Published : 01 Mar 2022 11:39 AM
Last Updated : 01 Mar 2022 11:39 AM

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது

பிப்.20: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் நார்வே பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பிப்.21: இணையம் வழியாக நடைபெற்ற வரும் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது வீரர் பிரக்ஞானந்தா உலகப் புகழ்பெற்ற செஸ் சாம்பியனான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்செனைத் தோற்கடித்து சாதனை படைத்தார்.

பிப்.22: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி வென்றது.

பிப்.23: உக்ரைன் மீது போர் நடவடிக்கைகளைத் தொடங்கும்படி ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

பிப்.25: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.

பிப்.26: பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒடிஷாவின் முதல் முதல்வர் ஹேமானந்தா பிஸ்வால் (82) காலமானார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 1989 - 90, 1999 - 2000 காலகட்டத்தில் ஒடிஷா முதல்வராக இருந்தார்.

பிப்.26: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் நோக்கில் தானியங்கி வழிமுறை மூலம் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x