Last Updated : 19 Oct, 2021 03:07 AM

 

Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

சேதி தெரியுமா?

அக்.8: அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸா, ரஷ்ய பத்திரிகையாளர் திமித்ரி முராதஃப் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக்.8: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்தச் சங்கத்தில் 15 ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தார்.

அக்.9: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இது, ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என அழைக்கப்படும்.

அக்.10: 2022ஆம் ஆண்டில் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் ஹாக்கிப் போட்டியிலிருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்தது.

அக்.13: தமிழகத்தில் நவம்பர் 1 முதல்ஒன்பதாவதற்குக் கீழ் உள்ள வகுப்பு களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வாரத்தில் 7 நாட்களும் வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அக்.14: ‘டி23’ என்று பெயரிடப்பட்ட புலியை 23 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் உயிருடன் வனத்துறைப் பிடித்தது.

அக்.13: சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்திருந்தவர்களின் பட்டியலில் பீலேவின் (77 கோல்) சாதனையை இந்தியாவின் சுனில் சேத்ரி முறியடித்தார். 79 கோல் அடித்திருக்கும் சுனில் சேத்ரி 3ஆம் இடத்தில் உள்ளார்.

அக்.15: துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துக் கோப்பையை வென்றது. இது சென்னை அணி வெல்லும் 4-வது கோப்பை.

பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (அக்.8), புகழ்பெற்ற மலையாள நடிகர் நெடுமுடி வேணு (அக்.11), பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் (அக்.12) ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x