Published : 02 Oct 2016 10:41 AM
Last Updated : 02 Oct 2016 10:41 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 19: நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை யத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், பொது அறிவுத்தாளில் கேட்கப்படும் கேள்விகளில், ஏறத்தாழ 25% கேள்விகள் நடப்பு கால நிகழ்வுகளிலிருந்து கேட்கப்படுகின்றன. கடந்த இரண்டாண்டுகளில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப்பணியாளர்களுக்கான தேர்வுகளில், நடப்புகால நிகழ்வுகள் (Current Affairs) குறித்த வினாக்களுக்கு அதிக சதவீதம் ஒதுக்கப்பட் டுள்ளது. இத்தேர்வுகளில் கேட்கப்படும் நடப்பு கால நிகழ்வுகளுக்கான வினாக்களை, தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் உடைய தேர் வாளர்கள் மட்டுமே எளிதாக கையாள முடியும். கடந்த இரண்டாண்டுகளில் நடந்த முக்கிய பன்னாட்டு நிகழ்வுகள், (International Events) தேசியச் செய்திகள் (National News), தமிழ் நாட்டு முக்கிய நிகழ்வுகள் (Tamilnadu Important Events), விளையாட்டுச் செய்திகள் (Sport News), முக்கிய நபர்கள் (Personalities), விருதுகள் மற்றும் பரிசுகள் (Awards and Prizes) என பல பரிணாமங்களில் நடப்பு நிகழ்வுகள் பற்றியச் செய்திகளை கீழ்க்கண்ட கேள்விகள் வாயிலாக அறிந்து கொள்வோம்.

1. இந்தியாவின் முதல் தனியார் பசுமை நில விமானத்தளம் அமைந்துள்ள இடம் எது?

a) ஹைதராபாத் b) பெங்களுரு c) கொச்சி d) துர்க்காபூர்

2. 3-ம் பாலினத்தவரால் இயக்கக்கூடிய டாக் ஸியை (Gender Taxi) அறிமுகப்படுத்தியது

a) மகாராஷ்டிரா b) கேரளா c) தமிழ்நாடு d) கர்நாடகா

3. உலகில் அதிக சிந்தனையாளர்கள் (Thinktanks) உள்ள நாடு எது?

a) அமெரிக்கா b) சீனா c) ஐக்கிய ராஜ்ஜியம் d) இந்தியா

4. குடியரசு தினவிழா விருந்தினராக வருகை புரிந்த தலைவர்களின் சரியான கால வரிசையில் அமைந்துள்ளவற்றை தேர்க:

i) பராக் ஒபாமா ii) கிங் ஜிம் கேசர் நம்கேயல் iii) சின்சோ அபே iv) பிரான்காஸ் ஹாலண்டே

a) (i), (ii), (iii), (iv) b) (iv), (iii), (ii), (i) c) (iv), (i), (ii), (iii) d) (iv), (i), (iii), (ii)

5. 42-வது G-7 மாநாடு நடைபெற்ற இடம்

a) புருஸ்செல்ஸ் – பெல்ஜியம் b) ஸ்கீலாஸ் எல்மா – ஜெர்மனி c) ஷிமா – ஜப்பான் d) செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் - ரஷ்யா

6. 2016 ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ் பெகிஸ்தானில் நடந்த போது இணைந்த நாடுகள்

a) இந்தியா – மியான்மர் b) இந்தியா – பங்களாதேஷ் c) இந்தியா - பாகிஸ்தான் d) இந்தியா - கஜகஸ்தான்

7. கீழே கொடுக்கப்பட்டவற்றில் சரியானவை?

i) வடக்கு அட்லாண்டிக் பகுதி அரசாங்கங்களுக்கு இடையேயான ராணுவக் கூட்டு அமைப்பு (NATO) 1949-ல் தோற்றுவிக்கப்பட்டது.

ii) அமெரிக்கா & ஐரோப்பா உட்பட 28 நாடு கள் இதன் உறுப்பினர்கள்

iii) NATO–வின் தலைமையகம் பெல்ஜியத் தின் புருஸ்செல்ஸ் நகரில் அமைந்துள்ளது.

iv) NATO – மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்

a) I, III மட்டும் b) II & IV மட்டும் c) I, II & III மட்டும் d) I, II, III & IV

8. 2016 இந்தியா – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் உண்டான ஒப்பந்தம் எது / எவை?

