Last Updated : 05 Apr, 2022 11:00 AM

 

Published : 05 Apr 2022 11:00 AM
Last Updated : 05 Apr 2022 11:00 AM

சேதி தெரியுமா?

மார்ச் 26: டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை (151 இன்னிங்ஸ்கள்) விரைவாகக் கடந்த வீரர் என்கிற சாதனையை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் படைத்தார்.

மார்ச் 27: சுவிஸ் சூப்பர் ஓபன் பாட்மிண்டன் தொடர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து பட்டம் வென்றார்.

மார்ச் 28: கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் தரன் பிள்ளை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மார்ச் 28: அமெரிக்காவில் நடைபெற்ற 94-வது ஆஸ்கர் விழாவில் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருது ‘CODA’ படத்துக்கு வழங்கப் பட்டது. சிறந்த நடிகராக ‘கிங் ரிச்சர்டு’ படத்துக்காக வில் ஸ்மித்தும் சிறந்த நடிகையாக ‘தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே’ படத்துக்காக ஜெசிகா சாஸ்டெய்னும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மார்ச் 29: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக வி. கீதா லட்சுமியைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிநியமித்தார்.

மார்ச் 29: தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில் நீர் சேமிப்பில் இந்தியாவில் முதலிடம் பிடித்த உத்தரப் பிரதேசத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறந்த மாநிலத்துக்கான விருது வழங்கினார்.

மார்ச் 29: தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும், பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நியமிக்கப் பட்டனர்.

மார்ச் 30: கத்தாரில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா அணி தகுதி பெற்றது.

மார்ச் 31: தமிழகத்தில் வன்னியர் களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்துசெய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x