உலக பால் தினம்: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பால்

உலக பால் தினம்: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பால்
Updated on
2 min read

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையால் ’உலக உணவு’ எனப் பால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களுக்கான வரம் அது. டீ, காபி, தயிர், மோர், வெண்ணெய், நெய் என நம் வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்கும் அது, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களுள் மிகவும் இன்றியமையாத ஒன்றும் கூட.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதில் இருக்கும் நன்மைகள் கணக்கிலடங்காதவை. உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் அதில் நிறைந்துள்ளன. தினமும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக அருந்துவது உடல்நலனுக்கு உகந்தது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பாலில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள்

சுவையும் சத்துக்களும் நிறைந்திருக்கும் பாலில் கால்சியம், வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ், 0.94 சதவீத அளவில் புரதம், 1.08 சதவீத அளவில் கொழுப்பு, 1.36 சதவீத அளவில் கார்போஸ் ஆகியவை உள்ளன.

தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்

  • தினசரி காலையில் சூடான பாலை உட்கொள்வது நல்லது. எலும்புகளை வலிமையாக்கப் பாலில் அதிக அளவில் இருக்கும் கால்சியம் உதவும். கால்சியம் எலும்புகளை வலுவாக்கும், கீல்வாத நோயின் தாக்கத்தைத் தடுக்கும்.
  • நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினசரி காலையில் பாலை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
  • நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், காலையில் சூடான பாலை உட்கொள்ள வேண்டும். பாலில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை நீக்க உதவுகின்றன.
  • தினசரி காலையில் பால் உட்கொள்வதன் மூலம் பலவீனத்தைத் தவிர்க்கலாம், உடலை உற்சாகப்படுத்தலாம்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் காலையில் சூடான பாலைக் குடிக்க வேண்டும். பாலில் இருக்கும் கால்சியம், ஏராளமான வைட்டமின்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.
  • தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் இரவில் பால் பருக வேண்டும். தூக்கம் தொடர்பான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கப் பால் உதவுகிறது.
  • இரவில் பால் உட்கொள்வதன் மூலம், செரிமானப் பிரச்சினைகளைக் களையலாம்.
  • பெண்கள் தங்கள், முகத்தைப் பொழிவுடன் வைத்திருக்கத் தினசரி இரவில் பால் உட்கொள்ள வேண்டும்.
  • ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பாலை அருந்துவது நல்லது.
  • சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.
  • பாலில் வைட்டமின் பி12 உள்ளது. வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது
  • பாலில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்ளும்

பால் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள்

  • பால்கோவா, பாயசம், பால் கொழுக்கட்டை, போன்ற பல வகையான இனிப்புகள் பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
  • ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக் போன்றவையும் பாலிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன
  • சீஸ், கோவா, கீர், பன்னீர் போன்றவையும் பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in