

திறனறிவு பகுதியில் எண் தொடர்கள், எண் கணித தர்க்க அறிவு, புதிர்கள், பகடை, தர்க்க அறிவு, நேரம் மற்றும் வேலை, பரப்பளவு, கன அளவு, தனிவட்டி, கூட்டுவட்டி, விகிதம் மற்றும் சரிவிகிதம், மீச்சிறு பொது மடங்கு (LCM), மீப்பெரு பொது வகுத்தி (HCF), சதவீதம், சுருக்குதல், விவரப் பகுப்பாய்வு விளக்கம், அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள், தகவல்களை விவரங்களாக மாற்றுதல், விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் ஆகிய பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இப்பகுதியில் இருந்து கேட்கப்படும் 25 வினாக்கள் தேர்வு எழுதுபவர்களின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இக் கேள்விகளுக்கு எளிய முறையில் விடையளிக்க சில வழிமுறைகளை கையாளும்பொழுது, எளிதாக மதிப்பெண் பெறலாம்.
அதற்கு வாய்ப்பாடு (Tables) நன்கு தெரிந்திருக்க வேண்டும். அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் இவற்றில் தெளிவு வேண்டும். நேர மேலாண்மை, பயிற்சி, புரிதலுடன் கூடிய எளிய வழிமுறைகள் (Shortcut), சூத்திரத்தை (Formula) கவனத் துடன் பயன்படுத்துதல் போன்ற வழிமுறை களை பின்பற்ற வேண்டும்.
சுருக்குதல் (Simplification): இயற்கணிதம் (Algebra) பாடத்தில் உள்ள (a + b)2, (a + b)3... போன்ற சூத்திரங்களை மனனம் செய்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்
எண் தொடர்கள்: பகு எண்கள் (Prime Numbers), பகா எண்கள் (Composite Numbers), இரண்டின் அடுக்குகள் (22, 23, 24...), மூன்றின் அடுக்குகள் (32, 33, 34...) ஆகியவற்றை மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும்
காலம் மற்றும் வேலை (Time & Work), பரப்பளவு & கனஅளவு, வட்டம், சதுரம், முக்கோணம் மற்றும் செங்கோணம் இவற்றுக் கான சூத்திரங்களை சரியாகத் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் சரியான விடைகளை அளிக்கலாம்.
மீச்சிறு பொது மடங்கு (LCM), மீப்பெரு பொது வகுத்தி (HCF) பகுதியில் சாதாரணமாக எண்களின் காரணிகள், பெருக்கல், வகுத்தல், வர்க்க மூலம் ஆகியவற்றின் மூலமே பதிலளிக்க முடியும். இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வி களை விரைவாகப் புரிந்து கொள்ளும் பயிற்சி இருந்தால் எளிதாக கேள்விகளைக் கையாள லாம்.
திறனறிவு & புத்திக்கூர்மை பகுதியில் கேட்கப்படும் அனைத்து வினாக்களையும் புரிந்து கொள்ளும் விதமே இப்பகுதி எளிமை அல்லது கடினம் என்பதை தீர்மானிக்கப்படுகிறது.
விடைகள்: 22. b 23. a 24. c 25. b 26. a 27. b 28. d 29. b 30. c 31. d 32. d 33. a 34. b 35. c 36. c 37. c 38. a 39. c 40. c 41. a 42. a 43. d
ஜி.கே. லீடர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி, சென்னை.