Published : 05 Apr 2016 11:42 am

Updated : 05 Apr 2016 11:42 am

 

Published : 05 Apr 2016 11:42 AM
Last Updated : 05 Apr 2016 11:42 AM

ஆங்கிலம் அறிவோமே - 104: காதோரத்தில் தீ!

104

என் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டை adjacent house எனலாமா? Adjoining house எனலாமா? அல்லது வேறு விதமாகக் குறிப்பிட வேண்டுமா?

அந்த வீட்டை “My house” என்று நீங்கள் குறிப்பிட முடியாது - அதற்கும் நீங்கள் சொந்தக்காரராக இருந்தாலொழிய. (‘பினாமியாக இருந்தால்?’ என்று துணைக் கேள்வி கேட்கக் கூடாது).


மற்றபடி உங்கள் வீட்டிலிருந்து இரண்டு மூன்று வீடுகள் தள்ளியிருந்தால்கூட அது adjacent house அதாவது அருகிலுள்ள வீடு. Adjoining house என்றால் உங்களுக்கு அடுத்த வீடாக அது இருக்க வேண்டும்.

     

Insurgent என்பதற்கும் belligerent என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Belligerent என்பது, சர்வதேசச் சட்டத்தின்படி போர் என்று கருதக்கூடிய ஒன்றில் ஈடுபடும் நாடு அல்லது மனிதனைக் குறிக்கிறது (Adjective ஆகப் பயன்படுத்தப்படும்போது அது வெறுப்புணர்வையும் எதிர்ப்பையும் குறிக்கிறது - The mood of the members in the conference hall was belligerent).

Insurgency என்பது ஆட்சிக்கு எதிரான போராட்டம். இப்படிப் போரிடுபவர் insurgent.

ஐ.நா. சபை மற்றும் சர்வதேசச் சட்டம் ஆகியவை insurgency-ஐ உள்நாட்டு விஷயம் என்ற கருதுகின்றன. எனவே, அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது. ஐ.நா.வும் தலையிடாது. ஆனால், இந்தப் போராளிகள் நாட்டின் ஒரு பகுதியையே கைப்பற்றிக்கொண்டு கட்டுப்படுத்தத் தொடங்கினால் அதை belligerency என்று சர்வதேசச் சட்டம் ஏற்றுக் கொள்ளும்.

ராணுவம் தொடர்பான வேறு சில வார்த்தைகளையும் தெரிந்து கொள்ளலாமா?

Barrage என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து தாக்குவது. சில சமயம் வி.ஐ.பி.யைப் பார்த்து பல நிருபர்கள் ஒரே சமயத்தில் எக்கச்சக்கமான கேள்விகளை வீசக் கூடும். இதுபோன்ற ‘தாக்குதலை’ ‘a barrage of questions’ என்று கூறுவார்கள்.

Bunker என்றால் எரிபொருளைச் சேமித்து வைக்கக் கூடிய ஒரு பெரிய பெட்டி அல்லது கொள்கலன்.

Carnage எனறால் மிக அதிக மக்களைக் கொல்வது.

Combat என்றால் ராணுவப் படைகளுக்கிடையே உண்டாகும் மோதல். சில சமயம் வன்முறை அல்லாத மோதலைக்கூட combat என்பதுண்டு - Electoral combat என்பதுபோல.

Conscription என்றால் கட்டாய ராணுவ சேவைக்கான பட்டியல் என்று கூறலாம். Counter attack என்றால் பதில் தாக்குதல்.

இந்த இடத்தில் counter என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். வங்கிகளிலும், ரயில் முன்பதிவு நிலையங்களிலும் உள்ள counter-களைப் பற்றி நமக்குத் தெரியும்.

மற்றபடி நாணயத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறு டோக்கன்கள் கூட counters எனப்படுவதுண்டு.

எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் counters என்பதுண்டு. (The counter indicated how many pictures have been taken).

