Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

உலகெங்கும் ராம நாமம் உரைக்கும் ராமநவமி

ராமனை வணங்குவதில் முக்கியப் பங்கு அவனை பாடித்தொழுவதே என்று தியாகராஜர் போன்றோர் நம் செவிக்கு சுவையாக பலப்பல பாடல்கள் தந்து ராம பக்தியை ஒரு சாம்ராஜ்யம் ஆகவே நமக்குத் தந்து சென்றுள்ளனர்.

பெருந்தொற்று காலகட்டத்தில் அனைத்து மக்களும் சேர்ந்து அமர்ந்து இசையை ஓர் இடத்தில் கேட்கமுடியாத சூழலில், முகநூல் வழியாக மணி கிருஷ்ணசாமி அகாடமி என்ற பக்கத்தில், இரண்டு மணி நேரம் நம்மை ராமபக்தி தளும்ப ஒரு நிகழ்ச்சியை உலக மக்கள் பார்த்து அனுபவிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சி நாயகனாக சங்கீத சாம்ராட் பட்டம் பெற்ற சித்திர வீணை வித்தகர் ரவி கிரணோடு சேர்ந்து, 100 இளம் மற்றும் பெரிய பாடகர்கள்/ வீணை, மேண்டலின், மிருதங்கக் கலைஞர்கள் எனச் சேரந்து நடத்திய பஜனை சம்பிரதாய நிகழ்ச்சி ராமரசம் என்பதை ராமநவமியை முன்னிட்டு உணரச்செய்தது. பக்திச்சுவை நிறைந்த “ராமச்சந்திர ராமச்சந்திர”, ஹமிர்கல்யணி ராகத்தில் அமைந்த பாடலோடு தொடங்கியது.

மொத்தம் ஏழு பாடல்களை நூறு கலைஞர்களும் பாட, அதில் நிறைந்திருந்த இளம் கலைஞர்களின் ராமபக்தியை கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த வித்தகர்கள் வயது சராசரியாக இருபத்தி ஐந்துதான் இருக்கும். ‘பஜன சாகர்’ என பெயரிட்டு இந்தப் பாடல்களை இயற்றியவர் சித்திர வீணை ரவி கிரண். அவர் அந்தப் பாடல்களில் ராமனின் நாமம், ராமனின் கதைகள், மற்றும் அபரிமிதமான ராகங்களோடு செவிக்கு விருந்தை அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x