Last Updated : 14 Dec, 2021 03:08 AM

 

Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

சேதி தெரியுமா?

டிச. 6: அதிமுக ஒருங்கிணைப் பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

டிச.7: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

டிச. 8: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

டிச.8: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் அணிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிக்கிறார்.

டிச.9: பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு முன்பாக உள்ள இனிஷியல் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

டிச. 10: அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தைப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாடவைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிச.10: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் தாமதித்ததை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

டிச.11: துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் நேப்போமோனியச்சியை நடப்பு உலக சாம்பியனான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் வீழ்த்தினார். இது அவர் வெல்லும் 5-வது பட்டமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x