

“மருத்துவம் படிப்பதற்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்; நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்; அதனால்தான் மருத்துவம் படிக்கவில்லை” என்று மருத்துவக் கனவைக் கைவிட்ட பலர் காரணம் கூறுவார்கள். ஆனால் மருத்துவத் துறையில் இருப்பதற்கு எம்.பி.பி.எஸ். படிப்பைத் தவிர பல மருத்துவப் படிப்புகள் இருக்கவே செய்கின்றன. அத்தகைய சில
மருத்துவ படிப்புகளை வழங்கி வருகிறது சென்னை பள்ளிக்கரணையில் இயங்கி வரும், ‘டாக்டர் காமாட்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் மற்றும் ரிசர்ச்’. மிக எளிமையான பின்னணி கொண்ட மாணவர்களும் மருத்துவம் தொடர்பான படிப்பை படிக்க உதவும் வகையில் இந்தப் படிப்புகள் கற்றுக்கொடுக்கப் படுகின்றன.
இந்நிறுவனத்தின் ஆலோசகர் கே.எம். ராதாகிருஷ்ணன் இது பற்றிக் கூறுகையில், “பல மாணவர்கள் மதிப்பெண்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக மருத்துவம் படிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுகிறார்கள். அவர்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் பட்டப் படிப்பிற்கு மாற்றாக இளங்கலையில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறோம்” என்கிறார்.
‘டாக்டர் காமாட்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் மற்றும் ரிசர்ச்’ கதிரியக்கவியல்
(Radiology), கதிரியக்க சிகிச்சை (Radio Therapy) ஆய்வகத் தொழில்நுட்பம்
(Lab Technology) போன்ற இளங்கலைப் பட்டப் படிப்புகளை
டாக்டர் தமிழ் நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கி வருகிறது. அத்துடன் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து டயாலிசிஸ், ஆய்வகத் தொழில்நுட்பம் போன்றவற்றை டிப்ளமோ படிப்புகளாக வழங்குகிறது.
“டிப்ளமோ படிப்பில் சேர்வதற்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், பி.எஸ்சி.யில் சேர்வதற்குப் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு ஏற்பாடு செய்துதரப்படுவதால் மாணவர்களிடம் இப்படிப்புகளுக்கு வரவேற்பு இருக்கிறது” என்று சொல்கிறார் ராதாகிருஷ்ணன். இந்நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன்.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 வரை வழங்கப்படுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு: www.drkmh.com.