Published : 09 Jun 2014 12:03 PM
Last Updated : 09 Jun 2014 12:03 PM

கல்வி நிறுவனம் : பிளஸ் 2வுக்குப் பிறகு உதவும் வழிகாட்டி

இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு முடித்து, பதினோராம் வகுப்பு வரும்போதே மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் பற்றிய கவனம் வந்துவிடுகிறது. பெற்றோரும் தங்கள் குழந்தைகள் என்ன மதிப்பெண்கள் வாங்குமோ என்று பதற்றமடையத் தொடங்கி விடுகிறார்கள். மதிப்பெண்களை அதிகரிக்க உதவும் வழிகள் பற்றி ஆவலுடன் விசாரிக்கிறார்கள். பள்ளியில் படித்தது போக எஞ்சிய நேரத்தில் டியூஷன் அனுப்பி அதிகபட்ச மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை முடுக்குகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆண்டுக்கு எட்டு, ஒன்பது லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசுக் கல்லூரிகளில் மருத்துவமோ, பொறியியலோ படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. எஞ்சியோர் நிலைமை என்னவாகும்? அதுவும் கடைசி நேரத்தில் அவர்களை எந்தப் படிப்புக்கு அனுப்புவது? இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே தங்கள் தலையாய பணி என்கிறது எக்ஸ்டெல் அகாடெமி.

21 ஆண்டுகளாக முழுக்க முழுக்க பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேவையான முழு ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கிவரும் நிறுவனம் எக்ஸ்டெல் அகாடெமி. சென்னை, கோவை, திருச்சி எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதற்குக் கிளைகள் உள்ளன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர் களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்; வழிகாட்டு கின்றனர். இந்தியாவிலேயே இப்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவு தரும் நிறுவனம் இது மட்டுமே.

‘வெறுமனே மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்கச் செய்வது மட்டும் தங்கள் வேலை அல்ல என்றும் பிளஸ் 2வுக்குப் பின்னர் சேருவதற்கான அநேகப் படிப்புகள் தொடர்பான முழு வழிகாட்டுதலையும் அளிப்பதே தங்கள் வேலை என்றும்’இந்நிறுவனத்தை நடத்திவரும் சாம் ஜார்ஜ் தெரிவிக்கிறார். பிளஸ் 2 வகுப்புக்குள் மாணவர்கள் நுழையும்போது, தங்களிடம் வந்தால் அந்த மாணவர்கள் கல்லூரிப் படிப்பையும் எதிர்கால வாழ்வையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஆதரவையும் தங்கள் நிறுவனம் அளிக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் அவர். கடந்த வருடம் சுமார் 11 ஆயிரம் மாணவர்கள் இங்கு பயிற்சி எடுத்துப் பயனடைந்துள்ளனர்.

ஸ்மார்ட் பேக் என்னும் பயிற்சி திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இதன் ஒரு பகுதியான சைக்கோமெட்ரிக் தேர்வு மூலம் மாணவர்களின் விருப்பங்களையும் திறமை களையும் கண்டறிகிறார்கள். அதைப் பொறுத்து மாணவர்கள் எந்தத் துறையைத் தேர்ந் தெடுக்கலாம் என ஆலோசனை கூறுகிறார்கள். கடந்த ஆண்டு முதல் இந்நிறுவனத்தை இணையம் வழியாகவும் தொடர்புகொள்ள முடிகிறது. தமிழக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கி இருப்பதால் தமிழகத்தில் எந்த மூலையிலிருந்தும் எளிதாக மாணவர்கள் தொடர்புகொண்டு தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்கிறார்கள் என்கிறார் சாம் ஜார்ஜ்.

இந்நிறுவனம் தொடர்பான கூடுதல் விவரங்களை http://extelacademy.com/ என்னும் இவர்களது இணையதளத்தில் அறியலாம்.

எக்ஸ்டெல் அகாடெமி







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x