Published : 03 Jun 2022 05:15 PM
Last Updated : 03 Jun 2022 05:15 PM

மாற்றுத்திறனாளிகளுக்காகப் புதுவித ஸ்கூட்டர்

ஹரிராம்பிரசாத்


மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனித்துவமான வாகனத்தை சென்னையைச் சேர்ந்த யாளி மொபிலிட்டி ஸ்டார்ட் அப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மாற்றுத்தினாளிகளுக்காக வடிவமைக்கப்படும் மூன்று சக்கர வாகனத்துக்கு மாற்றாக இந்த வாகனம் இருக்கும்.

பொதுவாக சாதாரண ரீதியில் இரு சக்கர வாகனங்களையே மாற்றி மூன்று சக்கர வாகனங்களாகப் பயன்படுத்தும் வழக்கம்தான் இருக்கிறது. ஆனால், இந்த மூன்று சக்கர வாகனம் மாற்றுத்தினாளிகளுக்குப் பயணிக்க வசதியாக இருக்காது. இதில் ஏறி அமர்வது மிகச் சிரமமான விஷயம். மற்றவர்களின் துணையும் தேவைப்படலாம். பயணம் என்பது மனதுக்கு இதம் தருவது. அதற்குச் சிரமப்படுவது பயணத்தையும் ஒவ்வாததாக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிர்கொள்ளும் இந்தச் சிக்கலை மனத்தில் கொண்டு இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்களது புதிய வடிவமைப்பு முயற்சியைத் தொடங்கியது. தங்கள் சக்கர நாற்காலியோடு யாருடைய உதவியும் இல்லாமல் அப்படியே இந்த வாகனத்தில் ஏறிக் கொள்ள முடியும். உங்கள் சக்கர நாற்காலியை அப்படியே இந்த வாகன அமைப்புடன் பொருத்திக்கொள்ளாலம். இதற்கு வேறு யாரின் உதவியும் தேவை இல்லை. உள்ளே அமர்ந்தபடி அப்படியே வாகனத்தை இயக்கவும் முடியும்.

இந்த வாகனம் பேட்டரியில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியுடன் சேர்த்து இதன் மொத்த எடை 160 கிலோ. இது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 1.5 கிலோ வாட் திறன் உள்ள இரண்டு பேட்டரிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் செயல்பாட்டை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்வுக்கு கடந்த மாதம் செய்து காண்பிக்கப்பட்டது. சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x