Published : 14 May 2021 10:16 am

Updated : 14 May 2021 10:16 am

 

Published : 14 May 2021 10:16 AM
Last Updated : 14 May 2021 10:16 AM

கூட்டாஞ்சோறு! - தவறவிட்ட சிம்புவும் த்ரிஷாவும் 

simbu-and-trisha

இயக்குநர் கே.வி.ஆனந்த்தின் திடீர் மறைவு கோலிவுட்டில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. அவருடன் நெருங்கிப் பழகிய திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். நடிகர் சிம்பு, ‘கோ’ திரைப்படத்தில் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது, ஆனால் முடியாமல் போய்விட்டது’ என ஏக்கத்துடன் இரங்கல் குறிப்பு வெளியிட்டிருந்தார். சிம்புவுக்கு பதிலாக ஜீவா நடித்து அந்தப் படம் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது, ‘கோ' படத்தின் சில காட்சிகளில் சிம்பு நடித்திருந்த ஒளிப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. கூடவே 'ஆடுகளம்' படத்தின் சில காட்சிகளில் நடித்துவிட்டுப் பின்னர் அதிலிருந்து விலகிய த்ரிஷாவின் ஒளிப்படங்களும் சிம்புவின் 'கோ' ஒளிப்படங்களுடன் போட்டிபோட்டு பகிரப்பட்டு வருகின்றன.


பிரபாஸ் பட ‘செட்’ தானம்!

‘சாஹோ' படத்துக்குப் பின் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்து முடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. காதல் கதையான இதன் படப்பிடிப்பை இத்தாலியிலும் நடத்தினார்கள். கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை மருத்துவமனையில் பார்த்து பிரபாஸ் காதலிப்பதுபோல் கதை செல்கிறதாம். இதற்காக 50 தனிப்படுக்கைகள் மற்றும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட மருத்துவமனை ‘செட்’டினை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளும்படி தானமாகக் கொடுத்திருக்கிறது படக்குழு.

வந்த வேகத்தில் இரண்டு!

‘இதுதாண்டா போலீஸ்’ படப் புகழ் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. இவர், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்து வரும் 'அன்பறிவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முதல் படம் தயாரிப்பில் இருக்கும்போதே ஷிவானிக்கு இரண்டாவது படம் கிடைத்துவிட்டது. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துவரும் 'ஆர்டிகிள் 15'
இந்திப் படத்தின் தமிழ் மறுஆக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷிவானி.



கூட்டாஞ்சோறுசிம்புத்ரிஷாகே.வி.ஆனந்த்கோபிரபாஸ்செட் தானம்அன்பறிவுSimbu and Trisha

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

week-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x