Published : 13 Oct 2016 11:42 AM
Last Updated : 13 Oct 2016 11:42 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா- விடை 26: புவியியல்

புவியியல்

1. பேரண்டம் என்பவை

a) பில்லியன் அண்டங்களை உள்ளடக்கி யவை

b) பேரண்டம் எப்பொழுதும் ஒரே அளவில் இருப்பதில்லை.

c) பேரண்டம் மிகப்பெரியது

d) மேற்கூறிய அனைத்தும்

2. நமக்கு மிக அருகில் உள்ள அண்டம்

a) ஆல்ஃபா சென்டரி

b) பிராக்ஸிமா சென்டரி

c) ஆன்ட்ரோமேடா

d) பால்வழி அண்டம்

3. பின்வருகின்ற கோள்கள் வரிசையில் “அல்பிடோ” (Albbedo) அடிப்படையில் ஏறுவரிசையில் அமைந்துள்ளவை எவை?

a) வியாழன், யுரேனஸ், நெப்டியூன், செவ்வாய்

b) செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன்

c) செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ், வியாழன்

d) நெப்டியூன், யுரேனஸ், வியாழன், செவ்வாய்

4. பின்வருகின்ற கோள்களின் வரிசையில் அளவின் (Size) அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைந்துள்ளவை எவை?

a) பூமி, செவ்வாய், வெள்ளி, புதன்

b) செவ்வாய், பூமி, வெள்ளி, புதன்

c) பூமி, வெள்ளி, செவ்வாய், புதன்

d) புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

5. பூமியில் பாலூட்டிகள் தோன்றிய காலம் எது?

a) பேலியோ சோயிக் b) மீசோசோயிக்

c) சீனோசோயிக் d) எதுவுமில்லை

6. செவ்வாயின் துணைக்கோள் எது?

a) கேனிமேடா b) டைட்டன்

c) மிரான்டா d) ஃயோபோஸ்

7. குள்ளக்கோள்கள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

I. இவை சிறுகோள் பட்டைகளில் காணப்படுகின்றன.

II. இவை சூரியனை வலம் வருகின்றன

III. தன் சுற்றுப்பாதைப் பாதையில் வான் பொருளை நீக்காமல் இருத்தல்

IV. மிகப்பெரிய குள்ளக்கோள் எரிஸ்

a) மேற்கூறிய அனைத்தும் b) I, II & III மட்டும்

c) II, III & IV மட்டும் d) II & IV மட்டும்

8. 2008-ல் பன்னாட்டு வானவியல் ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்ட குள்ளக் கோள்கள் எவை?

a) எரிஸ் மேக்மேக் b) மேக்மேக் ஹௌமியா

c) ஹெமியா சிரஸ் d) சிரஸ் - எரிஸ்

9. பூமியின் மேலடுக்கில் மிக அதிக அளவு காணப்படும் தனிமம் எது?

a) ஆக்ஸிஜன் b) சிலிகான்

c) அலுமினியம் d) இரும்பு

10. பூமியில் மிக அதிகளவில் கிடைக்கப்பெறும் உலோகப்போலி எது?

a) பிஸ்மத் b) ஆன்டிமணி

c) ஜெர்மானியம் d) சிலிகான்

11. இந்தியாவில் எந்த மாநிலம் முதல் பூகம்ப எச்சரிக்கை அமைப்பை நிறுவியது?

a) ஆந்திரப் பிரதேசம் b) உத்தரகாண்ட்

c) மத்தியப் பிரதேசம் d) மகாராஷ்டிரம்

12. பொருத்துக

(கோள்கள்) (புராணப்பெயர்)

A) வெள்ளி - 1.ரோமன் பெண் அழகு கடவுள்

B) செவ்வாய் - 2.ரோமன் போர் கடவுள்

C) வியாழன் - 3.ரோமன் அரசக்கடவுள்

D) சனி - 4.ரோமன் வேளாண் கடவுள்

A B C D

a) 4 3 2 1

b) 3 4 2 1

c) 1 2 3 4

d) 2 1 3 4

13. கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க :

I. கோள் பாதையில் மிக வேகமாகச் சுற்றும் கோள் வியாழன்

II. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றிவர 225 நாட்கள் தேவைப்படுகிறது.

