Last Updated : 21 Sep, 2021 03:18 AM

 

Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

சேதி தெரியுமா?

செப்.9: பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (87) உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தமிழ்நாடு சட்ட மேலவையின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.

செப்.9: ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இந்திய ரயில்வே இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்.10: நெல்லையில் ரூ.15 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். பொருநை ஆறு (தாமிரபரணி) நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.

செப்.13: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தீர்மானம் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

செப்.13: குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்றார். முன்னதாக விஜய் ரூபானி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

செப்.13: தமிழகத்தில் காலியாக உள்ள ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்.6 மற்றும் அக்.9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

செப்.13: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் ரஷ்யாவின் டேனி மெட்வடேவ், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

செப்.16: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

செப்.17: தமிழகத்தில் சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

செப்.18: தமிழகத்தின் 26-ஆவதுஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x