Published : 24 Apr 2022 06:38 AM
Last Updated : 24 Apr 2022 06:38 AM

தலைவாழை | முலாம்பழ மில்க்‌ஷேக்

வாட்டுகிற வெயிலுக்கு இதமாகக் குளிர்பானங்கள் குடிப்பதுதான் பலரது விருப்பத் தேர்வாக இருக்கிறது. குளிர்பானங்களுக்குப் பதில் வீட்டிலேயே பழச்சாறு தயாரித்துப் பருகலாம் என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். அந்தந்தப் பருவத்தில் விளைகிற பழங்களைச் சாப்பிடுவதுதான் நல்லது என்று சொல்லும் இவர் கோடைக்காலத்தில் அதிகமாக விளையும் முலாம்பழத்தில் மில்க் ஷேக் செய்யக் கற்றுத் தருகிறார்.

என்னென்ன தேவை?

நன்கு கனிந்த முலாம்பழத் துண்டுகள் - 1 கப்
காய்ச்சி ஆற வைத்த குளிர்ந்த பால் - 2 கப்
பொடித்த சர்க்கரை/கல்கண்டு/வெல்லம்/பனைவெல்லம்/
பனங்கற்கண்டு ஆகியவற்றில் ஒன்று - 50 கிராம்
ஐஸ்கட்டி - 2 துண்டுகள்

எப்படிச் செய்வது?

முலாம்பழத் துண்டுகளோடு பால், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு நுரைபொங்க அடித்து எடுங்கள். வடிகட்ட வேண்டாம், அப்படியே பருகலாம்.

சுவை புதிது

பாரம்பரியமும் புதுமையும் இணைந்த சமையலில் வல்லவரா நீங்கள்? உங்கள் சமையல் திறமைக்குக் களம் அமைத்துத் தருகிறோம். காலத்துக்கு ஏற்ப அனைவருக்கும் உகந்த சமையல் குறிப்புகளை எழுதி அனுப்புங்கள். ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முகவரி: ‘பெண் இன்று’, இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை-600002.
மின்னஞ்சல்: penindru@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x