Published : 24 Oct 2016 11:19 AM
Last Updated : 24 Oct 2016 11:19 AM

டிவிஎஸ் ஆலையில் தயாராகும் பிஎம்டபிள்யூ பைக்!

ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசுக் கார்கள் மட்டுமல்ல மோட்டார் சைக்கிளும் உலக அளவில் பிரபலமானவை. இத்தகைய மோட்டார் சைக்கிள்கள் டிவிஎஸ் மோட்டார் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன. ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு ஆலையில் இவை தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் அனுப்ப பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிளைத் தயாரித்து விற்க ஏற்கெனவே இரு நிறு வனங்களும் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்நிலையில் நிறுவனத்தின் 313 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை இங்கேயே தயாரித்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்ப பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் மோட்டராட் என்ற பிராண்டு பெயரில் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன.

பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்களில் 500 சிசி திறனுக்குக் குறைவான மோட்டார் சைக்கிள் இது மட்டுமே. பொதுவாக இந்நிறுவனம் 500 சிசிக்கு அதிகமான மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரிக்கிறது.

இந்தியாவில் 300 சிசி திறன் கொண்ட வாகன சந்தைக்கு வளமான எதிர்காலம் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்காக ஜி310 ஆர் மாடலை அகுலா என்ற பெயரில் தயாரிக் கிறது. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி யில் நடந்த மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியச் சந்தைக்கான அகுலா மோட் டார் சைக்கிள் அடுத்த ஆண்டு தொடக்கத் தில் விற்பனைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.50 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள் விற்பனைக்கென மோட்டராட் விநியோகஸ்தர்களை பெருநகரங்களில் நியமிக்கும் பணியை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் ஒற்றை சிலிண்டர், எடை குறைந்த மோட்டார் சைக்கிளாகும். நகர சாலைகளுக்கு மட்டுமின்றி நீண்ட தூர பயணத்துக் கும் ஏற்றதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிராங்க் ஷ்லோடர் தெரிவித்தார்.

மூனிச்சில் உள்ள ஆலையில் வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் (ஜி310ஆர்) 9,500 ஆர்பிஎம் மற்றும் 28 நியூட்டன் மீட்டர் டார்க் அளவு 7,500 ஆர்பிஎம் ஆக உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 144 கிலோ மீட்டராக இருக்கும். இதில் ஏபிஎஸ் எனப்படும் பிரேக் அமைப்பு அனைத்து மோட்டார் சைக்கிளிலும் கட்டா யமாக பொறுத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த மோட்டார் சைக்கிளுடன் தனிநபர் விருப்பத்திற்கேற்ப உதிரி பாகங்களை இணைத்து அளிக்கவும் பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

உயர் திறன் மோட்டார் சைக்கிளில் ஐஷர் மோட்டார்ஸின் ராயல் என்பீல்டுக்குப் போட்டியாக ஏற்கெனவே யுஎம் மோட்டார்ஸின் ரெனகேட் வந்துள்ளது. இப்போது ஜெர்மன் தயாரிப்பான பிஎம்டபி்ள்யூ மோட்டார் சைக்கிளின் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பைக் பிரியர்களைப் பொருத்தமட்டில் போட்டி நல்லது. அப்போதுதான் புதிய பைக்குகள் சந்தைக்கு வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x