Published : 05 Jul 2022 01:07 PM
Last Updated : 05 Jul 2022 01:07 PM

நானும் வரலாமா? - கதை - ஜி .சுந்தரராஜன்

செண்பகக் காட்டில் முயல், அணில், மான் ஆகிய மூன்றும் நட்புடன் வாழ்ந்துகொண்டிருந்தன. ஒரு நாள் பக்கத்து காட்டில் நடக்கும் திருவிழாவைக் காணப் புறப்பட்டன. வழியில் முதலையைக் கண்டனர்.
"நண்பர்களே, எங்கே கிளம்பிவிட்டீர்கள்?" என்று ஆர்வத்துடன் கேட்டது முதலை.


"பக்கத்து காட்டில் திருவிழா. அதில் பங்கேற்கவே செல்கிறோம்" என்று உற்சாகமாகக் கூறியது மான்.
"அப்படியா! நானும் தங்களோடு வருகிறேன். சேர்ந்தே செல்லலாம்" என்றது முதலை.
உடனே சிரித்தது முயல்.
"எதற்காகச் சிரிக்கிறாய்? நான் திருவிழாவைக் காண வரக் கூடாதா?”
"நீங்கள் வரக் கூடாது என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் மூவருமே வேகமாக ஓடும் சக்தி படைத்தவர்கள். நீங்கள் அப்படியல்ல. மெதுவாக ஊர்ந்து செல்வீர்கள். உங்களோடு சேர்ந்து சென்றால் திருவிழாவே முடிந்துவிடாதா?" என்று பதில் அளித்தது அணில்.
"நீங்கள் சொல்வதும் உண்மைதான். திரும்பி வந்து, உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று வழியனுப்பி வைத்தது முதலை.
முதலையிடம் விடைபெற்றுக்கொண்டு மூன்றும் வேகமாக ஓட ஆரம்பித்தன.


பக்கத்து காட்டிற்குச் செல்லும் வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதிகமான மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆசையுடன் வந்த மூன்றும் ஆற்றில் நீர் ஓடுவதைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றன.
"நண்பா, ஆற்றில் இப்படித் தண்ணீர் ஓடுகிறதே... இதை எப்படிக் கடந்து செல்வது?" என்று வருத்தத்துடன் சொன்னது முயல்.
"ஆம். அதுதான் எனக்கும் புரியவில்லை. நாம் திருவிழாவிற்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது” என்றது மான்.
"வாருங்கள், நாம் அதிக தூரம் ஓடிவந்துவிட்டோம். அந்த மர நிழலில் சற்று ஓய்வெடுத்துவிட்டு, பின்பு ஆற்றில் நீர் குறைகிறதா என்று பார்க்கலாம்."
சற்று நேரத்தில் ஆற்றில் நீந்தியபடியே வந்து சேர்ந்தது முதலை.


"என்ன செய்கிறீர்கள் மூவரும்? திருவிழாவுக்கு நேரமாகவில்லையா?” என்று கேட்டது முதலை.
"ஆற்றில் நீர் அளவுக்கு அதிகமாக ஓடுகிறது. இதை எங்களால் எப்படிக் கடக்க முடியும்?" என்று முயல் மிகவும் வருத்தத்தோடு சொன்னது.
"இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்? நான் உங்களை அக்கரையில் சேர்த்துவிடுகிறேன் " என்று மகிழ்ச்சியாகச் சொன்னது முதலை.
"அப்படியா! எப்படி?" என்று ஆர்வமாகக் கேட்டது மான்.

"நீங்கள் மூவரும் என் மீது ஏறி அமர்ந்துகொள்ளுங்கள். எளிதாக அக்கரைக்குச் சென்றுவிடலாம்."
"மிக்க நன்றி அண்ணா. நாங்கள் உங்கள் மனம் புண்படும்படி பேசினாலும் நீங்கள் எங்களை அன்போடு பார்க்கிறீர்கள். எங்களை மன்னித்துவிடுங்கள்” என்றது முயல்.

"இது ஒரு விஷயமா? முதுகில் ஏறுங்கள். விரைவில் அக்கரையில் விடுகிறேன்” என்று முதலை சொன்னதும், மூன்றும் ஏறிக்கொண்டன.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x