Last Updated : 29 Mar, 2022 10:25 AM

 

Published : 29 Mar 2022 10:25 AM
Last Updated : 29 Mar 2022 10:25 AM

சேதி தெரியுமா?

மார்ச் 21: மணிப்பூர் முதல்வராக வீரேன் சிங் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் இல. கணேசன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மார்ச் 22: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 23: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் என். மாலா, எஸ். செளந்தர் ஆகியோரைப் புதிய நீதிபதிகளாக நியமித்துக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

மார்ச் 23: உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் குர்மிட் சிங் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மார்ச் 24: தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட பிறகு துபாயில் நடைபெறும் சர்வதேசத் தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதன்முறையாக வெளிநாடு சென்றார்.

மார்ச் 25: உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மார்ச் 25: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் போட்டியாக கர்நாடக சட்டப் பேரவையில் ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 27: நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் இந்திய அணி வெளியேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x