III. செவ்வாய் 7வது மிகப்பெரிய கோள்

இவற்றில் எது/எவை சரியானவை?

a) I மட்டும் b) I & II மட்டும்

c) II & III மட்டும் d) I, II & III

14. மிகப்பெரிய கண்டம் என அழைக்கப்படுவது எது?

a)ஆசியா b)யுரேசியா c)பாஞ்சியா d)லெமூரியா

15. பெந்தலாசா என்பது ஓர் கிரேக்கச் சொல், இதன் அர்த்தம்

a) நீர்க் கோளம் b) பிரமாண்டப் பேராழி

c) எல்லா நீரும் d) நீர்க் கடவுள்

16. பின்வருகின்றவற்றில் எது/எவை உலகின் சிறிய தட்டுகள்?

i) அரேபியன் ii) கரீபியன்

iii) பிலிப்பைன்ஸ் iv) நாஸ்கா

குறியீடு: a) i மட்டும் b) ii & iv மட்டும்

c) i & iv மட்டும் d) எதுவுமில்லை

17. பின்வருகின்றவற்றில் பிளவு பள்ளத் தாக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு

a) காஷ்மீர் & நர்மதா பள்ளத்தாக்கு

b) நர்மதா & தாமோதர் பள்ளத்தாக்கு

c) கிரேட் பிளவு பள்ளத்தாக்கு & தாமோதர் பள்ளத்தாக்கு

d) நர்மதா & கிரேட் பிளவு பள்ளத்தாக்கு

18. மேற்கு தொடர்ச்சி மலை எந்த வகையான மலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு?

a) பிளவு மலை b) பதிர்வு மலை

c) மடிப்பு மலை d) மேற்கூறிய எதுவுமில்லை

19. நிலநடுக்கம் தோன்றுவதற்கு எதிரேயுள்ள புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) எபிசென்டர் b) ஃபோகஸ்

c) ஸ்டேஷன் d) மேற்கூறிய அனைத்தும்

20. மிக வேகமாக பயணிக்கும் அலை எது?

a) மேற்புற அலைகள் b) S அலைகள்

c) முதல்நிலை அலைகள் d) அனைத்தும்

21. பின்வருகின்றவற்றில் எது அல்லது எவை எரிமலைகளுடன் தொடர்பு இல்லாதவை?

i) திறப்பு ii) உமிழுதல் iii) மாக்மா iv) லாவா

குறியீடு: a) i மட்டும் b) ii மட்டும்

c) i & ii மட்டும் d) எதுவுமில்லை

22. பின்வருகின்ற கோள்களில் எது/எவை அதனுடைய வளிமண்டலத்தில் 95%க்கு மேல் கார்பன்-டை-ஆக்ஸைடை கொண்டுள்ளது?

a) புதன் & வெள்ளி b) வெள்ளி & பூமி

c) வெள்ளி & செவ்வாய் d) வெள்ளி & வியாழன்

23. வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடை பெறுகிறது?

a) அயனி அடுக்கு b) நடு அடுக்கு

c) படுகை அடுக்கு d) கீழ் அடுக்கு

24. படுகை அடுக்கில் உயரம் அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிப்பது ஏன்?

a) இந்த அடுக்கில் விமானங்கள் பறப்பதனால்

b) இந்த அடுக்கில் ஓசோன் உள்ளதனால்

c) சூரியனிடமிருந்து வரும் புற ஊதா ஒளியை உட்கிரகிப்பதனால்

d) b & c இரண்டும்

25. வளிமண்டலத்தில் சமவெப்ப அடுக்கு என அழைக்கப்படும் அடுக்கு எது?

a) ட்ரோபோஸ்பியர் b) ஸ்ட்ரேட்டோஸ்பியர்

c) மீசோஸ்பியர் d) அயனோஸ்பியர்

26. வடதுருவ & தென்துருவ விண்ணொளிகள் நடைபெறுவது

a) தெர்மோஸ்பியர் b) அயனோஸ்பியர்

c) மீசோஸ்பியர் d) ட்ரோபோஸ்பியர்

27. பொருத்துக

(உபகரணங்கள்) (பயன்கள்)

