Last Updated : 16 Nov, 2021 03:07 AM

 

Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

சேதி தெரியுமா?

நவ.7: இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமிக்கப்பட்டார்.

நவ.8: விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற வரலாற்றை வாங் யாபிங் (41) படைத்தார். விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து இச்சாதனையைப் புரிந்தார்.

நவ.8: யுனெஸ்கோ அமைப்பின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகர் இணைந்தது. உலகம் முழுவதும் 49 நகரங்கள் இப்பட்டியலில் உள்ளன.

நவ.9: குளிர்பதன பெட்டியில் வைக்க அவசியமில்லாத புதிய கரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கியுள்ளனர். அறை வெப்பநிலையில் 7 நாட்கள் வரை வைத்து இதைப் பயன்படுத்தலாம்.

நவ.9: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

நவ.9: ஈஃபிள் கோபுரம் அளவிலான ‘4660 நெரியஸ்’ என்று பெயரிடப்பட்ட குறுங்கோள் டிசம்பர் மாதத்தில் புவியை நோக்கி நகரும் என்று அமெரிக்காவின் நாசா அறிவித்தது.

நவ.10: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து இப்பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

நவ.10,11: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்தும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

நவ.11: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக பெய்த மழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடானது.

நவ. 12: சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் போலந்தில் நடைபெற்ற பிரசிடெண்ட்ஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x