Last Updated : 28 Dec, 2021 12:07 PM

 

Published : 28 Dec 2021 12:07 PM
Last Updated : 28 Dec 2021 12:07 PM

சேதி தெரியுமா?

டிச.20: டெல்டா, ஒமைக்ரான் வரிசையில் ‘டெல்மைக்ரான்’ என்கிற புதிய வேற்றுருவ கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

டிச.21: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழி வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

டிச.22: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

டிச.23: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

டிச.23: ‘பேக்ஸ்லோவிட்’ என்கிற பெயரில் பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா மாத்திரையை அவசரப் பயன்பாட்டுக்கு அமெரிக்கா அங்கீகரித்தது.

டிச.23: கர்நாடக சட்டப்பேரவையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

டிச.24: வங்கதேசத் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 4 - 3 என்கிற கோல் கணக்கில் தோற்கடித்தது.

டிச.24: 15 வயதுக்குட்பட்ட ஜூனியர் அமெரிக்க ஸ்குவாஷ் ஓபன் கோப்பையில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி அனாஹட் சிங் வென்றார். இத்தொடரை வெல்லும் முதல் இந்திய பதின்பருவச் சிறுமி இவர்.

டிச.25: ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 -18 வயதுள்ள சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x