Last Updated : 10 May, 2022 07:53 AM

 

Published : 10 May 2022 07:53 AM
Last Updated : 10 May 2022 07:53 AM

சேதி தெரியுமா?

ஏப்.29: தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேந்தராகத் தமிழக முதல்வர் இருப்பதற்கான சட்ட மசோதா தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

ஏப்.29: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 2: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இறந்த உடலிலிருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டது.

மே 2: மணிலாவில் நடைபெற்ற ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிந்து வெல்லும் இரண்டாவது பதக்கம் இது.

மே 3: சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மே 4: பேரறிவாளன் வழக்கில், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களின் வழக்கில் நகர்வுகள் இல்லாதபட்சத்தில் நீதிமன்றமே அந்த நபர்களின் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மே 5: தமிழகச் சட்டப் பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x