என்ன படிக்கலாம்? - பருவநிலை மாற்றத்தைத் தடுக்க

என்ன படிக்கலாம்? - பருவநிலை மாற்றத்தைத் தடுக்க
Updated on
1 min read

உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்துக்கும் புவி வெப்பமடைதலுக்கும் மாற்று இல்லையா என ஆழ்ந்து சிந்திக்கும் மாணவரா நீங்கள்? வனங்களை, காட்டு விலங்குகளைப் பாதுகாத்து, பராமரித்து சூழலியல் நண்பராகச் செயல்படும் வேலையில் சேரும் விருப்பமும் தேடலும் இருக்கிறதா? நீங்கள் படிக்க வேண்டியது பி.எஸ்.சி, எம்.எஸ்.சி காட்டியல் பட்டப்படிப்பு. பிளஸ்2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் படித்தவராக இருந்தால் 3 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பான பி.எஸ்.சி. காட்டியல் (ஃபாரெஸ்ட்ரி) படிக்கலாம்.

அதனை அடுத்து, எம்.எஸ்.சி ஃபாரெஸ்ட்ரியில் காட்டு மேலாண்மை, காட்டு பொருளாதாரம், மரங்களின் அறிவியலும் தொழில்நுட்பமும், காட்டுயிர் அறிவியல் ஆகிய சிறப்பு பாடங்களைக் கற்றுத் தேர்ச்சி அடையலாம். அடுத்து இந்திய வன சேவைக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் யுபிஎஸ்சியின் இந்திய வன சேவை தேர்வை எழுதலாம். இதன் மூலம் ஃபாரெஸ்டர், இனவரைவியலாளர் (எதனாலஜிஸ்ட்), டெண்ட்ராலஜிஸ்ட், பூச்சியியல் வல்லுநர் (எண்டமாலஜிஸ்ட்), ஃபாரெஸ்ட் ரேன்ஜ் அதிகாரி, மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஆகிய பதவிகள் உங்கள் கனவை நிஜமாக்க காத்திருக்கின்றன.

எங்கே படிக்கலாம்?

காட்டியல் படிக்க சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் சில:

# ஃபாரெஸ்ட்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டெஹ்ராடூன் (Forestry Research Institute, Dehradun) >www.fri.icfre.gov.in

# இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரெஸ்ட் மேனேஜ்மெண்ட், போபால், (Indian Institute of Forest Management Bhopal) >www.iifm.ac.in

# ஒரிசா யூனிவர்சிட்டி ஆஃப் அக்ரிகல்சர், புவனேஸ்வர் (Orissa University of Agriculture and Technology, Bhubaneshwar >www.ouat.ac.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in