a) நீர் ஒப்பந்தம் b) சுற்றுச்சூழல், கிளீன் இந்தியா & கிளீன் கங்கா திட்டத்தை வலுப்படுத்தும் ஒப்பந்தம் c) அறிவியல் தொழில்நுட்ப ஒப்பந்தம் d) மேற்கண்ட அனைத்தும்

9. 2016 யுனெஸ்கோ மாநாடு நடைபெற்ற இடம்

a) லிமா b) ரியோ - டி – ஜெனீரோ c) மெக்சிகோசிட்டி d) சாண்டியாகோ

10. சமீபத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய உயிர்கோளப் பட்டியலில் இணைக்கப்பட்ட இந்தியாவின் உயிர்கோள காப்பகம் எது?

a) அந்தமான் நிகோபர் தீவு b) சிம்லிபால் c) கட்ச் வளைகுடா d) அகஸ்திய மலை

11. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சர்வதேச முகைமை அமைந்துள்ள இடம்

a) துபாய் b) அபுதாபி c) இஸ்தான்புல் d) சார்ஜா

12. 2வது பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் இளை ஞர்களுக்கான கூட்டம் நடைபெற்ற இடம்.

a) கோவா b) டெல்லி c) சென்னை d) கவுகாத்தி

13. பின்வரும் நாடுகளில் ஏசியான் (ASEAN) கூட்டமைப்பில் உறுப்பினரல்லாத நாடு எது?

a) சீனா b) வியட்நாம் c) பிலிப்பைன்ஸ் d) லாவோஸ்

14. பொருத்துக

a) எரிபொருள் சேமிப்பு சர்வதேச மாநாடு - 1.லிமா

b) இந்திய கடல் சார் மாநாடு - 2.போபால்

c) அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு - 3.மும்பை

d) உயிர்கோள பாதுகாப்பகங்களுக்கான உலக காங்கிரஸ் - 4. வாஷிங்டன் D.C 5. விசாகப்பட்டினம்

A B C D

a) 4 3 2 1

b) 5 3 4 1

c) 5 4 3 2

d) 2 3 4 1

15. ஐ.நா.வின் பொதுச் செயலாளராக ஒருவர் எத்தனை முறை பதவி வகிக்க முடியும்?

a) 2 முறை b) 3 முறை c) 4 முறை d) வரையறுக்கப்படவில்லை

16. உலக மகிழ்ச்சிக்கான அறிக்கையில் (2016)இந்தியா பெற்றுள்ள இடம் எது?

a) 118 b) 110 c) 92 d) 83

17. சர்வதேச செலாவணி நிதியத்தில் (IMF) கடைசியாக உறுப்பினரான நாடு எது?

a) தெற்கு சூடான் b) குரோஷியா c) நவ்ரோ தீவு d) கஜகஸ்தான்

18. உலகளாவிய திறனுக்கான போட்டி குறியீட் டில் (GCI) இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

a) 89 b) 90 c) 110 d) 120

19. உலக வர்த்தக அமைப்பில் (WTO) 2016-ல் புதிதாக இணைந்த உறுப்பு நாடுகள் எவை?

a) லைபீரியா, கஜகஸ்தான் b) ஆப்கானிஸ்தான், லைபீரியா c) செசல்ஸ், கஜகஸ்தான் d) ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான்

20. கரையிலிருந்து எத்தனை கடல் மைல் தொலைவில் உள்ள பகுதிவரை ஒரு நாட் டுக்கு இறையாண்மை உண்டு?

a) 12 km b) 12 knot mile c) 200 கடல் மைல் d) 20 கடல் மைல்

21. 2012ல் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை பரிசோதனை செய்த நாடு எது?

a) ரஷ்யா b) சீனா c) வடகொரியா d) ஈரான்

22. வன்கொடுமை தடுப்பு புதிய சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு

a) ஜனவரி 2014 b) ஜனவரி 2015 c) ஜனவரி 2016 d) மேற்கூறிய எதுவுமில்லை

23. 1955-ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி குடியுரிமை பெற்ற பாகிஸ் தான் பாடகர் யார்?

a) முகமது சமி b) அட்னான் சமி c) இர்பான் கான் d) முகமது அலி

24. பிரான்ஸ் உதவியுடன் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள்?

