Last Updated : 30 Nov, 2021 03:07 AM

 

Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM

சேதி தெரியுமா?

நவ.20: அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமிக்கப்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் அவர் இருப்பார்.

நவ.21: இந்தியாவில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள தூய்மை நகரங்களின் பட்டியலில் ஐந்தாவது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்தது.

நவ.22: டெல்லியில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகத்தைத் தோற்கடித்து தமிழ்நாடு சாம்பியன் ஆனது. தொடர்ச்சியாக இரு முறை இந்தக் கோப்பையை தமிழ்நாடு வென்றுள்ளது.

நவ.23: கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் பெயரில் ‘வங்கி’ என்கிற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்-2020 செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.

நவ.24: வேற்றுருவம் அடைந்த பி.1.1.529 என்கிற கரோனா வைரஸ் தொற்று தென் ஆப்பிரிகாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நவ.25: யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் உறுப்பினராக ஆசியா-பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா தேர்வானது. இப்பொறுப்பில் நான்கு ஆண்டுகளுக்கு இந்தியா இருக்கும்.

நவ.26: சர்வதேசக் காவல் அமைப்பான ‘இன்டர்போலி’ல் ஆசிய நாடுகளின் பிரதிநிதியாக இந்தியாவின் சார்பில் சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீண் சின்ஹா தேர்வானார்.

நவ.26: கரோனா வைரஸ் தடுப்புக்கு மூக்கு வழியாக மருந்தைச் செலுத்தும் ஸ்பிரேயை இந்தியாவின் ஐ.டி.சி. நிறுவனம் தயாரித்துள்ளது.

நவ.27: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பலபரிமாண குறியீட்டு அறிக்கையில், 51.91 சதவீத ஏழை மக்களுடன் பிஹார் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x