வெற்றி நூலகம்: எதிலும் கணிதம்

வெற்றி நூலகம்: எதிலும் கணிதம்
Updated on
1 min read

அதி நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் முதல் கணினி தொழில்நுட்பம் வரை கணிதம் இன்றியமையாதது. அன்றாட வாழ்விலும் கணிதம் பயன்படுகிறது. ஆனால் கூட்டல், கழித்தலைத் தாண்டிக் கணிதத்தை நாம் ஆழ்ந்து புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. அதற்கு நம் கல்வி அமைப்பு முதல் பல காரணங்கள் இருக்கின்றன. இத்தகையச் சூழலில் கணிதத்தின் சூட்சுமங்களை எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கும் நூல் இது.

எதிலும் கணிதம்
இரா. சிவராமன்
691 பதிப்பகம், எண்.57, பாரதீஸ்வரர் காலனி மூன்றாம் தெரு,
கோடம்பாக்கம், சென்னை 600 024. செல்: 97108 95757

ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்காற்றுவது பொருளாதாரம். அதிலும் உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்திய இளைஞர்கள் பொருளாதாரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் இந்நூலை வாசிப்பது மேலும் தெளிவு ஏற்படுத்தும்.

பொருளியல் பாடப்பொருளும் கற்பித்தல் முறைகளும்
டாக்டர் வி. நடராஜன்
சாந்தா பப்ளிஷர்ஸ்
முத்துவிழா இல்லம்
13(5), ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை,
சென்னை 600 014
போன்: 28115618, 28116018

மொழி அறிவு என்பது தேர்வில் வெற்றி பெறுவதற்கோ, வேலை பெறுவதற்கு மட்டும் தேவையானது அல்ல. மொழி வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்புடையது. பல மொழிகளை அறிந்துகொள்ளும்போது மொழி அறிவு மட்டுமல்ல நம்முடைய உலகப் பார்வையும் விரிவடையும். அந்த வகையில் ஆங்கிலத்தை எளிதாகப் பேசக் கற்றுத்தரும் நூல் இது.

ஸ்பீக் ஈஸி இங்கிலீஷ் (எளிதாக ஆங்கிலம் பேசு)
புஹாரி, ஸ்ரீதரன், நஸ்ரின், ராஜகோபாலன்
க்ரீன்ப்ரோ, F 4/226, 4வது மெயின் ரோடு,
சிட்கோ நகர், வில்லிவாக்கம்
சென்னை 600 049 - செல்: 94440 89331

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in