பொறியியல் படிப்பு: இணையவழிக் கலந்தாய்வுக்குத் தயாரா?

பொறியியல் படிப்பு: இணையவழிக் கலந்தாய்வுக்குத் தயாரா?
Updated on
3 min read

தமிழ்நாட்டில் பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நடைமுறைகளும் தொடங்கிவிட்டன.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு தற்போது இணையம் வழியாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்தபடி இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்கிற இணையதளத்தில் ஜூலை 19ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வுகளும், ஐஐடி-யில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வுகளும் ஒரே நேரத்தில் வந்ததால், ஏப்ரல் 21ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஐஐடியில் சேர்வதற்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு (JEE Main Exam 2022) முதல் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. புதிய அறிவிப்பின்படி, பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான முதல் அமர்வு ஜூன் 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கான அமர்வு 2 ஜூலை 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஐஐடிக்கான நுழைவுத் தேர்விலும், தமிழ்நாடு அரசின் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்விலும் ஒரே நேரத்தில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சிறந்த கல்லூரிக்கான வரையறை படிப்பை மட்டும் சார்ந்தது அல்ல, கல்லூரியின் சூழலையும் உள்ளடக்கியது. கலந்தாய்வுக்குச் செல்லும் முன் கல்லூரியின் தரம் பற்றி முடிந்தவரை தெரிந்துகொள்வது நல்லது. NIRF (National Instiute Ranking Framework) ரேங்கிங், இந்திய அளவில் கல்லூரியின் தரம் பற்றித் தெரிந்துகொள்ள உதவும்.

எந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம்?

பொறியியல் படிப்பு சர்க்கியூட் கோர்சஸ் (‘Circuit Courses’), நான்-சர்க்கியூட் கோர்சஸ் (‘Non-Circuit Courses’) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைச் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் படிப்புகள். மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்தும் நான்-சர்க்கியூட் வகைக்குள் அடங்கும்.

வேலைவாய்ப்பின் அடிப்படையில் சர்க்கியூட் வகை படிப்புதான் பலருடைய விருப்பத் தேர்வாக உள்ளது. ஆனால், இன்றைய தேவை அடிப்படையில் இல்லாமல், நான்கு வருடங்கள் கழித்து எந்தப் பிரிவுக்குத் தேவையிருக்கும் என்ற அடிப்படையில் படிப்பைத் தேர்வுசெய்வதே புத்திசாலித்தனம். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய படிப்புகள் இதற்கு உதாரணம். குறிப்பாக ‘Information Science in Engineering’, ‘Information Science and Technology’ போன்றவை.

இணையவழிக் கலந்தாய்வு

2018இல் ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. https://www.tneaonline.org/ என்கிற இணையதளத்தின் மூலம், மாணவர்கள் தாங்கள் சேரவேண்டிய படிப்பையும் கல்லூரியையும் வீட்டிலிருந்தபடியோ அருகிலிருக்கும் TNEA மையத்திலோ தேர்வுசெய்துவிட முடியும்.

விண்ணப்பத்துக்கான தகவல்களைப் பதிவுசெய்தல், பதிவுசெய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விருப்பமான கல்லூரியைத் தேர்வுசெய்தல், விரும்பும் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தல், தற்காலிக இட ஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் என அனைத்தும் இணையம் வழியாகவே நடத்தப்படுகிறது.

கல்வித் தகுதி

பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடைய படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) பாடங்களில் எடுத்த மதிப்பெண்களும், பொறியியல் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் பயின்றவர் களுக்குத் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு - செயல்முறைப் பாடங்களுடன் தொடர்புப் பாடங்களாக இருக்கும் கணிதம், இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். இப்பாடங்களில் பொதுப்பிரிவினர் – 45 சதவீத மதிப்பெண்களும், பிசி/ எம்பிசி/ டிஎன்சி – 40 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் – 40 சதவீத மதிப்பெண்களும் குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது தேவைப்படுபவை:

l மாணவர்களின் ஒளிப்படம்

l தங்களது / பெற்றோரது அலைபேசி எண்

l மின்னஞ்சல் முகவரி

l இணைய வழியில் பணம் செலுத்துவதற்குத் தேவைப்படும் வங்கி அல்லது கார்டு விவரங்கள்

l இணையம் வழியாகப் பணம் செலுத்த முடியாதவர்கள் “THE SECRETARY, TNEA, CHENNAI – 25” எனும் பெயரில் செலுத்தப்பட்ட வரைவோலை (D.D)

l கல்வி, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள்

l முதல் பட்டதாரி கல்விக் கட்டணச் சலுகைக்கான சான்றிதழ்கள்

l மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், விளையாட்டுக்கான சிறப்பு இட ஒதுக்கீடுக்கான சான்றிதழ்கள்

முக்கியத் தேதிகள்

ஜூலை 22 - அனைத்து விண்ணப்பதாரர் களுக்கும் சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜூலை 20 முதல் ஜூலை 31 வரை - மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு சேவை மையங்களின் மூலமாக நடைபெறும்.

ஆகஸ்ட் 8 - தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 9 முதல் 14 வரை – தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

ஆகஸ்ட் 16 முதல் 18 வரை - மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 14 வரை - அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு நடைபெறும்.

அக்டோபர் 15, 16 - துணைக் கலந்தாய்வு நடைபெறும்.

அக்டோபர் 17,18 - அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

கூடுதல் தகவல்கள்

https://www.tneaonline.org/ எனும் இணையத்தில் இடம்பெற்றிருக்கும் வழிமுறை களைப் படிப்பதன் மூலம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். தங்கள் இருப்பிடத்துக்கு அருகிலிருக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களிலும் கூடுதல் தகவல்களைப் பெற முடியும். அலுவலக வேலை நாட்களில் 0462-2912081, 82, 83, 84

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in