Published : 18 Mar 2016 10:34 am

Updated : 18 Mar 2016 10:35 am

 

Published : 18 Mar 2016 10:34 AM
Last Updated : 18 Mar 2016 10:35 AM

கோலிவுட் கிச்சடி: அஜித் 57

57

முதல் கூட்டணி!

அருண் விஜய் சொந்தப் பட நிறுவனம் தொடங்கிய பிறகு தனது கூட்டணியை இயக்குநர் அறிவழகனுடன் உறுதிப்படுத்தியிருக்கிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்துக்கு ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.வைரமுத்துவின் பாராட்டு!

சின்னச் சின்னப் படங்களில் நடித்த பின் சர்ச்சை இயக்குநர் சாமியின் ‘கங்காரு’ படத்தில் பாசமான தங்கையாக கவனிக்க வைத்தவர் ஸ்ரீப்ரியங்கா. நன்கு தமிழ் பேசத் தெரிந்த இந்தப் பாண்டிச்சேரி பெண்ணுக்கு தற்போது ‘கோடை மழை’ படத்தின் மூலம் பிரேக் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்துக்குப் பாடல்கள் எழுதியிருப்பவர் வைரமுத்து. “படம் பார்த்தேன். சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறாய்” என்று கவிஞர் பாராட்டியதைச் சொல்லி நெகிழ்ந்துபோகும் இவர், அவரது கவிதைகளுக்கு நான் ரசிகை என்கிறார்.ஒரு நாயகன்.. மூன்று நாயகிகள்!

தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து ஒரு மசாலா வெற்றியைக் கொடுத்தே தீருவது என்ற முடிவுடன் இயக்குநர், நடிகர் எம். சசிகுமார் ஒரேமூச்சில் நடித்து முடித்திருக்கும் படம் ‘வெற்றிவேல்’. வசந்தமணி இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில், சசிக்கு மியா ஜார்ஜ், நிகிலா, வர்ஷா என ஒன்றுக்கு மூன்று கதாநாயகிகள். காதலையும் குடும்பத்தையும் மையமாகக் கொண்ட ஆக் ஷன் படமான இதை பள்ளித் தேர்வுகள் முடிந்த கையோடு வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.இசையை வாங்கிய ஈராஸ்

‘மசாலா படம்’, ‘144’ என்று நல்ல கதைகளைத் தேடித் தேடி நடித்தாலும் ‘கலகலப்பு’ படத்துக்குப் பிறகு சரியான வெற்றி அமையாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் மிர்ச்சி சிவா. அவரைத் தூக்கிப்பிடித்து நிறுத்தப்போகிற படமாக உருவாகி வருகிறதாம் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம். நகைச்சுவை, ஆக்‌ஷன், இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தரும் இந்தப் படம் மதுரை மாநகரின் நிஜமான மண்வாசனையுடன் தயாராகியிருக்கிறாம். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நைனா சர்வார் அறிமுகாகிறார். ‘மூடர் கூடம்’ நவீன் தற்போது இயக்கிவரும் படத்திலும் இவர்தான் கதாநாயகி. ரகுநந்தன் இசையில் திரைவண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கிறது ஈராஸ் நிறுவனம்.இயக்குநரின் காதல்

சர்ச்சைக்குரிய கதைகளைத் துணிவுடன் திரைப்படமாக்கி, தணிக்கைக்குழுவுடன் மனம் தளராமல் போராடுவதில் சளைக்காதவர் இயக்குநர் வேலு பிரபாகரன். தற்போது இவர் இயக்கியிருக்கும் ‘ஒரு இயக்குநரின் காதல்’ படமும் ஏடாகூடக் கதைதானாம். இம்முறை தணிக்கைக் குழுவிடமிருந்து தப்பப் போதுமான உத்திகளைக் கையாண்டிருக்கிறாராம் இயக்குநர்.கமல் தரும் நகைச்சுவை விருந்து!

மௌலி இயக்கத்தில், கிரேசி மோகன் வசனத்தில் கமல் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்’ பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. மூன்றே மாதத்தில் முழுநீள நகைச்சுவைப் படத் கொடுப்பதுதான் திட்டம். படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.அஜித் 57

கடந்த தீபாவளிக்கு வெளியான ‘வேதாளம்’ படத்தைத் தொடர்ந்து உடனடியாகப் படங்கள் எதிலும் நடிக்காத அஜித், அறுவை சிகிச்சை செய்துகொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்துவருகிறார். தற்போது உடல்நிலை சரியாகிவிட்டதால் தனது 57-வது படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பை அடுத்தமாதம் வெளியிட இருக்கிறாராம். ‘சிறுத்தை’ படத்தின் இயக்குநர் சிவா படத்தை இயக்கவிருக்கிறார். இசை அனிருத், படத்தொகுப்பு பிரவீன் கே.எல், ஒளிப்பதிவு வெற்றி ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கிறார்களாம்.கெளதம் மேனனின் தேர்வு

‘கொடி’ படத்தில் நடித்து முடிவித்துவிட்ட தனுஷ், தற்போது கௌதம் மேனனின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ‘ஒரு பக்க கதை’ படத்தில் நாயகியாக நடித்துவரும் மேகாவைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர்.மீண்டும் விஜயலட்சுமி

உதவி இயக்குநரைத் திருமணம் செய்துகொண்டு திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார் ‘சென்னை -28’ பட நாயகியான விஜயலட்சுமி. தற்போது அமலா பால் போலவே திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ‘சென்னை- 28’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜெய், பிரேம்ஜி, ‘மிர்ச்சி’ சிவா, நிதின் சத்யா ஆகியோருடன் நடிக்கிறார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கோலிவுட் கிச்சடிகோலிவுட் செய்திகள்தமிழ் சினிமா அப்டேட்ஸ்ரீபிரியங்காகோடைமழைமிர்ச்சி சிவா படம்அஜித் 57எனை நோக்கி பாயும் தோட்டாகவுதம் மேனன் படம்அருண் விஜய் படம்ஈராஸ் இசைகமல் நகைச்சுவைப் படம்வெற்றிவேல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author