Last Updated : 18 Jan, 2022 02:49 PM

 

Published : 18 Jan 2022 02:49 PM
Last Updated : 18 Jan 2022 02:49 PM

சேதி தெரியுமா?

ஜன.8: 1983ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கூட்டுறவு சங்கச் சட்டத்தின் மீதான திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜன.9: போர்க் கப்பலிலிருந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன சூப்பா்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஜன.10: அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாகக் கறுப்பின பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது.

ஜன.10: சென்னையைச் சேர்ந்த 14 வயதான பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

ஜன.11: பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக விசாரிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழுவை அமைத்தது.

ஜன.11: மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட் (57) என்பவருக்குப் பொருத்தி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்தனர்.

ஜன.12: தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன, 1,450 மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்பட்டன.

ஜன.13: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக எஸ்.சோம்நாத் நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x