Published : 16 May 2022 03:33 PM
Last Updated : 16 May 2022 03:33 PM

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 7

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) அன்று வெளியிடப்பட்ட பகுதி-6 இல் ‘தமிழ் நாடு -2 (தமிழக அரசியல் - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று பொது - 1 (உலகம் - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன:


பொது - 1 (உலகம் - அ)

1. பொருத்துக:
A. அலெக்சாண்டர் - 1.ஜெர்மனி
B. ஹிட்லர். - 2. ரஷ்யா
C. கோசிஜின். - 3. அமெரிக்கா
D. ரூசோல்ட். - 4. கிரேக்கம்
அ) A-4, B-1, C-2, D-3
ஆ) A-1, B-4, C-3, D-2
அ) A-4, B-1, C-3, D-2
அ) A-1, B-4, C-2, D-3

2. பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்க:
நாடு சிறப்பு
அ) பின்லாந்து - ஏரிகள்
ஆ) துருக்கி. - நோயாளி
இ) நெதர்லாந்து - தானியங்கள்
ஈ) நார்வே. - சூரிய உதயம்

3. சரியாக பொருந்தியதை தேர்ந்தெடுக்க:
நாடு நாணயம்
அ) இலங்கை - ரூபாய்
ஆ) மலேசியா - ரியாத்
இ) ஜப்பான் - பீசோ
ஈ) சிங்கப்பூர் - யென்

4. விவேகானந்தர் உலக சமய மாநாட்டில் பங்கேற்று வரலாற்று சிறப்புமிக்க உரை நிகழ்த்திய நகரம் எது?
அ) லாஸ் ஏஞ்சல்ஸ்
ஆ) சிகாகோ
இ) வாஷிங்டன்
ஈ) நியூ யார்க்

5. கீழ்க்கண்டவற்றுள் எந்த மொழி ஐக்கிய நாடுகள் அவையின் அலுவல் மொழி அல்ல?
அ) பிரெஞ்ச். ஆ) சீனம்
இ) லத்தீன். ஈ) ஸ்பானிஷ்

6. ஐக்கிய நாடுகள் அவையில் தொடர்ந்து எட்டு மணி நேரம் உரை நிகழ்த்திய இந்தியர் யார்?
அ) வாஜ்பாய் ஆ) பி.என்.பகவதி
இ) வி.கே.கிருஷ்ண மேனன் ஈ) சசி தரூர்

7. ஐ.நா. சார்பு சர்வதேசத் தொழிளாலர் அமைப்பு எந்த நகரில் தன் தலைமையிடத்தை கொண்டுள்ளது?
அ) பாரீஸ். ஆ) தி ஹேக்
இ)வாஷிங்டன் ஈ) ஜெனீவா

8. வருடந்தோறும் உலக மக்கள்தொகை நாள் என்றைக்கு கொண்டாடப்படுகிறது?
அ) ஆகஸ்ட் 12
ஆ) ஜூலை 11
இ) அக்டோபர் 24
ஈ) டிசம்பர் 10

9. ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமையிடம் எந்த நகரில் உள்ளது?
அ) பெர்லின். ஆ) பாரீஸ்
இ) லண்டன். ஈ) பிரஸ்ஸெல்ஸ்

10. கீழ்க்கண்ட எந்த உலக அமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக இல்லை?
அ) G - 5. ஆ) G - 15
இ) G - 20 ஈ) G - 24

11. பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்க :
நாடு தலைநகர்
அ) ஆஸ்திரியா - வியன்னா
ஆ) எகிப்து - கெய்ரோ
இ) நெதர்லாந்து - ஆம்ஸ்டர்டாம்
ஈ) இராக் - டெஹ்ரான்

12. 2020 - ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
அ)டோக்கியோ
ஆ) லண்டன்
இ) லாஸ் ஏஞ்சல்ஸ்
ஈ) அட்லாண்டா

13. கீழ்க்கண்ட நாடுகளில் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இல்லாத நாடு எது?
அ) சீனா. ஆ) இந்தியா
இ) ரஷ்யா. ஈ) சுவீடன்

14. யூரோ நாணயம் எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) 1997 ஆ) 1998
இ) 1999 ஈ) 2000

15. எந்த வருடம் சர்வதேச ஒட்டக இன ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது?
அ) 2022 ஆ) 2023
இ) 2024 ஈ) 2025

16. பூடான் நாட்டின் தலைநகரம் எது?
அ) திம்பு ஆ) காட்மண்டு
இ) காபூல் ஈ) நேபிய்டா

17. உலகளவில் பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது நாடு எது?
அ) அமெரிக்கா ஆ) சீனா
இ) பிரேசில் ஈ) கனடா

18. எஸ்தோனியா நாடு எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?
அ) ஆசியா ஆ) ஆப்பிரிக்கா
இ) ஐரோப்பா ஈ) வட அமெரிக்கா

19. ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான பகுதியான கிளிமஞ்சாரோ எந்த நாட்டில் உள்ளது?
அ) தென்னாப்ரிக்கா
ஆ) டான்சானியா
இ) நைஜீரியா
ஈ) மொராக்கோ

20. உலகில் மிகவும் உலர்ந்த பகுதியாக கருதப்படும் பாலைவனம் எது?
அ) சகாரா ஆ) தார்
இ) கலகாரி ஈ) அடகாமா

பகுதி-6இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்:


1. ஆ. ஓமாந்தூர் பி. ராமசாமி

2. இ. சி. ராஜகோபாலாச்சாரி

3. அ. எம்.ஜி. ராமச்சந்திரன்

4. இ. மு. கருணாநிதி

5. ஆ. நெடுஞ்செழியன்

6. ஆ. நெடுஞ்செழியன்

7. இ. டி.பிரகாசம்

8. ஈ. மு.கருணாநிதி

9. அ. 1921-1926

10 ஆ. அ.தி.மு.க.(1972)

11. ஈ. 1891

12. இ. 1919

13. அ. முகமது இஸ்மாயில்

14. இ. ஜீவா என்கிற பா.ஜீவானந்தம்

15. அ. பி. ராமமூர்த்தி

16. ஆ. வேலு நாச்சியார்

17. அ) மூவலூர் இராமமிர்தம்

18. ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

19. இ) தில்லையாடி வள்ளியம்மை

20. ஈ) 1936

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x