Last Updated : 18 Dec, 2015 12:09 PM

 

Published : 18 Dec 2015 12:09 PM
Last Updated : 18 Dec 2015 12:09 PM

வாய்ப்பை இழந்த குரங்கு!

‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்பட வரிசையில் ஏழாவது பாகமாக வரவிருக்கும் படம் ‘ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேக்கன்ஸ்’ வரும் கிறிஸ்துமஸ் அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட்கள் விற்பனை முன்பதிவிலேயே நூறு மில்லியன் டாலர்களைத் தொட்டுவிட்டது. படத்தின் தொடக்க வார வசூல், ‘ஜூராசிக் பார்க்’ திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துவிடும் என்று கணிக்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள். இதன் மூலம் உலகம் முழுவதும் ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்பட வரிசைக்கு ரசிகர்கள் மத்தியில் தொடரும் செல்வாக்கு மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

காமிக்ஸ் அல்ல கற்பனை

வழக்கமாக ஹாலிவுட்டில் இதுபோன்ற தொடர் சினிமாக் கதைகளெல்லாம் புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்கள், நாவல்கள் மற்றும் தொலைக்காட்சிக் கதைத்தொடர்களிலிருந்துதான் திரைக்கதைகளாக உருவாகும். ஆனால், ஸ்டார் வார்ஸ் திரைக்கதை முற்று முழுமையாக இயக்குநர் ஜார்ஜ் லூகாஸின் கற்பனையில் உருவானது. 1977-ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டே வரும் இன்னொரு சினிமாவை ஹாலிவுட் தரவேயில்லை.

‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காகத் திரையரங்குகளுக்கு வெளியே முந்தின இரவே தங்கிப் பார்த்துச் செல்லும் ரசிகர்கள் உண்டு. முதல் படத்தின் செய்தி வெளியான நாளிலிருந்து இன்றுவரை விடாமல் ஸ்டார் வார்ஸ் வரிசையைப் பார்த்துவரும் ரசிகர்கள் உண்டு. ஸ்டார் வார்ஸ் பட வரிசையின் முதல் படம் வெளியான காலகட்டத்தில் பிறக்காத தலைமுறையினரும் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்துக்கு இன்று ரசிகர்களாக உள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட திரைக்கதை

ஆனால் இத்தனை புகழ்பெற்ற ஜார்ஜ் லூகாஸின் ஸ்டார் வார்ஸ் திரைக்கதையை எழுதி முடித்தபோது அந்தப் படத்துக்கு ஆகும் பெரும்பொருட்செலவை ஏற்பதற்கு ஹாலிவுட்டில் எந்தத் தயாரிப்பு நிறுவனமும் தயாராகவேயில்லை. ஏனெனில் ஹாலிவுட்டில் பெரும் வணிக வெற்றி பெற்றதாக இன்று கருதப்படும் ஸ்டேன்லி குப்ரிக் இயக்கிய ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ என்ற அறிவியல் புனைவு திரைப்படம் போட்ட முதலீட்டைத் திரும்ப எடுப்பதற்கு ஏழு ஆண்டுகள் பிடித்தன. இதனால் அறிவியல் புனைவுத் திரைக்கதைகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

ஜார்ஜ் லூகாஸுக்கோ ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ படத்தைவிடக் கூடுதலான தயாரிப்புச் செலவு தேவையாக இருந்தது. ஜார்ஜ் லூகாஸின் முந்தைய படமான ‘அமெரிக்கன் கிராஃபிட்டி’ திரைப்படத்தைப் பார்த்திருந்த ட்வண்டியத் செஞ்சுரி பாக்சின் தலைவரான ஆலன் லாட் ஜூனியர் அதிர்ஷ்டவசமாக எட்டு மில்லியன் டாலர் பணத்தை ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் பட்ஜெட்டில் ஒரு பகுதியாக முதலீடு செய்தார். மேலும், 3 மில்லியன் டாலர் செலவிட்டே முதல் பாகத்தை முடித்தார் லூகாஸ்.

வாய்ப்பை இழந்த குரங்கு

ஸ்டார் வார்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரமான யோதாவின் கதாபாத்திரத்தில், ஒரு உண்மையான குரங்கை நடிக்க வைப்பதற்கே ஜார்ஜ் லூகாஸ் திட்டமிட்டிருந்தார். குரங்குக்கு ஒரு முதியவரின் முகச்சாயலுடனான முகமூடியையும் தயாரித்திருந்தார். குரங்குக்கு உடைகளும் அளக்கப்பட்டுத் தயாராகத் தொடங்கியிருந்தன. குரங்கை யோதாவாக்கினால் தனது முகமூடியை உருவுவதிலேயே படப்பிடிப்பு முழுவதும் கவனத்தைச் செலுத்துமென்று லூகாசுக்கு நெருக்கமான சினிமா டெக்னீஷியன் ஒருவர் ஆலோசனை கூற, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்படித்தான் ஸ்டார் வார்ஸில் நாம் மிகவும் ரசிக்கும் கதாபாத்திரமான யோதா உருமாற்றம் அடைந்தது.

ஜார்ஜ் லூகாசின் பிரம்மாண்ட கற்பனையில் உருவான ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசையின் ஏழாவது படைப்பான ‘தி போர்ஸ் அவேகன்ஸ்’ படத்தை இயக்கியிருப்பவர் ஜே ஜே ப்ராம்ஸ். ஸ்டார் வார்ஸின் முதல் படம் வந்தபோது ஜே ஜே ப்ராம்ஸுக்கு 11 வயது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x