Published : 06 Jul 2022 04:49 PM
Last Updated : 06 Jul 2022 04:49 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 29

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (ஜூலை 4) அன்று பகுதி - 28இல் ‘பொது - 6 வேதியியல்’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘நடப்பு செய்திகள் - 3’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

நடப்பு செய்திகள் - 3

1. தமிழ்நாட்டில் கீழ்க்கண்டவற்றில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படாமல் நகராட்சியாகவே தொடர்வது எது?
அ. கும்பகோணம்
ஆ. கடலூர்
இ. காஞ்சிபுரம்
ஈ. பழனி

2. ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியா குட்டெரஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ. தென்கொரியா
ஆ. போர்ச்சுகல்
இ. கானா
ஈ. எகிப்து

3. எந்த மாவட்டத்திலுள்ள பொற்பனைக்கோட்டை அகழாய்வுப்பணியில் செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பு வெளிக்கொண்டுவரப்பட்டது?
அ. திருநெல்வேலி
ஆ. தஞ்சாவூர்
இ. புதுக்கோட்டை
ஈ. காஞ்சிபுரம்

4. எம். ஐ.17 வி.5 ஹெலிகாப்டர் எத்தனை கிலோ எடையைச் சுமக்கக்கூடியது?
அ. 8,000 ஆ. 9,000
இ. 10,000 ஈ. 13,000

5. ஜோ பைடன், அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர் ஆவார்?
அ. 41வது ஆ. 43 வது
இ. 46 வது ஈ. 47 வது

6. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எந்த வருடம் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
அ. 2018 ஆ. 2019
இ. 2020 ஈ. 2021

7. தமிழக அரசு 2021இல் அறிமுகப்படுத்திய ‘தகைசால் தமிழர்’ விருது முதன்முறையாக யாருக்கு வழங்கப்பட்டது?
அ. என். சங்கரய்யா
ஆ. ஆர். புகழேந்திரன்
இ. எ. பிரகாஷ்
ஈ. ஜெ. சுரேஷ்

8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
ஆளுநர் மாநிலம்
அ. இல.கணேசன் மணிப்பூர்
ஆ. ஹரிபாபு மிசோராம்
இ. ஆர்.என். ரவி தமிழ்நாடு
ஈ. ஶ்ரீதரன் பிள்ளை பஞ்சாப்

9. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் யார்?
அ. சச்சின் டெண்டுல்கர்
ஆ. அனில் கும்ப்ளே
இ. ராகுல் டிராவிட்
ஈ. ஜவகல் ஶ்ரீநாத்

10. இந்தியாவின் முதல் அணு ஏவுகணை கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். துருவ் எந்த நகரில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்தது?
அ. கொச்சின்
ஆ. விசாகபட்டிணம்
இ. மும்பை
ஈ. கொல்கத்தா

11. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா எந்த வருடம்வரை மீண்டும் தேர்வானது?
அ. 2023 ஆ. 2024
இ. 2025 ஈ. 2026

12. இந்தியா தொடங்கி வைத்த 121 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியில் சமீபத்தில் இணைந்த நாடு எது?
அ. இத்தாலி ஆ. துருக்கி
இ. வியட்நாம் ஈ. ஜப்பான்

13. 2021இல் நடைபெற்ற13ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை எந்த நாடு தலைமையேற்று நடத்தியது?
அ. பிரேசில் ஆ. ரஷ்யா
இ. சீனா ஈ. இந்தியா

14. ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி உலக அளவில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
அ. முதலாமிடம்
ஆ. இரண்டாமிடம்
இ. மூன்றாமிடம்
ஈ. எட்டாமிடம்

15. 2020ஆம் வருடத்தில் உலகின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஜூட்புரி எந்த நாட்டில் உள்ளது?
அ. இந்தியா
ஆ. ஆஸ்திரேலியா
இ. சுவிட்சர்லாந்து
ஈ. பிரான்ஸ்

16. தன்னுடைய சொந்த விண்கலத்தின் மூலம் விண்வெளியைச் சென்றடைந்த பெருமையைப் பெற்ற முதல் நபர் யார்?
அ. ஜெஃப் பெசோஸ்
ஆ. வாலி பங்க்
இ. ஆலிவர் டேமன்
ஈ. ரிச்சர்ட் பிரான்சன்

17. விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?
அ. சோயுஸ்
ஆ. சேலஞ்ச்
இ. சோலார்
ஈ. பீமான்

18. 2021இல் சனிக்கோளும் வியாழன் கோளும் ஒரே நேர்கோட்டில் நெருங்கி வந்தன. இது போன்ற நிகழ்வு மீண்டும் எந்த வருடத்தில் ஏற்படும்?
அ. 2050 ஆ. 2060
இ. 2080 ஈ. 2120

19. ‘மிஸ் இந்தியா 2021’ பட்டத்தை வென்ற மானசா வாராணசி எந்த இந்திய மாநிலத்தை சேர்ந்தவர்?
அ. தெலங்கானா
ஆ. ஆந்திரா
இ. உத்தரப் பிரதேசம்
ஈ. ஹரியாணா

20. மின்னணு முறையில் சொத்துக்கான அட்டை வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன?
அ. கிராம் உஜ்வலா
ஆ. ஸ்வமித்வா யோஜனா
இ. ஆம் ஆத்மி பீமா யோஜனா
ஈ. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

பகுதி 28இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்

1. இ. ஆஸ்மியம்

2. ஆ. ஹீலியம், ஹைட்ரஜன்

3. அ. 3 1 2 4

4. ஈ. A-2 B-1 C-4 D-3

5. இ. ரஷ்யா

6. அ. நீச்சல்குளம் சுத்தம் செய்ய - ஃபுளோரின் (குளோரின்)

7. இ. தக்காளி - டார்டாரிக் அமிலம்
புளி, திராட்சையில்தான் டார்டாரிக் அமிலம் அமிலம் இருக்கிறது. தக்காளியில் இருப்பது ஆக்ஸாலிக் அமிலம்

8. ஆ. ஆக்சிஜன் (அனைத்து அமிலங்களுக்கும் அடிப்படையில் தேவையான தனிமம் ஆக்ஸிஜன் என்று கூறியவர் லவாஸ்சியர்)

9. ஈ. ஹைடிரோ புளுரோ கந்தக அமிலம்

10. இ. அரேபியம்

11. ஈ. தோல் பதனிடுதல் - சோடியம் பென்சாய்ட்
(பொட்டாசியம்-படிகாரம்)

12. அ. கால்சியம் பாஸ்பேட்

13. இ. 12 (நடுநிலைக்கரைசல்
= pH 7, அமிலக் கரைசல் <7,
காரக் கரைசல் >7)

14. இ. 1903

15. ஈ. அதிக எடையுள்ளது - இரும்பு (ஆஸ்மியம்)

16. ஆ. ஒளி முழு அக எதிரொளிப்பு

17. இ. சின்னபார்

18. ஆ. மக்னீசியம் சல்பேட்

19. அ. நைட்ரஸ் ஆக்சைடு

20. இ. பார்சன்ஸ்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x