A) ஹைக்ரோ மீட்டர் - 1.உயர் வெப்ப நிலையை அளவிட

B) அனிமோ மீட்டர் - 2. வளிமண்டல அழுத் தத்தை அளவிட

C) பாரோ மீட்டர் - 3.காற்றின் வேகத்தை அளவிட

D) பைரோ மீட்டர் - 4. வளிமண்டல ஈரப் பதத்தை அளவிட

A B C D

a) 1 2 3 4

b) 3 4 2 1

c) 4 3 1 2

d) 4 3 2 1

28. பொருத்துக :-

A) ஐசோ தெர்ம் - 1.ஒரே அளவு மேகக் கூட்டம்

B) ஐசோ ஹையட் - 2.ஒரே அளவு வெப்ப நிலை

C) ஐசோ நெஃப் - 3.ஒரே அளவு மழைப்பொழிவு

D) ஐசோ ஹெல் - 4.ஒரே அளவு சூரிய ஒளி

A B C D

a) 4 3 2 1

b) 2 3 1 4

c) 3 2 4 1

d) 3 2 1 4

29. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு

a) 103 மில்லி பார் b) 1030 மில்லி பார்

c) 1013 மில்லி பார் d) 1133 மில்லி பார்

30. பூமியில் எந்த மண்டலம் அமைதி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது?

a) வெப்ப மண்டலம்

b) துணை வெப்பமண்டல அதிக அழுத்தம்

c) பூமத்திய ரேகை குறை அழுத்த மண்டலம்

d) துருவ அதிக அழுத்த மண்டலம்

31. பின்வருவனவற்றில் எது/எவை எல் நினோ விளைவுகள் சாராதது?

I. பெரு கடற்கரைப் பகுதிகளில் 5 முதல் 6 வருடங்கள் வெப்பநிலை துரிதமாக அதிகரிக் கிறது.

II.ஓர் தாழ்வழுத்த நிலை உருவாகிறது.

III.இந்திய பெருங்கடல் பகுதிகளில் வியாபார காற்றினை வலுவிழக்கச் செய்கிறது.

குறியீடு: a) எதுவுமில்லை

b) II c) II & III d) I, II, & III

32. பின்வருகின்றவற்றில் எது அல்லது எவை “எல் நினோ” விளைவுகளால் நடைபெற வில்லை?

a) ஆஸ்திரேலியாவின் புதர் தீ மற்றும் வறட்சி

b) இந்தோனேசியாவில் ஏற்பட்ட பஞ்சம்

c) பிரேசில் & தென்கிழக்கு ஆசிய காட்டு தீ

d) மேற்கூறிய எதுவுமில்லை

33. பொருத்துக

A) லா நினா - 1.நீண்ட அலை

B) புவி கதிர்வீச்சு - 2.அதிக மழை

C) சூரிய கதிர்வீச்சு - 3.கார்பன்-டை-ஆக்சைடு

D) பசுமை இல்ல விளைவு - 4.குறுகிய அலை

5.வறட்சி

A B C D

a) 5 1 4 3

b) 2 4 1 3

c) 5 4 1 3

d) 2 1 4 3

34. பின்வருகின்றவற்றில் எது/எவை வானிலை மாற்றத்துக்கான காரணம் அல்ல?

a) காற்று b) நீராவி c) வளிமண்டல தூசுக்கள்

d) மேற்கூறிய எதுவுமில்லை

35. குதிரை அட்சரேகை என்பது?

a)பூமத்திய ரேகை குறை அழுத்த மண்டலம்

b)துணை வெப்ப மண்டல அதிக அழுத்த மண்டலம்

c)துணை துருவ குறை அழுத்த மண்டலம்

d)துருவ அதிக அழுத்த மண்டலம்

விடைகள்: 1.d 2.c 3.c 4.c 5.c 6.d 7.c 8.b 9.b 10.d 11.b 12.c 13.c 14.c 15.c 16.d 17.d 18.b 19.a 20.c 21.d 22.c 23.d 24.d 25.b 26.b 27.d 28.b 29.c 30.c 31.a 32.d 33.d 34.d 35.b

எஸ்.சிவகுமார்

நிர்வாக இயக்குநர், ஜி.கே.லீடர்ஸ் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x