Published : 13 Sep 2021 06:22 AM
Last Updated : 13 Sep 2021 06:22 AM

முதலீட்டின் லாபத்தை அதிகரிக்கும் சூட்சமம்

நீங்கள் ஒரு பெருந்தொகையை முதலீடு செய்வதற்காக வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுடைய முதலீட்டின் மீதான லாபத்தை அதிகரிக்கும் சூட்சமம் இதோ.

இது பெரும்பாலும் எஸ்டிபி எனப்படுகிற முறையான பரிமாற்ற திட்டத்தின் மூலம் உங்களிடமுள்ள பெருந்தொகையை எப்படி முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. அதாவது ஒரு பெருந்தொகையை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கடன் திட்டங்கள் (ஆதாரத் திட்டம்) போன்ற முதலீட்டுத் திட்டத்திலும், கணிசமான முதலீட்டை சீரான முறையில் பங்கு திட்டங்களிலும் (இலக்கு திட்டம்) முதலீடு செய்வதுதான் எஸ்டிபி என்ற முறையான பரிமாற்ற திட்டமாகும். ஆயினும் மிகவும் புத்திசாலி முதலீட்டாளர் இத்தகைய முதலீட்டை மேலும் சாதுர்யமாகக் கையாள்வார். முதலீட்டுத் திட்டம் கவர்ச்சியான விலையில் இருக்கும்போது அதிக முதலீட்டையும், விலை உயர்வாக இருக்கும் போது குறைவான முதலீட்டையும் மேற்கொள்வார்.

ஆனால் பெரும்பான்மையான முதலீட்டாளர்களுக்கு இதைக் கையாள்வது என்பது இரண்டு மடங்கு சவால். முதலீட்டு தொகையையும், முதலீட்டு காலத்தையும் முடிவு செய்வது எப்படி? முதலீட்டுத் திட்டத்தின் சந்தை விலை குறைந்த மதிப்பில் இருக்கிறதா உயர்வாக இருக்கிறதா?

இந்த கேள்விகள் எழுப்புகிற ஊசலாட்டமனநிலையை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே ஐசிஐசிஐ புரூடென்ஷியலின் பூஸ்டர் எஸ்டிபி திட்டம். பாரம்பரிய எஸ்டிபி முறையில் முதலீட்டுத் தொகையும் முதலீட்டு காலமும் நிரந்தரமானது. ஆனால் இந்தத் திட்டத்தில் இவை சந்தைச் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியதாக இருக்கும்.

பூஸ்டர் எஸ்டிபி என்பது என்ன?

பூஸ்டர் எஸ்டிபி திட்டத்தின் முக்கிய நோக்கம் முதலீட்டாளர்களுக்கு சந்தையில் விலை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்டுகளை சேர்க்கவும், விலை உயர்வாக இருக்கும்போது குறைவாக முதலீடு செய்யவும் உதவுவதுதான். உதாரணமாக ஒரு முதலீட்டாளர் மாதம் ரூ.10 ஆயிரம் அடிப்படை எஸ்டிபி தொகையைத் தேர்ந்தெடுப்பதாகக் கொண்டால், சந்தை சூழல் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து எஸ்டிபி தொகையானது தேர்ந்தெடுத்த அடிப்படை தொகையில் 0.1-5 மடங்கு என்ற வரம்பில் முடிவுகள் எடுக்கப்படும். அதாவது ரூ.1000 முதல் ரூ.50 ஆயிரம் வரை என எஸ்டிபி முதலீடு மேற்கொள்ளப்படும். மேலும் மாறக்கூடிய முதலீட்டு காலத்தின் சக்தியானது சந்தை உருவாக்கித்தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் முதலீட்டுத் தொகையைக் கையாளும்.

இதை எளிமையாகப் புரிந்துகொள்ள முதலீட்டாளர்கள் A & Bயை கவனிக்கவும்.

முதலீட்டாளர் A ஜனவரி 2019ல் ரூ. 12 லட்சத்தை ஆதாரத் திட்டத்தில் மொத்தமாக முதலீடுசெய்கிறார். பாரம்பரிய எஸ்டிபி முறையில் மாதம் ரூ.1 லட்சத்தை பங்கு இலக்கு திட்டத்தில் ஒரு வருட காலத்துக்கு முதலீடு செய்கிறார். இந்த வகையில் அவருடைய முதலீட்டு மதிப்பானது ஜூன் 2021ல் ரூ. 17,34,527 ஆக இருக்கும். இதன் சிஏஜிஆர் மதிப்பு 15.9 சதவீதம்.

முதலீட்டாளர் B ரூ. 12 லட்சத்தை ஆதாரத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்கிறார். மேலும் பூஸ்டர் எஸ்டிபி முறையில் பங்கு திட்டத்தில் சீரான முறையில் முதலீடு செய்துவருகிறார். இந்த வகையில் அவருடைய முதலீட்டு மதிப்பானது ஜூன் 2021ல் ரூ. 21,56,355 ஆக இருக்கும். இதன் சிஏஜிஆர் மதிப்பு 26.4 சதவீதம்.

இதிலிருந்து பூஸ்டர் எஸ்டிபி முறையில் மாறக்கூடிய முதலீட்டுத் தொகை மற்றும் முதலீட்டு காலம் அடிப்படையிலான முடிவுகள் ஒட்டுமொத்தமாக போர்ட்ஃபோலியோவின் வருமானத்தை அதிகரிப்பதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

-வி.திருமாவளவன்,
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x