Published : 28 May 2022 06:15 PM
Last Updated : 28 May 2022 06:15 PM
மனித இனம் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வான மாதவிடாயை அருவருப்புடனும் புறக்கணிப்புடனும்தான் அணுகுகிறோம். பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதுகூடக் கிடையாது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதற்கான வழிகளும் இல்லை.
பெரும்பாலான சிறுமிகளும் பெண்களும் பழந்துணியைத்தான் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்துகிறார்கள். சானிட்டரி நாப்கின், டாம்பூன், மாதவிடாய்க் குப்பி போன்றவை பெருவாரியான பெண்களைச் சென்றடையவில்லை. மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வழியில்லாததால் பெரும்பாலான பெண்கள் பள்ளியைவிட்டு நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
மாதவிடாய் நாட்களின் சுத்தம் குறித்த விழிப்புணர்வோடு மாதவிடாய் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வை நீக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதுதான் ‘உலக மாதவிடாய் சுகாதார நாள்’. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெறும் என்பதால் ஆண்டுதோறும் மே 28 அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘2030-க்குள் மாதவிடாயை வாழ்க்கையின் இயல்பான நிகழ்வாக்குவோம்’ என்பதுதான் இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
மாதவிடாய் குறித்த உண்மைகளைவிடக் கற்பிதங்களே மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றன. அதனால்தான் பெண்கள்கூட அந்தக் கற்பிதங்களை விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறார்கள். மாதவிடாய் குறித்த கற்பிதங்களையும் உண்மைகளையும் பிரித்து அறிவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT