Last Updated : 09 Jul, 2022 04:33 PM

 

Published : 09 Jul 2022 04:33 PM
Last Updated : 09 Jul 2022 04:33 PM

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - 6

16ஆம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 அன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில், 2002க்கும் 2002க்கும் இடையிலான காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் இடையிலான உறவு குறித்த பார்வை இது:

2002 – 2007

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
பிரதமர்கள்: ஏ.பி. வாஜ்பாய், மன்மோகன் சிங்

கலாம், இந்தியாவின் பிரசித்தி பெற்ற அறிவியலாளர். ’மக்களின் ஜனாதிபதி’ என்று அவர் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் பதவியை அந்த அளவுக்கு மக்களுக்கு நெருக்கமாக்கினார். அதற்காக பல நெறிமுறைகளை மீறி மக்களுடன் எளிமையாகப் பழகினார்.

மென்மையான மனிதராக அறியப்படும் கலாம், 2008 இல் மன்மோகன் சிங் அரசாங்கத்தின் மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தனது உறுதியான நிலைப்பாட்டைப் பதிவுசெய்தார்.

2007 – 2012

பிரதிபா பாட்டீல்
பிரதமர்: மன்மோகன் சிங்

அவருடைய பதவிக் காலம் அமைதியானதாகவும் சர்ச்சையற்றதாகவும் இருந்தது. பெண்களின் உரிமை, பெண்களுக்கான அதிகாரம், விவசாயிகளின் பிரச்சினை போன்றவை அவரது மனத்துக்கு நெருக்கமாக இருந்தன.

குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அவர் அறிமுகப்படுத்தினார். பதவிக்காலம் முழுவதும் பிரதமருடன் அவருக்கு நல்லுறவு இருந்தது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x