Published : 07 Dec 2015 11:34 AM
Last Updated : 07 Dec 2015 11:34 AM

நேரம் சரியில்லை

நேரம் காட்டும் கடிகாரத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேரம் சரியில்லை போலும். 15 ஆண்டுகளாக இந்தியாவில் கடை விரித்து ஷாருக்கானையும், ரண்பீர் கபூரையும் விளம்பர மாடலாகக் கொண்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை விற்பனை செய்து வந்த டாக் ஹூயர் கைக்கடிகாரங்களைத் தயாரித்த எல்விஎம்ஹெச் நிறுவனம் தனது இந்திய விற்பனைப் பிரிவை மூட முடிவு செய்துள்ளது.

அனேகமாக புத்தாண்டுக்குள் இந்தியாவில் உள்ள விற்பனையகங் களை முற்றிலுமாக மூடிவிட நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கடிகாரங்கள் என்றாலே ஸ்விட்சர் லாந்து கடிகாரங்கள்தான் சர்வதேச அளவில் பிரபலமானவை. 1860ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கைக்கடிகாரங்கள் மட்டுமின்றி குளிர் கண்ணாடி, மொபைல்போன், ஃபேஷன் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான டைமர்கள், கப்பல் மற்றும் விமானங்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் பயன்படுத்தும் கடிகாரங்களையும் (ஸ்டாப் வாட்ச்) இந்நிறுவனம் தயாரிக்கிறது.

உலக அளவில் இந்நிறுவன கடிகாரங்கள் இல்லாத நாடே இல்லை எனும் அளவுக்கு நூறாண்டுகளுக்கும் மேலாக உயர் ரக கடிகார பிரிவில் தனக்கென பிரத்யேக வாடிக்கையாளர் கள் வட்டத்தை உருவாக்கி வைத் துள்ளது இந்த பிராண்ட்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற் காக அரசு எடுக்கும் நடவடிக்கை களால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக விலை மதிப்புள்ள இத்தகைய கடிகாரங்களை வாங்கும்போது கூடவே வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு தேடி வந்துவிடுவரோ என்ற அச்சம் காரணமாக வாங்கும் சக்தியிருந்தும், இத்தகைய கடிகாரங்கள் மீது ஆசையிருந்தும் அதை பலரும் அடக்கிக் கொண்டுள்ளனர். நிறு வனத்தின் விற்பனையகங்களில் நிரந்த கணக்கு எண் (பான்) விவரம் கேட்கப்படுவதில்லை என்றாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தயக்கம் நிலவுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு இதேபோல ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கோரம் (Corum) கைக்கடிகாரங்கள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் விற்பனைய கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்நிறுவனமும் தற்போது இந்தியாவிலிருந்து வெளி யேற முடிவு செய்துள்ளது.

உள்ளூரில் விற்பனை பிரதிநிதி மூலம் தங்களது தயாரிப்புகளை விற் பனை செய்ய இவ்விரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

இதற்கிடையே பாரீஸைச் சேர்ந்த உயர் ரக பேனாக்களைத் தயாரிக்கும் எஸ் டி டூபான்ட் நிறுவனம் டெல்லியில் தனது விற்பனையகத்தைத் மூட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பேனா வின் விலை ரூ. 7.5 லட்சமாகும்.

அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. ஒற்றை இலச்சினை (Single Branded) தயாரிப்பு விற்பனை விதிமுறைகளை மேலும் தளர்த்தியுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா விலிருந்து வெளியேறுவது இந்தியா வுக்கு நேரம் சரியில்லையா அல்லது அந்த நிறுவனங்களுக்கு நேரம் சரியில் லையா என்பது காலத்தின் கையில்.

டெயில் பீஸ்

ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட மின்னணு தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரித்து வரும் நிலையில் கடிகார உற்பத்தியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள டாக் ஹூயர் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச்சுகளை அறிமுகப்படுத்தி யுள்ளது. ஆண்ட்ராய்ட் தளத் தில் இயங்கும் இந்த கைக்கடிகா ரங்கள் கரேரா என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளன. இவற்றை வாங்க விரும்பினால் கூட இனி தனியார் விற்பனையகங்கள் மூலமாகத்தான் வாங்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x