a) புதுச்சேரி, சென்னை, மைசூர் b) சண்டிகர், புதுச்சேரி, கோயம்புத்தூர் c) நாக்பூர், டெல்லி, போபால் d) புதுச்சேரி, சண்டிகர், நாக்பூர்

25. மத்திய அரசின் எத்துறையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க 2016-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது?

a) ராணுவப்படை b) துணை ராணுவப்படை c) கடற்படை d) விமானப்படை

26. ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு குறித்து தக வல் அளிப்போருக்கான பாதுகாப்பு சட்டத்தி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை எவை?

a) ஜம்மு காஷ்மீர், மத்திய சிறப்பு காவல்படை b) ஜம்மு காஷ்மீர், மத்திய புலனாய்வு துறை c) ஜம்மு காஷ்மீர், IB d) எதுவுமில்லை

27. 21–வது சட்ட ஆணையத்தின் தலைவர் யார்?

a) பி.கே. ஜெயின் b) ஏ.பி. ஷா c) பி.எஸ். சௌகான் d) எம்சி. ஸ்டால் வார்ட்

28. மரண தண்டனை முற்றிலுமாக ஒழித்த நாடு

a) சூரினாம் b) மடகாஸ்கர் c) மங்கோலியா d) மேற்கண்ட அனைத்தும்

29. தமிழகத்தில் NOTA அறிமுகப்படுத்தபட்டது?

a) R.K நகர் இடைத்தேர்தல் b) ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் c) ஏற்காடு இடைத்தேர்தல் d) திருமங்கலம் இடைத்தேர்தல்

30. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமரால் தொடங்கப்பட்ட திட்டம்

a) மேக்கிங் இந்தியா b) கிளின் இந்தியா c) ஸ்டேன்ட் அப் இந்தியா d) உஜ்வாலா

31. பெண் தொழில் முனைவோர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இணைய தளம்.

a) ஆர்-மித்ரா b) ஹிமாத் c) மஹிளா - இ – ஹாத் d) அனைத்தும்

32. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவர் யார்?

a) லட்சுமி பிரானேஷ் b) ஷீலா பாலகிருஷ்ணன் c) சாந்தா ஷீலா நாயர் d) கன்யாகுமரி

33. விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய, இணையதள வேளாண் சந்தை எப்போது தொடங்கப்பட்டது?

a) ஏப்ரல் 14, 2014 b) ஏப்ரல் 14, 2015 c) ஏப்ரல் 14, 2016 d) எதுவுமில்லை

34. உலக வங்கியின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகளுக்கான அறிக்கை 2016ன்படி விரைவாக வளரும் பெரிய பொருளாதாரம்?

a) அமெரிக்கப் பொருளாதாரம் b) சீனப் பொருளாதாரம் c) இந்தியப் பொருளாதாரம் d) பிரேசில் பொருளாதாரம்

35. இந்தியாவில் அந்நிய முதலீட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

a) அமெரிக்கா b) தென் கொரியா c) சிங்கப்பூர் d) ஆஸ்திரேலியா

36. சர்வதேச சில்லரை வர்த்தக மேம்பாடு குறியீடு-2016 (GRDI) அறிக்கையின் மூலம் தொழில் தொடங்க எளிதான நடைமுறைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம்

a) முதலிடம் b) இரண்டாமிடம் c) மூன்றாமிடம் d) நான்காமிடம்

37. தமிழக அட்வகேட் ஜெனரலாக சமீபத்தில் (ஆகஸ்ட்-2016) நியமிக்கப்பட்டவர்

a) ஏ.எல்.சோமயாஜி b) ஆர்.முத்துக்குமாரசாமி c) பி.சீத்தாராமன் d) நவநீத கிருஷ்ணன்

விடைகள்: 1.d 2.b 3.a 4.d 5.c 6.c 7.d 8.d 9.a 10.d 11.b 12.d 13.a 14.b 15.a 16.a 17.c 18.a 19.b 20.b 21.c 22.c 23.b 24.d 25.b 26.a 27.c 28.d 29.c 30.c 31.c 32.c 33.c 34.c 35.c 36.b 37.b

எஸ்.சிவகுமார்,

நிர்வாக இயக்குநர், ஜி.கே.லீடர்ஸ், ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x