Adverb ஆக counter என்ற வார்த்தை ‘எதிராக அல்லது எதிர்திசையில்’ என்ற பொருளில் பயன்படுகிறது.

மற்றபடி encounter குறித்து போன பகுதியிலேயே பார்த்துவிட்டோம்.

     

கிருதாவை எதற்காக sideburns என்கிறோம் என்ற ஒரு கேள்வியைக் கேட்டிக்கிறார் ஒரு வாசகர். நியாயம்தான். அந்தப் பகுதியில் யாரும் தீயை மூட்டிவிடவில்லையே!

விஷயம் இதுதான். அமெரிக்க உள்நாட்டுப் போரில் அங்கம் வகித்த ஒரு ராணுவத் தளபதியின் பெயர் Ambrose Burnside. பிரம்மாண்டமான கிருதாக்களை வளர்த்துக்கொண்ட இவரின் பெயரே கொஞ்சம் முன்பின்னாகக் கிருதாவுக்கு ஆங்கில நாமகரணமானது.

     

At என்கிற preposition-ஐ எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதைப் பாரப்போம்.

நேரம் அல்லது காலத்தைக் குறிக்க at பயன்படுகிறது. We shall meet at 5.00 p.m. The train leaves at 8.00 a.m.

இடத்தைக் குறிக்கவும் at பயன்படுகிறது. I am at my office. I bought these books at the Book Fair.

தூரம் அல்லது தொலைவைக் குறிக்கவும் at என்பது இணைப்பு வார்த்தையாகப் பயன்படுகிறது. The target was at a distance. Let us keep these two persons at a distance.

தற்போதைய நிலையைக் குறிக்கவும் at பயன்படுகிறது. I guess you must be at your studies now. He is at work now.

வேகத் தன்மை, பொருளின் விலை ஆகியவற்றைக் குறிக்கவும் at பயன்படுகிறது. This novel is priced at Rs.200/-. The motorbike runs at a speed of 70 kilometers an hour.

ஒப்பீடுகளில் மிக உச்சமானவை superlative. இவற்றில் best அல்லது least போன்றவற்றுடன் at பயன்படுத்தப்படுகிறது. I am at my best in this game. You must get at least 60 percent in this test.

     

Marriage என்ற வார்த்தைக்கும், Wedding என்ற வார்த்தைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Marriage என்பது இரு நபர்களுக்கிடையே உள்ள நீண்டகால இல்லற உறவு. Wedding என்பது திருமணம் தொடர்பான சடங்குகள்.

Please attend our wedding என்பதுதான் சரி. Please attend our marriage அல்ல.

Their marriage was a failure என்பது சரி (அதாவது ஆங்கிலப்படி). Their wedding was a failure என்பது தவறு. New York has legalised gay marriage. The wedding will be at the temple and the reception will be at a hall.

இப்படிப் பார்த்தால் wedding day என்பதுதான் சரி marriage day அல்ல.

Wedding dress, Wedding ring, newlyweds.

She got married to the man next door.

# Shimmer என்றால் என்ன?

மின்னுதல். மிருதுவான, லேசான அலைபாயும் ஒளி. The stars shimmered across the night sky. The sea shimmered in the sun light.

# Pack off என்பதற்கும் pack up என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Pack off என்றால் ஓரிடத்துக்குக் கட்டாயப்படுத்தி அனுப்புவது. The criminals were packed off to prisons.

Pack up என்றால் கிளம்புவதற்குத் தயாராவது. Our luggage is packed up for the tour.

# Palmy days என்றால்?

வளமையான நாட்கள் என்று பொருள். அதாவது days of prosperity.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com


ஆங்கிலம் அறிவோம்ஆங்கில அறிவுஆங்கில இலக்கணம்மொழி அறிவுஆங்கில வழிகாட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

the-hundred

இனி செஞ்சுரிதான்!

இணைப்பிதழ்கள்
x