Last Updated : 02 Nov, 2021 03:09 AM

 

Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM

சேதி தெரியுமா?

அக்.23: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதி சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சமூக நீதி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

அக்.23: தமிழக ரேஷன் கடைகளில் ‘கற்பகம்’ என்கிற பெயரில் பனை வெல்லம் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அக்.24: பிகாரின் ஜெய்நகர் - நேபாளம் குர்தா வரையிலான ரயில் இணைப்புப் பாதையை நேபாள அரசிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.

அக்.25: இந்திய சினிமா கலைஞர் களுக்கு வழங்கப்படும் உயரிய தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

அக்.26: ஐபிஎல் கிரிக்கெட்டில் அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களை மையமாகக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

அக்.27: நிலம் விட்டு நிலம் பாயும் ‘அக்னி-5’ என்ற ஏவுகணை ஒடிஷா மாநிலம் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

அக்.28: விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.

அக்.29: பேரியம் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகளைத் தயாரிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அக்.29: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

அக்.30: ஆண்டுதோறும் ஜூலை 18 அன்று தமிழ்நாடு தினம் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x