (ஜிம் னாஸ்டிக்) எம் மாநிலத்தைச் சேர்ந்தவர்?
a) அரியானா b) தெலங்கானா c) திரிபுரா d) மணிப்பூர்
80. இந்தியாவில் லிகோ (LIGO) ஈர்ப்பாற்றல் அலைக்கூர்நோக்கு ஆய்வகம் எந்த ஆண் டில் அமைய உள்ளது?
a) 2020 b) 2021 c) 2022 d) 2023
81. Ace Against Odds என்ற நூலை எழுதியவர்
a) மேரிகோம் b) மார்ட்டினா ஹிங்கிஸ் c) சானியா மிர்சா d) லியாண்டர் பயஸ்
82. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகஸ்ட் 28, 2016 அன்று ஏவிய மறு பயன் பாட்டு ராக்கெட் எஞ்ஜினின் பெயர் என்ன?
a) கிரையோ எஞ்சின் b) கிராம்ஜெட் எஞ்சின் c) வேவ் ரைடர் d) பால்கன்
83. ஜிஎஸ்எல்வி-மார்க் 3 (GSLV-MARK III) எப் பொழுது விண்ணில் செலுத்தப்பட உள்ளது?
a) செப்டம்பர்- 2016 b) அக்டோபர்-2016 c) நவம்பர்-2016 d) டிசம்பர்-2016
84. மத்திய அரசு பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவ/மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தவும் தொடங்கி யுள்ள டிஜிட்டல் தொழிற்நுட்பங்கள் எவை?
a) இ-பாடசாலா b) சரண்ஷ் c) சாலாசித்தி d) மேற்கூறிய அனைத்தும்
85. 103-வது இந்திய அறிவியல் மாநாடு நடந்தது
a) ஜம்மு b) மும்பை c) மைசூரு d) கொல்கத்தா
86. ஹிம்மத் எனும் அலைபேசி செயலியை பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கி வைத்த மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
a) கேரளா b) டெல்லி c) தமிழ்நாடு d) புதுச்சேரி
87. காணாமல் போன குழந்தைகள் பற்றிய புகார் பதிவு செய்ய & கண்டறிய நாட்டிலேயே முதல் முதலில் தொடங்கப்பட்ட இணையதளம்?
a) பேட்டி பச்சாவோ b) சைல்டு கேர் c) கோயப்பா d) மேற்கூறிய எதுவுமில்லை
88. மே-11 ஐ தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தவர் யார்?
a) இந்திரா காந்தி b) ராஜீவ் காந்தி c) அடல்பிகாரி வாஜ்பாய் d) மன்மோகன் சிங்
விடைகள்: 38.d 39.b 40.b 41.a 42.c 43.a 44.d 45.a 46.b 47.a 48.c 49.c 50.a 51.a 52.b 53.b 54.b 55.a 56.d 57.c 58.b 59.c 60.b 61.b 62.c 63.a 64.b 65.c 66.b 67.c 68.b 69.d 70.d 71.d 72.a 73.a 74.b 75.c 76.b 77.d 78.d 79.c 80.d 81.c 82.b 83.d 84.d 85.c 86.b 87.c 88.c
எஸ்.சிவகுமார்,
நிர்வாக இயக்குநர், ஜி.கே.லீடர்ஸ், ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், சென்னை